கோ-பேண்டவன விட்டுட்டு பீய வெட்ற மாதிரி………

Posted in ஈழம் அடையாளங்களுடன் , , , , , , , on April 24, 2011 by குட்டகொழப்பி

கோ – விமர்சனம்

நேற்று (23.04.11) படத்திற்குப் போகலாம் என்று என் அறை நண்பன் கூப்பிட, அன்று ரிலீஸாகியிருந்த கோ படத்திற்குப் போகலாம் என்று சொன்ன நண்பனுடன், அன்றிரவே படம் பார்க்கக் கிளம்பினேன்.
கவனிக்க…….
கதை வசனம் – க்ரைம் சுபா (திரில்லர் நாவல் எழுதும் சுரேஷ்-பாலகிருஷ்ணன்)
இயக்கம் – கே.வி.ஆனந்த் (கனா கண்டேன், அயன் படம் எடுத்த மாபெரும் இயக்குனர்)

நாய்களா (கே.வி.ஆனந்த், சுரேஷ், பாலகிருஷ்ணன்) ஒங்க அரிப்புக்கு நக்ஸல் தான் கெடச்சாங்களா …நாட்டுல படம் எடுக்க கண்ட கருமங்கள் இருக்க இவர்கள் உங்க வாயிக்கு அவல் ஆகிட்டாங்க. பேண்டவன விட்டுட்டு பீய வெட்ற கதையா எவனோ திருடுறான், எவனோ பாம் வெக்கிறான், எவனோ கொல பன்றான், ஆனா நாட்ல எது நடந்தாலும் அதுக்கு நக்ஸல் தான் காரணமா?அரசு தான் தீவிரமாக இது போன்ற விஷம வேலைகளை செய்கிறது என்றால்,இவனுங்களும் சேர்ந்து…… நல்லா இருக்குதுடா ஒங்க கத………

சொல்லப்போனால் இன்னும் பல சொல்லி இவர்களைத் திட்டித் தீர்க்கலாம் என்றுதான் ஆசை, ஏனென்றால் திட்டுவதற்கு மேல் அப்படத்தில் ஒன்றுமில்லை, அனால் படிப்பவர்களுக்கு சலிப்பு தட்டக் கூடாதல்லவா , அதுமட்டுமல்லாமல் தர்க்க ரீதியில் விமர்சனம் செய்யும் பொழுதுதான் மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதாலேயே கடுமையான வார்த்தைகளைத் தவிர்க்க விரும்புகிறேன், மீறி வந்து விட்டால் அது உண்மையான கோபத்தின் வெளிப்பாடே என புரிந்துகொள்ளவும்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு வங்கி கொள்ளையடிக்கப்படுகிறது, முகமூடிகளுடன் வெளியே வரும் கொள்ளயர்களை ஒரு தின பத்திரிக்கை போட்டோகாரனான ஜீரோ பார்த்துவிடுகிறார், அவர்கள் வேனில் ஏறி தப்பிக்கும் பொழுது வித விதமாக (பீட்டர் ஹெயின் உதவியால்) பறந்து பறந்து படமெடுத்துத் தள்ளுகிறார் ஜீரோ, இதை அவர்கள் பார்த்து ஜீரோவைப் பிடிக்க ச்சேசிங் செய்து வர….பலவித தில்லாலங்கடி வேலை செய்து தப்பிக்கிறார் ஜீரோ. தான் எடுத்த போட்டொக்களை போலிஸ் மாமாக்களிடம் காண்பிக்க …ஆஹா இதெல்லாம் நக்சல் வேலப்பா என அவரும் ஆரூடம் சொல்ல, ஹ்ம்ம்… இந்த நக்சல் கோயம்புத்தூருல கொண்டு வெச்சவன், இவன் தருமபுரில குண்டு வெச்சவன் என ஒவ்வொரு தீவிரவாதிகளையும் அடையாளம் காண்பிக்கிறார் போலிஸ் மாமா.

இதனால் ஜீரோவுக்கு நக்சல் வெறுப்பு வருது…கூடவே பாக்குற பாமரனுக்கும் வெறுப்பு வரனுமே…ச்சே நக்ஸல்னாலே இப்படித்தான் போல என நினைக்கனுமே… அதுக்காகத்தான படம் எடுத்ததே…….. இந்த தேசபக்தி கோமானுங்க இருக்கானுங்களே!!!

சரிதான் நக்சல் தான் ஒங்க போதைக்கு ஊற்கா போல என நினைத்துக்கொண்டே படம் பார்க்க…..மேலும் மேலும் அதிகமா தேசபத்தி போத ஏற….அதிகமா ஊற்கா தொட்டுக்க ஆரம்பிக்கிறான் நம்ம தேசபத்திகாரன்…..அத பாக்குற நமக்கும் ஜிவ்வுனு கோவம் ஏறுது……பாமரனுக்கும் தேசபத்தி போத ஏறுது……கூடவே ஹீரோயினு போர் நடந்தப்ப ஈழம் பத்தி கவர் ஸ்டோரி எழுதினவங்கலாம்….. இது ஒரு முற்போக்கு போதை போல ( படம் எடுத்தவங்களுக்கும் ஈழம் பற்றியான செய்தி தெரியுதுள்ளதாம்-ஈழம் மற்றொரு ஊறுகாய்)

அப்புறம் இவனுங்க எப்படி லாவகமா சரக்கடிச்சுகினே ஊற்கா தொட்டுக்கிறானுங்கன்னு பாப்போம்

அடுத்ததா நாட்ட காப்பாத்த, சிறகுகள் என்கிற இளைஞர்கள் இயக்கம் ஆரம்பித்து பிழைப்புவாதிகளாக இருக்கும் இளைஞர்களை தேர்தலில் நிற்க வைத்து செயிக்கிறாரு நம்ம செகண்டு ஹீரோ….ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு இடையில், அவர்கள் கொடுக்கும் இன்னல்களுக்கிடையில் (எறிகற குடிசையில் பொம்பளையையும், ஒரு குழந்தையையும் காப்பாத்துறது, சிறகுகள் நடத்துற பொதுக்கூட்ட மேடையில பாம் வெக்கிறது- அங்க ஜீரோவோட பெண் பிரண்டு அப்புறம் 30 க்கும் மேலான பொதுமக்கள் சாகிறது, மாற்று கட்சியினர் சிறகுகள் குழிவினரை அடித்து நொறுக்குவது – இது எல்லாத்தையும் நம்ம ஜீரோ படம் புடிச்சு சிறகுகளுக்கு பப்ளிக்குட்டி தேடி கொடுக்கிறது,அதனால தேர்தல்ல சிறகுகளுக்கு அதிக ஓட்டு உழுதாம் ) செகண்டு ஹீரோ ஜெயிச்சு சி.எம் ஆகுறாரு. உடனே 20 நக்சல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குறாரு நம்ம சி.எம். இப்பொதான் நம்ம ஜீரோ களத்துக்கு வந்து எல்லா உண்மையையும் கண்டுபுடிக்கிறாரு.

அதாவது….. நக்சல் தீவிரவாதிங்கல்லாம் சேந்து நம்ம செகண்டு ஹிரோ சி.எம் ஆக செலவு செஞ்சு படிக்க வெக்கிறாங்க, சிறகுகள்ல கொஞ்சம் பேரு தேர்தல்ல ஜெயிச்சு நக்சலுக்கு ஆதரவா குரல் கொடுக்க, போராட, இந்த நக்சல் கும்பல் பல தில்லாலங்கடி வேல செய்யுது. (அந்த தீய வெச்சது குடிசைல இருந்த நக்சல் பெண்தானாம், நக்சல் கும்பல் தான் சிறகுகள் கும்பல ஓட ஒட விரட்டி அடிச்சுதாம்,பொதுக்கூட்ட மேடைல அனுதாப ஓட்டு வாங்க செகண்ட் ஹீரோவோட சேந்து பாம் வெச்சதும் இவுங்கதானாம்)
இதெல்லாம் தெரிஞ்சவுடனே நம்ம ஜீரோ அந்த நக்சல் கிட்ட போய் ஏன்டா நீங்கல்லாம் ட்ரெயின்ல பாம்வக்கிறது, திருடுறது இப்படில்லாம் பன்றீங்க என கோபம் கொப்பளிக்க கேட்க, நீங்கல்லாம் ஒடுக்கப்பட்டவங்களா இருந்தா உங்களுக்கு எங்க கஷ்டம் தெரியும்டா என நக்சல் சொல்ல, போதை தலைக்கேறிய நம்ம ஜீரோ, என்னங்கடா? வெளையாடுரீங்களா,அரசியல் வாதிங்க ஊழல்,லஞ்சம்னு சொல்ற மாதிரி நீங்க ஒடுக்கப்பட்டவனுங்கன்னு சொல்லி ஏமாத்துறிங்களா என தேசபத்தி போதையேறி நக்சல் தீவிரவாதியை வாங்கு வாங்குவென வாங்குகிறார். சரியாக இங்கதான் நம்ம பாமரனின் சாதாரண நக்சல் வெருப்புக்கு மேலும் லிட்டர் கணக்கில் எண்ணெய் ஊற்றி, சாதாரணமாக எறியும் கொல்லியை பெருந்தீயாக்குகிறான் டைரக்டர்.

நக்சல்களின் உண்மையான தியாகத்தை மறைத்தும், அவர்களின் அர்ப்பணிப்பையும் பார்த்து எள்ளிநகையாடும் இப்படம் புரட்சியாளர்களின் உணர்வுகளைக் காதல் மூலம் மாற்றலாம் என கேலி செய்த அல்லது அவர்களின் உண்மையான போராட்டத்தை மறைத்து ஒரு பெண்ணிற்காக உயிரை விடக்கூடியவர்களாக சித்தறித்து எடுக்கப்பட்ட கழிசடைகளான உயிரே, ராவணன் படத்தைவிடவும் மிக மோசமான முன்னுதாரணத்தைக் கொடுக்கிறது இப்படம்.கண்ட கண்ட மூன்றாம் தரப்படங்களை எடுத்து அலுத்துவிட்ட இவர்களுக்கு முற்போக்கு போதை ஏறி பேராண்மை, கோ போன்ற குப்பைக்கூளங்களை எடுக்க ஆசைவந்ததன் விளைவே இப்படம்.

நக்சல் புரட்சியாளர்களை நாட்டின் கொடூரமான, மனிதத் தன்மையில்லாத, எந்த மொராலிட்டியும் இல்லாமல் திரியும் லும்பன் கூட்டமாக காண்பிக்கிறது இப்படம்.பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகு, சமீப காலங்களில் அவர்களுக்கென உருவாகியிருக்கும் சில ஆதரவு சக்திகளை மடை மாற்றவும், பாமரர்களுக்கு அடி மனதில் நக்சல் எதிர்ப்பு வெறியை ஊட்டவும் திட்டமிட்டே எடுக்கப்பட்ட படம் இது. இன்னும் சொல்லப்போனால் இது உளவுத்துறையின் ஸ்பெஷல் புராஜெக்ட் ஆக இருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. நக்சல்கள் ரயிலில் குண்டு வைத்துவிட்டார்கள், பல ராணுவ வீரர்களைக் கொன்று விட்டார்கள் என ஊடகங்களுக்கு செய்திகளைக் கொடுக்கிற அரசு, டிவி சேனல்கள் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிமார்கள், குழந்தைகள் கதறியழுவதை லைவ் டெலிகாஸ்ட் செய்து துட்டு பார்க்க மறுபக்கம் சந்தடி சாக்கில்லாமல் ஒரு நிமிடத்தில் லட்சக் கணக்கானவர்களிடம் சென்று சேரும் இந்த நக்சல் எதிர்ப்பு வெறியை சாமர்த்தியமாக செய்கிறது உளவுத்துறை.

புரட்சியாளர்களின் போராட்டங்களையும் அவர்களின் தியாகத்தையும் சுவடில்லாமல் செய்யும் ஒரு விஷயமாகவே இதைக் கருத முடியும்.மொத்தமாகப் புழுத்து நாறிக்கொண்டிருக்கும் இச்சமூகத்தை மாற்றமுயலும் நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு இது போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் ஒரு தூசு என்ற போதிலும், இது போன்ற கழிசடைப் படங்களைப் பார்த்து இவர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதே இக்கட்டுரையின் முதல் நோக்கம்,இப்படத்தை எடுத்தவர்களை அம்பலப்படுத்துவதும் மற்றொரு நோக்கம்.

ஆக திட்டமிட்டே மிகக் கொடூரமாக நக்ஸல் விரோதத்தை மக்களிடம் பரப்புவதற்கே இது போன்று கதைக் கருவை இவர்கள் கையாண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.

SIMPLY THIS FILM IS A CONSCIOUSLY FABRICATED ANTI-NAXAL PROPAGANDA
KO – GO TO DUST BIN

கம்யூனிசம் எனும் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட இரும்புப் பெண்மணி – அலெக்ஸான்ட்ரா மிகைலோவ்னா டெமன்டோவிச் கொல்லொன்டை

Posted in அலெக்சான்ட்ரா, கம்யூனிசமும் பெண்களும், கீழைக்காற்று, புத்தக அறிமுகம் அடையாளங்களுடன் , , , on ஜனவரி 12, 2011 by குட்டகொழப்பி

கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட கம்யூனிசமும் குடும்பமும் என்ற நூலைப் பற்றியான அறிமுகம் செய்யலாம் என்று நினைத்திருக்கையில் குருத்து தன் வலைப்பதிவில் பதிந்துவிட்டார்.

நூலறிமுகத்திற்கு கீழேயுள்ள படத்தைச் சொடுக்கவும்.

இந்நூலை எழுதிய தோழர் அலெக்சான்ட்ரா பற்றிய சில குறிப்புகள்.

அலெக்ஸான்ட்ரா கொல்லொன்டை என்றழைக்கப்படுகின்ற அலெக்ஸான்ட்ரா மிகைலோவ்னா டெமன்டோவிச் கொல்லொன்டை 31-03-1872 அன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஜார் மன்னருக்கு சேவை புரியும் ஒரு மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே பல மொழிப்புலமை பெற்ற இவர் தன் பத்தொன்பதாவது வயதில் விளாடிமிர் என்ற இராணுவ வீரரைத் திருமணம் செய்தார், விரைவிலேயே அது ஒரு அடிமை வாழ்க்கை என்பதை உணர்ந்த அலெக்ஸான்ட்ரா தன்னுடைய திருமண வாழ்வை முறித்தார். 1894 களில் ரஷ்ய தொழிற்சாலைகளில் தொழிலாளிகளின் அவல வாழ்நிலையைக் கண்ட அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் உள்ள தொழிலாளர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் இருந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், பிற்பாடு மார்க்சிய சித்தாந்தத்தில் முழு ஈடுபாடு கொண்டதன் காரணமாக சமூகக் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.

ரஷ்யாவில் ஜாரிய அடக்குமுறையினால் தவித்த ஃபின்லாந்து மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த இவர் ’ஃபின்லாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை’ என்ற புத்தகத்தை எழுதினார். அதன் நீட்சியாக ரஷ்ய தொழிற்சாலைகளில் உள்ள பெண் தொழிலாளிகளின் உரிமைக்காகவும், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடினார். 1914 வரை மென்ஷ்விக் கட்சியில் இருந்தார், அதன் பிறகு 1915 ல் போல்ஷ்விக் கட்சியில் இணைந்த இவர் அன்றைய ரஷ்ய சோஷலிசக் கட்சியின் மிகப் பெரிய புரட்சியாளர் மற்றும் பெண் விடுதலைப் போராளியாக தன்னை அர்பணித்துக் கொண்டார். 1917 களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (போல்ஷ்விக்) முதல் பெண் மத்தியக்கமிட்டி உறுப்பினராகவும், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையில் ஏற்பட்ட சோஷலிச அரசின் சமூக நலத்துறை கமிசாராகவும் இருந்தவர். இக்காலகட்டத்தில் (1920) இவர் எழுதிய முக்கியமான நூல்தான் ‘ கம்யூனிசமும் குடும்பமும் – உற்பத்தியில் பெண்களின் பங்கும் குடும்பத்தில் அதன் தாக்கமும் ‘, இது மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஏடுகளிலும் (ப்ராவ்தா) இவர் தனது புரட்சிகர எழுத்துக்களைக் கொண்டு சென்றார்.

பிறகு ரஷ்யாவில் தொழிற்சங்கங்களை அணுகுவதில் லெனினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அலெக்ஸான்டர் ஷ்லியாப்னிகோவுடன் ( மத்தியக்கமிட்டி உறுப்பினர் & தொழிலாளர்களுக்கான கமிசார்) சேர்ந்து போல்ஷ்விக் கட்சியை விமர்சித்து ‘உழைப்பாளிகளின் கண்டனம்’ என்ற துண்டுப்பிரசுரத்தை வினியோகித்தார். 1922 ல் கட்சிக்குள் குழுவாதம் / பிரிவினைவாதம் இருந்தால் புரட்சியை சாதிக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி அவரைக் கட்சியில் இருந்து நீக்கினார் லெனின், ஆயினும் ஸ்டாலின் காலகட்டங்களில், நார்வே (1923-1925 & 1927-1930), மெக்சிகோ (1925-1927), ஸ்வீடன் (1930-1945) போன்ற நாடுகளுக்கு நல்லெண்ணத்தூதுவராக நியமிக்கப்பட்டார். தன் கருத்துக்களை மிகவும் துணிச்சலாக வைக்கும் தைரியம் கொண்டவராதலால் ஒளிவுமறைவின்றி செயல்பட்டார், ஸ்டாலினால் 1934 – 1939 காலகட்டங்களில், ஆரம்பத்தில் இருந்த பல மத்தியக் கமிட்டி உறுப்பினர்களும் துரோகிகளாகக் கண்டறியப் பட்டு களையெடுக்கப்பட்ட சமயத்தில் கூட இவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,. கடைசியாக 1945 ல் ஸ்வீடனில் நல்லெண்ணத் தூதராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு ரஷ்யாவிற்கே வந்து குடியேறினார், உடல் நலக் குறைவினால் 9-03-1952 ல் இறந்தார். உலக சரித்திரத்தில் வெளிநாடுகளுக்கு தூதுவராக செயல்பட்ட முதல் பெண் என்ற பெருமைக்குறியவர்.

ரஷ்யா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களுக்காக குரல் கொடுத்த அலெக்ஸான்ட்ராவின் அன்றைய எழுத்துக்கள், இன்றும் இச்சமூகத்தில் பெண்கள் பெற வேண்டிய சமூக,அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையை நினைவுப்படுத்துகிறது, அதைப் பெறுவதற்கான போராட்டத்தில் நமது கடமையையும் உரத்துக் கூறுகின்றது.

இந்தா வாங்குங்க மலிவு விலை பகவத்கீதை – புத்தகச்சந்தையில் !!! அட கொழந்த பீத்துணியையாவது மிச்சப்படுத்துங்கப்பா !!!

Posted in கிறுக்கியது, கீதையின் மறுபக்கம், பகவத் கீதை, பீத்துணி, புத்தக சந்தை, வாழ்வியல் சிந்தனை, வீரமணி, SOCIAL ISSUES அடையாளங்களுடன் , , , , , , , , , on ஜனவரி 12, 2011 by குட்டகொழப்பி

இந்தா வாங்குங்க மலிவு விலை பகவத்கீதை – புத்தகச்சந்தையில் !!!
அட கொழந்த பீத்துணியையாவது மிச்சப்படுத்துங்கப்பா…….

(குறிப்பு: இக்கட்டுரையின் நோக்கம் யார் மனசையும் நோகடிப்பதற்காக எழுதப்பட்டது அல்ல, நோகடித்திருந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை, யார் நொந்துபோவார்கள் என்பதும் தெரிந்ததே !!!)

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இருக்கிற மீனாக்ஷி புத்தகக் கடைக்கு வெளியே 1000 ரூபாய் மதிப்புள்ள பகவத் கீதை வெறும் 120 க்கு விற்கப்படும் என ஒரு அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது, சரி மலிவு விலைப் பதிப்பாக இருக்கும் என நினைத்து உள்ளே சென்று அதைப் பார்த்தால் ஆச்சரியம்…..ஆனால் உண்மை !! உள்ளே நூலகப் பதிப்புதான் (ஒரிஜினல் ப்ரிண்ட்) இருந்தது. அனைவரும் பகவத் கீதையைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நல்லெண்னத்துடன் தான் இவ்விலைக்கு விற்பதாக விற்பனையாளர்/உரிமையாளர் கூறினார். உன் நல்லெண்ணம் எனக்குத்தெரியாதா என நினைத்துக் கொண்டே உள்ளே பக்கங்களைப் பார்க்கலானேன்.கிட்டதட்ட 1000 பக்கங்களுக்கு மேல் கொண்ட இப்புத்தகம் தரமானதாக, தடிமனான அட்டையில் பைண்டிங் செய்யப் பட்டிருந்தது.1000 ரூபாய் வொர்த் இல்லாவிட்டால் கூட குறைந்த பட்சம் 750 ரூபாயாவது இருக்கும். ஆங்காங்கே கிருஷ்ணனின் அவதாரங்கள்,போர்க்களத்தில் அறிவுரை சொல்லும் காட்சிகள், கடவுளர்கள் அருள்பாலிக்கும் காட்சிகள் எனப் பல வண்ணப்படங்களுடன் வேறு இருந்தது. எட்டு எட்டா மனுஷன் வாழ்வப் பிரிச்சுக்கோ என ரஜினி சொல்ற மாதிரி, நாலு நாலா மனுஷன் வாழ்வப் பிரிச்சுகோனு கீதைல சொல்லுது அதாவது பிறப்பு, மூப்பு, நோய் படுதல் கடைசியாக இறப்பு…….முடியலடா சாமி…..

கூடவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது என்று வேறு இருக்கிறது, கங்கை தன்னைத் தேடி வருபவர்களை மட்டும் தான் முக்தி பெற வைக்குமாம், ஆனால் கீதையோ ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று அனைவரையும் முக்தி பெற வைக்கிறதாம்…..அது போல இது காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்ததாம், காயத்ரி ஜெபிப்பவனை மட்டும் தான் முக்தியடைய வைக்குமாம், கீதை படிப்பவர்களை மட்டுமல்லாது மற்றவர்களும் வீடு பேறு அடைய வழிவகை செய்யுமாம். இப்படியிருக்க நமக்கு அவன் முக்தி தருவானா?? விடு பேறு தருவானா ……அட வீடுதான் தருவானா……ஹ்ம்ம்ம்ம்ம்.

சரி மேட்டருக்கு வறேன்…..புத்தகத்தைப் பார்த்ததும் வியந்துதான் போனேன்.
இவ்ளோ விலைக்கு எப்படிக் கட்டுப்படியாகும்னு தெரியல. என்னுடன் வந்திருந்த நண்பர் வாங்கலாமா வேண்டாமா என பயங்கரமாக யோசித்துக்கொண்டிருந்தார். இதை உணர்ந்த நான் “சும்மா வாங்குங்க, படிக்கலனா கூட பழைய புத்தகக் கடைல போட்டுடலாம், இதை விட அதிகமாக் கிடைக்கும் ” என வலியுறுத்தினேன். சிரித்துக் கொண்டே” நீங்க சொல்றதும் சரிதான், ஆனா நான் அதுக்காக மட்டும் வாங்கல, இவனுங்க நம்ம மக்கள எப்படில்லாம் ஏமாத்துறானுங்கன்னும் தெரிஞ்சுக்கலாம், பல நேரங்கல்ல கீதையைப் பத்தி விமர்சிக்கிற நேரம் வருது, அதுக்கு கூட நாம படிக்கலாம் “ என்று கூறினார். நானும் அவரும் தலா ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டோம்.

அப்படியே நடந்து சென்று கொண்டுருந்தோம் நண்பர் ஒருவர் தன் மனைவி குழந்தையுடன் வந்திருந்தார், கையில் வைத்திருந்த கீதையைப் பார்த்து, “ ஏன் அந்தப் புத்தகத்தை வாங்கி காசை வீணாக்குறீங்க ” என சற்றே கோபத்துடன் வினவினார், மேற்படி நான் வாங்கியதன் சூட்சமத்தை அவரிடம் சொல்ல “அட நல்ல ஐடியாதாங்க! என் வீட்ல கூட அடிக்கடி தண்ணிப் ப்ரச்சினை வருது….. என் கொழந்தைக்கு தொடைக்க துணி உபயோகிச்சு கட்டுப்படியாகல, துணியாவது மிச்சமாகும்ல……நெருக்கடி நேரத்துல நாங்க கூட உபயோகிச்சுக்கலாம் ” என சீரியசாக சொல்ல கூடியிருந்த அனைவரும் பயங்கரமாகச் சிரித்துப் போனோம்.

சிறிது நேரம் கழித்து தி.க.வின் பெரியார் புத்தக நிலையத்திற்குச் சென்றோம் படிக்க உபயோகமுள்ளவை இங்கு கிடைக்கும் என நினைத்து புத்தகங்களைப் புரட்டினால், புத்தகங்களின் விலை விண்ணை முட்டியது. புத்தகங்களின் எழுத்தைப் பெரிதாக்கி, பக்கங்களையும் அதிகரித்து அட்டைப்போட்டு மறுபதிப்பாக வெளியிட்டிருந்தார்கள். பொதுவாக புத்தகங்கள் தீர்ந்து விட்டால் தான்(அல்லது குறைவாக இருந்தால்) மறு பதிப்பு வரும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இங்கோ இரண்டு பதிப்புகளும் அருகருகில் வைக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக தொழிலதிபர், கல்வி நிறுவனர், தஞ்சையின் கல்வித் தந்தை, வாழ்வியல் சிந்தனையாளர் எனப் பல பட்டங்களைத் தாங்கியுள்ள முன்னாள் நாத்திகர் ??? ணிமரவீ (சாரி – பேர் சொல்ல விருப்பமில்லீங்க) எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை கூறலாம்.அதன் விலை 200 ரூபாய் (கீதை 120 ரூபாய்). பல புத்தகங்களின் விலையும் அப்படியே. இவ்வளவு அதிகமாகப் பெரியாரின் கருத்துகள் சோரம் போவதை எண்ணி வருந்தினேன்.

வேறு ஏதாவது புத்தகங்கள் கிடைக்கிறதா என நோட்டமிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் “ஏங்க பகவத்கீதை மாதிரி இன்னுமொரு புத்தகத்தை காமிக்கிறேன், இங்க வாங்க ” என நண்பர் கூறினார். என்னவாக இருக்கும் என யோசித்துக்கொண்டே பார்த்தால் அது ணிமரவீயின் வாழ்வியல் சிந்தனை(1-8). ஏற்கனவே அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதைப் பார்க்கும் பேறை அப்பொழுதுதான் பெற்றேன்.ஒரு புத்தகம் தான் எழுதிருக்காருன்னு பாத்தா கிட்டதட்ட 8 பகுதியாம். “அட இவ்ளோ பணம் கொடுத்து ஒங்க கொழந்த பீத்தொடைக்கனுமா, அதுக்கு இன்னொரு பகவத் கீதை வாங்கிடுங்கன்னு அறிவுறுத்தினேன் ” நாங்க தான் இப்படி பகவத்கீதை வாங்கினோம்னு பாத்தா, நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, இன்னும் பிறக்காத தன் குழந்தைக்காக கீதைகள் வாங்கியிருப்பதாகக் கூறினார். அட நெசமாத்தானுங்க…………………

சமகாலங்களில் இந்து மதம் எந்த அளவிற்கு தன் விஷக்கொடுக்குகளை வளர்த்திருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கோவில்களில் வெள்ளிக்கிழமைகள் மற்றும் சில விசேஷ நாட்களில் மட்டுமே கூடும் கூட்டம், கடந்த சில ஆண்டுகளாக எல்லா நாட்களிலும் கூடுகின்றது. அஷ்டமி, நவமி, கிருத்திகை, பாட்டிமா, அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கோவில்களில் மிகவும் அதிகமான கூட்டத்தைப் பார்க்க முடிகிறது, அஷ்டயத்திருதியை எவன் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை, அன்று கோவில்களில் மட்டுமல்லாது நகைக்கடைகளிலும் அதிகமான கூட்டத்தை காண முடிகிறது, எப்படி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாளை வைத்துக் கொண்டாடுகிறார்களோ (கக்கூஸ் போகும் தினம் என வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை) அது போல இவர்களும் எல்லா நாட்களையும் ஏதாவது சொல்லி புனித நாளாக்கிவிடுகிறார்கள். (நெசமாவே உக்காந்து யோசிப்பாங்க போல).

பார்ப்பனர்கள் இந்துதுத்வாவைப் பரப்புவதற்கு எந்த அளவிற்கு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன புத்தக்கக் கடை ஒன்று சிறிய உதாரணம் தான், மேலும் பல இந்துப் பண்டிகைகளின் பொழுது இவர்களின் சேவைப்பிரிவான சேவா பாரதி ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பல போட்டிகளை வைப்பது, குழந்தைகளுக்கு இந்து வெறியை ஊட்டக்கூடிய தலைப்புகளில் பாட்டு, நடனம் மற்றும் பேச்சுப் போட்டிகளை வைத்து அவர்களை தன் வசப்படுத்துவது போன்ற விஷம வேலைகளைச் செய்கிறது. இப்படி அசுர (இதுல மட்டும் எங்க வேகம் வேணுமாக்கும்) வேகத்தில் செயல்பட்டு இந்துமதத்தின் இருப்பையும், பரப்புதலையும் பலப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மத்தியில் இந்தாளு பன்றது (அதாங்க ணிமரவீ ) கடுப்புகளைக் கெளப்புது யுவர் ஆனர். எங்கெங்க எல்லாம் கல்லா கட்டணுமோ எல்லாத்தலையும் கட்டியாச்சு, கடைசியில மிச்சமிருக்கிற அரவிந்தர், அன்னை,ஓஷோ, ஜக்கி வாசுதேவன், மாதா அமிதானந்தமாயி, நித்யானந்தன், யோகி போன்ற பல ஆன்மீகவாதிகளிடமும் தன் திறமையைக் காட்ட வேணாமா அதான் வாழ்வியல் சிந்தனைகள் எழுதிட்டு இருக்காரு (இதுவரை எட்டு தொகுதிகள் என நினைக்கிறேன்- இன்னும் எத்தனையோ??). இப்படி தன் கட்சி எதற்காக ஆரம்பிக்கப்பட்ட்தோ அல்லது இருக்கிறதோ?? குறைந்தபட்சம் அதற்காகவாவது செயல்பட்டால் போதும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மானமிகு ணிமரவீக்கு அது இருந்தாதான் எப்பவோ செஞ்சிருப்பரே!

நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல் இல்லையேல் சாதல்!

Posted in அடிடாஸ், உட்லான்ஸ், எலிக்கறி, கடன், கிறுக்கியது, சந்தை, தனி நபர் நுகர்வு, நச்சுக் கிழங்குகள், நயவஞ்சக விளம்பரங்கள், நுகர்தல், பகுக்கப்படாதது, மறுகாலணி, மாயை, ரீபொக், ரோலக்ஸ், வாங்கும் திறன், ஹார்லி டேவிட்சன், GATT, SOCIAL ISSUES அடையாளங்களுடன் , , , , on ஜனவரி 6, 2011 by குட்டகொழப்பி

நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்!
நுகர்தல் இல்லையேல் சாதல்!

நாய்களுக்கு உணவு வகைகளை உற்பத்தி செய்யும் பெடிக்ரீக்கு நாய்கள் மீது உண்மையான அக்கறையா என்ன?
தனி நபர் நுகர்வு என்பது ஒரு வெறி பிடித்த நுகர்வாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லவே இது போன்ற சொல்லாடல்களை நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கு எது நன்றாக இருக்கும் என்பதை அப்பொருளின் உபயோக விளைவைப் பார்த்து தெரிவு செய்யும் நிலையில் இருந்து, விளம்பரங்களில் போடுவதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறி விட்டனர் என்பதனாலேயே இதை ஒரு வெறி என்று சொல்லுகிறோம்.

இந்தியாவில் இத்தகைய நுகர்வு சந்தைகள், அனைத்து மக்களையும் கவரும் விதமாக மாறி வருவதற்கு ஊடகங்கள் செய்யும் நயவஞ்சக விளம்பரங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன, சமீப காலங்களில் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளின் பண்பலை நிகழ்ச்சிகளிலும் இது போன்ற விஷம விளம்பரங்களின் ஆதிக்கம் என்பது நடுத்தர வர்க்க மக்கள் மட்டும் அல்லாமல் குடிசை வீடுகளையும் ஆட்டிவைக்கத் தொடங்கிவிட்டது. வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி ஒன்று ”கடன் வாங்குங்கள் பெருமை கொள்ளுங்கள்” என்று விளம்பரம் செய்கிறது. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவையை மீறி அதிகமாக கடன் வாங்குவதும், திருப்பி அடைக்கும் திறன் இல்லாவிட்டால் கூட கடன் வாங்குவது என்பது வருத்தப்படக் கூடிய ஒன்றல்ல என்பது போன்ற மாயையை இத்தகைய விளம்பரங்கள் உருவாக்குகிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்பதெல்லாம் போய் நிச்சயமாகப் பரிசு உண்டு!, இங்கு வாங்கினால் உங்கள் பணத்தை சேமிக்கலாம்! போன்ற விளம்பரங்கள் ஏழைப் பாழைகளை வசீகரிக்கும் சொற்களாகிவிட்டன. இது ஏதோ நம் மீதான கரிசனத்தில் அல்ல, அவனது பொருளை வாங்க வைத்து மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கான ஆசைகளைத் தூண்டுவதற்கே என்பதை மக்கள் உணர்வதில்லை. இது மட்டுமல்லாமல் நேர்த்தியான, கவர்ச்சியான பேக்கிங்குகள் கொண்டு விளம்பரப்படுத்தப்படும் பொருட்களே சுத்தமாகவும், உடம்பிற்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்கும் என்று அவர்களை அறியாமலேயே மனதில் பதிய வைக்கப்படுகின்றன.

கோக், பெப்சி போன்ற மேல்நாட்டு குளிர்பாண நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்களை வைத்து எடுக்கும் மிகப் பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம், இந்தியா முழுக்க டீலர்கள் அமைக்கப்படுகிறார்கள். மேலும் சிறு வியாபாரிகளைக் கவருவதற்கு ஐஸ் பாக்ஸ், டீ சர்ட், பள பளக்கும் விளம்பரச் சுவரொட்டிகள் போன்ற ஜிகினாப் பொருள்களை இலவசமாக வழங்குவதால் கவரப்பட்டு கிராமங்களின் சாதாரணமான குக்கிராமங்களில் கூட இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சோப்பு, பேஸ்ட் முதல் நாப்கின்கள் வரை டி.வி க்களில் வரும் விளம்பரங்களை வைத்து வாங்கும் நிலையே இன்று கிராமங்களில் அதிகரித்துள்ளது.

தங்கள் தேவைக்கு அதிகமாக சம்பாதிக்கும் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும் இதற்குப் பெரும்பாலும் பலியாகின்றனர். முக்கியமாக இளைய தலைமுறையினரைக் குறிவைத்து தயாரிக்கப்படுகின்ற இத்தகைய விளம்பரங்கள், காலணிகள் என்றால் உட்லான்ஸ், ரீபொக் அல்லது அடிடாஸ், ஆடைகள் என்றால் ஏரோ, ஆலன் சோலி, லூயி ஃபிலிப், சோடியாக், கலர் ப்ளஸ் அல்லது க்ரொகடைல், கைக்கடிகாரங்கள் என்றால் ரோலக்ஸ், ஒமெகா அல்லது ரேடோ போன்ற தயாரிப்புகள் தான் தரமானவை என்று அவர்களை அறியாமல் மனதில் புகுத்தப்படுகின்றது. சந்தையில் புதிது புதிதாக அறிமுகப்படுத்துகிற இரு சக்கர வாகனங்களுக்கான கவர்ச்சிகர விளம்பரங்கள், தேவைக்குதான் வாகனங்கள் என்பதிலிருந்து பந்தா காட்டவும், படாடோபத்திற்குமான ஒரு சின்னமாக மாற்றப்பட்டுவிட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் போன்ற வாகனங்களின் அறிமுகம் இதற்கு சிறந்த உதாரணம். நாற்பது முதல் ஐம்பதாயிரம் வரையிலான இரு சக்கர வாகனங்கள் போய் ஏழு முதல் ஐம்பது லட்சம் வரையிலான ஹார்லி டேவிட்சன் வகையிறா வாகனங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.

மேலும் அட்சய த்ரிதியை அன்று ந‌கை வாங்கினால் ந‌கை சேர்ந்து கொண்டிருக்கும் என்ற‌ மூட‌ப்ப‌ழ‌க்க‌த்தை, பார்ப்பனர்கள் மூல‌மாக‌ ரேடியோவிலும், தொலைக்காட்சியிலும் கூற‌வைத்து ம‌க்க‌ளை மேலும் வாங்குவ‌த‌ற்கான‌ ஆசையை தூண்டுவ‌தே இவ‌ர்க‌ளின் முக்கிய‌ இல‌க்காக‌ உள்ள‌து. இதன் மூல‌ம் ம‌க்க‌ளை ஓட்டாண்டியாக்குவ‌தோடு, இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் மூல‌ம் ஒரு பொருளை வாங்குவ‌தற்காக‌ கொலையும் செய்ய‌லாம் என்ப‌தைப் போன்ற மனோபாவத்தை உருவாக்குகிறது..

இது போன்று தேவைக்கு அதிகமாக‌ வாங்க‌வைத்து க‌ட‌னாளியாக்குவ‌தற்கே இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் இறக்கை கட்டி பறந்து வருகின்றன. எதுவெல்லாம் குடும்ப‌த்தை, இச்சமூகத்தை சீர‌ழிக்க‌க் கூடியதோ அதையெல்லாம் நியாய‌ப்ப‌டுத்துவதற்காக‌வே இன்றைய‌‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் காற்றை விட வேக‌மாக‌ச் சென்றுகொண்டிருக்கிற‌து. நுகர்பவனை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் ஆட்டு மந்தைகளாக மாற்றி தாங்கள் நினைத்தவற்றை சாதித்துக்கொள்ளும் வேலையை இத்தகைய விளம்பரங்கள் கச்சிதமாகச் செய்து முடிக்கின்றன. மக்கள் தாங்கள் ஒரு மாதம் சம்பாதிப்பதை பெரும்பாலும் நுகர்வதற்கே அதிகபட்சமாக செலவிடும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் கடன் வாங்கி அடைக்க முடியாமல் திணறுவதும், குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், குழப்பம் நிலவவும் முடிவில் அது ஒட்டுமொத்த குடும்பத்தையே பிரித்துவிடும் நிலைக்கோ அல்லது தற்கொலைக்கு தூண்டும் விதத்திலோ கொண்டு போய் விடுகிறது.

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் போடுகிற வாசணை திரவியங்கள் அல்லது அவரால் விளம்பரப் படுத்தப்படுகிற பொருட்கள், வெளிநாடுகளில் என்று சந்தை படுத்தப் படுகின்றதோ அதே தேதியில், அதே நேரத்தில் இந்தியாவிலும் அறிமுகப் படுத்தப்படுகின்றது, அது போல ஹாரி பார்ட்டர் புத்தகங்களும் உலகம் முழுவதும் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்படுவதும் அப்புத்தகங்கள் அவர்களால் படிக்கப் படுகிறதோ இல்லையோ முதல் நாளே வாங்கிவிடுவது போன்றவை, மிகப்பெரிய கௌராமாகப் பார்க்கப்பட்டு, பெருமிதம் கொள்ளும் மனோபாவமும் மேல்தட்டு வர்க்கத்திற்கு ஏற்படுகிறது. இதன் மூலம் உலகளவில் புகழ் பெற்ற பொருள்களை வெறி பிடித்து நுகர்வதால் இந்த சமூகம் அவர்களை மதிப்புடன் பார்ப்பதாகவும் நினைக்கிறார்கள்

1990 கள் வரையில் இந்தியாவில் இருந்த மொத்த ஷாப்பிங் மால்கள் எனப்படுகிற மிகப்பரிய வணிக வளாகங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் அனால் இந்தியப் பொருளாதாரம் உலகச் சந்தைக்கு திறந்துவிடப்பட்ட பிறகு அவற்றின் வளர்ச்சி கற்பணை செய்ய முடியாத நுகர்வுவெறிக்கு இட்டுச் சென்றுள்ளது. மேலும், இவ்வகை நுகர்வு வெறி நமது உண்ணும் முறையிலும் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய மால்களில் உள்ள மெக் டொனால்ட், கெ.எஃப்.சி, சான்ஸ் கிட்சென், வேன்க்ஸ் கிட்சென், பீசா ஹட், பதான்கோட், காஃபி டே போன்ற மேல்தட்டு உணவகங்கள் வானொலி, தொலைகாட்சிகளில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அவற்றை உண்ணும் வெறியை ஏற்படுத்துகிறது.

தனி நபர் நுகர்வு வெறிக்கு மூலம், இந்திய அரசால் 1991ல் கொண்டு வரப்பட்ட தனியார்மய, தாராளமய உலகமய சித்தாந்தத்தைக் கொண்ட காட் (GATT) ஒப்பந்தமே ஆகும். உலகிலேயே மிகப் பெரிய சந்தை, எதை சொன்னாலும் நம்பக் கூடிய அடிமை புத்தி கொண்ட மக்கள், வெளி நாட்டுப் பொருள்கள் என்றால் தரம் அதிகமாக இருக்கும் என்ற கற்பிதங்கள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காலாவதியான தொழில் நுட்பத்தையும் தொழில்நுட்ப சாதனங்களையும் இன்னபிற கண்ட கண்ட கழிசடைகளைக் கூட மூன்றாம் உலக நாடுகளில் விற்று காசாக்கலாம் என்ற ஏகாதிபத்தியக் கண்ணோட்டம் போன்றவை தங்கள் சமஸ்தான சந்தைகளை அமைக்க சாதக அம்சங்களாக மேலை நாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இது போன்ற தனி நபர் நுகர்வை சமூகத்தில் ஒரு கவுரவமான செயலாகவும் அதிகமாக நுகர்பவனை மதிப்பு மிக்கவனாகவும் இச்சமூகமும் முதலாளித்துவ உலகமும் காட்டமுனைகிறது. அதிகமாக நுகர்தலே நிம்மதி, அதிகமாக நுகர்வதே பெருமையான விஷயம், புதிது புதிதாக வித விதமாக நுகர்தல், போன்றவை நுகர்தலை போதை வஸ்துவாகவே மாற்றி ஒருவித மயக்க நிலைக்கு மக்களை கொண்டு செல்கிறது.

இது ஏதோ மிகப் பெரிய சமுதாயப் பொருளாதார புரட்சி என்றும், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டது, யாரும் முன்னைப் போல பரம ஏழைகளாக இல்லை என்றும் சொல்பவர்கள் ஒன்றை உணர வேண்டும் இது போன்ற சந்தைகள் யாருக்கானதாக இருக்கிறது, யார் நுகர்வதற்காக வந்துள்ளது ? இது தினம் தினம் பட்டினியால் செத்து மடியும், நோஞ்சான்களாக இருக்கும் இந்தியக் குழந்தைகளின் பட்டினியை போக்குவதாக இருக்கிறதா? எலிக்கறி, நச்சுக் கிழங்குகள் தின்று தங்கள் பசியை ஆற்றிக்கொள்ளும் விவசாயிகளின் பட்டினியினைப் போக்குவதாக உள்ளதா? மக்கள் தொகையில் 30 கோடி பேர் தினமும் உறங்கச் செல்லும் முன் வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொள்ளும் ஏழைப் பாழைகளின் பசியை போக்குவதாக உள்ளதா? இல்லையே, அவர்கள் ஏன் இது போன்ற நிலைக்குத் தள்ளப்படுள்ளனர், வாங்கும் திறனே இல்லாத நிலைக்கு அவர்கள் மாறியது எதனால், மாற்றியது எது? ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வித்தியாசம் மிக அதிகமாகிவிட்ட நிலையில், இவை எல்லாவற்றிற்கும் காரணம் அரசு கொண்டுவந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற நாட்டை மறுகாலணியாக்கும் கொள்கைகள் தாம் என்பது உறுதி.
.

Culture Unplugged Video

Posted in பகுக்கப்படாதது on ஆகஸ்ட் 30, 2010 by குட்டகொழப்பி

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

Posted in டௌ, புரட்சி, போபால் படுகொலை, முற்றுகைப் போராட்டம் on ஆகஸ்ட் 13, 2010 by குட்டகொழப்பி

மேலும் வாசிக்க »

போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை….ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

Posted in பகுக்கப்படாதது அடையாளங்களுடன் , , , on ஆகஸ்ட் 11, 2010 by குட்டகொழப்பி

போபால் – காலம் கடந்த அநீதி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.

அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.
தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்

குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.

இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..
கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
முற்றுகை
ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,
பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.
பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

அனைவரும் வருக‌
-
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி
-
தொடர்பு கொள்ள:

ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506
போபால் சிறப்பு வெளியீடு

எங்களுக்காகப் பேசு இல்லையென்றால் நீ மாவோயிஸ்டு !!!

Posted in உள்நாட்டுப் போர், சத்தீஸ்கர், பழங்குடி மக்கள், போலிஸ் அராஜகம், மாவோயிஸ்டு, லால்கர், விமர்சனங்கள், SOCIAL ISSUES அடையாளங்களுடன் , , , , , on ஜூலை 18, 2010 by குட்டகொழப்பி

இந்திய ஆளும் வர்க்கத்தினால் திட்டமிடப்பட்டு நடந்து வருகின்ற காட்டு வேட்டையினால் அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாகச் சமீப காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தடையற்றஅடக்குமுறை அப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ் நிøயை முள்வேலிக்குள் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கிணையாக மாற்றியுள்ளது.

அரசின் அடக்கு முறையினால் நிலையற்று நாடோடிகளைப் போல மாறிய அம்மக்கள் காலங்காலமாக பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் ஈட்டி, அம்பு போன்ற சாதாரண ஆயுதங்களை மிகப் பயங்கரமான ஆயுதங்களாகச் சித்தரித்து தீவிரவாதிகளாக அடையாளப் படுத்துகிற அவல நிலையும் இங்கு சர்வ சாதாரணமாகியுள்ளது.இந்தியா முழுக்க போலிசு என்பது அரசின் அடக்குமுறைக் கருவியாக மாறியுள்ள நிலையில் லால்கர், ஒரிஸ்ஸா,சத்தீஸ்கர் போன்ற இடங்களில் இதன் வீரியம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.எந்தவித முகாந்திரமுமின்றி போலிசுக் கும்பலால் கைது செய்யப்படும் அவர்கள் அளவிலாச் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு செத்து மடியும் நிலையும் இங்கு சாதாரணமே.

குறிப்பாக லால்கரில் உள்ள மிட்னாப்பூரில் போலீசுக் கும்பலின் எல்லையற்ற அதிகாரம் அம்மக்களின் அடிப்படை உரிமையையே பறிக்கும் நிலையில் உள்ளது.
பிரக்கடாவில் 2009 டிசம்பரில் நடந்த குண்டு வெடிப்பில் போலிசு வாகனம் மாவோயிஸ்டுகளால் தரைமட்டமாக்கப்பட்டது.குன்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவே உள்ளது சுனில் மஹட்டோ என்ற பழங்குடியினரின் வீடு.தன்னைச் சந்தேகப்படுவார்களோ என பயந்த சுனில் அருகில் இருக்கும் காட்டில் அடைக்கலமடைந்தார்.சுனில் நினைத்தது பொன்றே சந்தேகப்பட்ட போலீஸ் வீட்டில் இருந்த அவரின் மனைவி திவாலி மற்றும் குழந்தைகளையும் சிறையிலடைத்தது.

சில நாட்களுக்குப் பிறகு வெளியே வந்த சுனில் நடந்த செய்தியறிந்து போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாத சுனில் மீதோ அரசுக் கெதிராகச் சதிச் செயலில் ஈடுபட்டமை, பயங்கர ஆயுதம் மற்றும் வெடி மருந்துகளை வைத்திருந்தமை போன்ற ஏழு குற்றங்களில் திணிக்கப்ட்டு சிறைத்தண்டனை விதிக்கபட்டது. தெற்கு மிட்னாபுரில் உள்ள சிறையில் சுனிலைப் போன்றே கிட்டதட்ட 141 க்கும் மேற்பட்ட பழங்குடி ஆண்களும் பெண்களும் மாவோயிஸ்டுகளெனப் பொய் குற்றம் சுமத்தப் பட்டு அடைக்கப்பட்டனர்.காடுகளின் அருகில் இவர்கள் வீடு இருப்பதாலேயே தாங்கள் மாவோயிஸ்டுகளெனச் சித்தரிக்கபடுவதாக இம்மக்கள் கூறுகின்றனர்.

இந்திய மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிவருடியாகச் செயல்பட்டு வரும் இந்த அரசு நக்சல் புரட்சியாளர்களை கொன்றொழிப்பதாகக் கூறி தன் மக்கள் மீதே உள் நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கும் இப்பாசிசத்தை அம்பலப் படுத்த வேண்டியது நம் அனைவரின் மிக முக்கியமான கடமையாகும்.

இத்தனப் பொணம்னு தெரிய இன்னும் எத்தனப் பொணம் விழனுமோ!!

Posted in கிறுக்கியது, சத்தீஸ்கர், சிரியா மோகன், தெகல்கா, பகுக்கப்படாதது, படித்ததில் பிடித்தது, மொழி பெயர்ப்பு, விதர்பா, விமர்சனங்கள், விவசாயிகள் தற்கொலை, NCRB, SOCIAL ISSUES on ஜூன் 14, 2010 by குட்டகொழப்பி

விதர்பாவின் விவசாயிகள் தற்கொலை இந்தியாவை உலுக்கிய சம்பவமாகும், ஆனால் சத்தீஸ்கர் மாநிலம் விவசாயிகளின் பிணக்காடாகிக்கொண்டிருப்பது நாம் அறியாதவை.

தெகல்காவில் சிரியா மோகன் எழுதிய நிதர்சனக்கட்டுரையை உங்களுக்குத் தருகிறோம்.

சத்தீஸ்கர் என்றாலே நக்சல்பரிகள் நிறைந்த இடம் என்று எல்லோராலும் பேசக்கூடிய நிலை, ஆனால் அதையும் தாண்டி கடந்த பத்து வருடங்களாக அங்கு விவசாயிகளின் தற்கொலை விதர்பாவை விட மோசமான நிலைமைக்கு வந்திருப்பது மிகக்கவனமாக மறைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற ஐந்து மாநிலங்கள், மக்கள் தொகையில் மூன்றில் ஒன்றாக இருக்கின்ற நிலையில், விவசாயிகள் தற்கொலையிலும் மூன்றில் ஒன்றாக இருப்பது அதிர்ச்சிக்குறியது. கடந்த 1997 முதல் 2007 வரை இந்தியாவின் மொத்த விவசாயிகளின் த்ற்கொலை எண்ணிக்கை 1,82,936 என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசியக்குற்றப்புலனாய்வுப் பதிவின் (NCRB) அறிக்கை பதிவு செய்கிறது.

2001 சத்தீஸ்கர் தனிமாநிலமாகப் பிரிந்து வந்த பொழுது, அதே ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி 1452 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது விதர்பாவின் எண்ணிக்கையை விட அதிகமாகும், அதாவது ஒரு இலட்சத்தில் 7 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள், அதே சமயம் மகாராஷ்டிரத்தில் இந்த எண்ணிக்கை நான்காக இருந்தது. இதைவிட மிகச்சரியாகக் கூறவேண்டுமானால் 1.5 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சுடுகாட்டுத் தலைநகரமான விதர்பாவின் அளவும் சத்தீஸ்கரின் அளவும் ஏறக்குறைய ஓன்றுதான். இதுவரை எடுத்துள்ளக் கணக்கெடுப்பின்படி விதர்பாவில் மிக அதிகபட்சமாக 2006-ல் 1065 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் சத்தீஸ்கரிலோ 2006-ல் 1483-ஆக இருந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 1593 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் விதர்பாவின் உண்மை செய்தி ஊடகங்களில் வந்ததைப்போல் அல்லாமல் சத்தீஸ்கர் பற்றிய செய்திகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறுக்கப்பட்டுள்ளது.

இதுபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலையை மொத்த மக்கள் தொகை சதவீதக்கணக்கில் ஆராய்ந்தால் கடந்த ஆறு ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் இருப்பது மிக பயங்கரமான செய்தியாகும்.இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை சராசரியாக ஒரு லட்சத்திற்கு 14 பேர். அதில் சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் மட்டும் இந்தக் கொடூரம் 83 ஆக இருக்கிறது.

இதன் காரணமாக சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் விவசாயிகள் தற்கொலையைப் பற்றிச் செய்திகள் சேகரிக்கச் சென்ற போது, தற்கொலை செய்துகொண்ட குடும்பங்களைக் கண்டுபிடிப்பதே ஒரு புதிராக இருந்தது.மகாசமுந்தில் உள்ள கோதாவரிகிராமத்தில் சந்தோஷ் நிஷாத்தின் வீடு இருளாகவும் காலியாகவும் இருந்தது.ஆனால் பாதி பக்கவாதததால் பாதிக்கப்பட்ட நிஷாத்தின் அப்பா பகதூர் சிங் மட்டும் இருந்தார். கூலி வேலைக்குச் சென்ற நிஷாத்தின் மனைவியும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.மூன்று குழந்தைகளும் கூட தங்களின் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள தினக் கூலியாகச் சென்றிருப்பது தெரியவந்தது.நிஷாத் ஒரு வருடத்திற்க்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரின் சாவுக்கான காரணத்தை தந்தையிடம் கேட்டபொழுது “மொதல்ல எங்கள நிம்மதியா இருக்க விடுறீங்களா, என் அருமை மவன் எதுக்கு செத்தான்னு எனக்கு என்ன தெரியும், அவன் மண்டையில இருந்தது பற்றி எனக்கு எப்படி தெரியும்”என்று கோபம் கொப்பளிக்கப் பேசுகிறார். மேலும் “இதுவரைக்கும் எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரண உதவியும் வரல, எங்களுக்கு ரேசன் கார்டு கிடையாது, வறுமைக்கோட்டிற்க்கு கீழன்னு சொல்கிற அடையாள அட்டை கூட கிடையாது. ஒவ்வொரு நாளும் பச்ச வயிரை நிறைக்க நாயா அலைகிறோம், உங்ககிட்ட சொல்லியும் எந்த பிரயோஜனமும் இருக்காதுன்னு தெரிஞ்ச பிறகும் எதுக்காக உங்ககிட்ட பேசனும்” என்று தனது கோபத்தை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தினார். ஆனால் அந்த கோபம் சரியானது, மிக வலிமையானது, கூர்மையானது என்பது தெளிவாகத் கின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் தனது முக்கால் வாசி நிலங்களைத் தனது தந்தையின் சிகிச்சைக்காக விற்றார், ஆனால் இன்றோ அரை ஏக்கருக்கும் குறைவாகவே நிலம் உள்ளது. குடும்பத்தில் விசாரித்த பொழுது அவர் யாரிடமும் கடனாளியாகக் கூட இல்லை என்பது தெரிகிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோ,விவசாயத்தில் எதுவும் ஈட்ட முடியாத நிலையைக் கூறும்போதுதான் அவரின் சாவுக்கு காரணம் எது அன்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவரின் சாவையும் , விவசாயியின் தற்கொலை என்று பதிவு செய்யாமல் பொருளாதரக் காரணம் என்று காவல் நிலையம் பதிவு செய்து உண்மைக்காரணத்தை மூடி மறைத்துள்ளது.

பத்திரிக்கையாளர் சாய்நாத் தனது கட்டுரையில் விவசாயிகளின் சாவைக் கனக்கெடுப்பதில் அரசு மிகுந்த அளவில் தள்ளுபடி செய்வதைச் சுட்டிக்காட்டுகிறார். சாதாரனமாக பெண் விவசயிகளின் தற்கொலையை விவசாயிகள் பட்டியளில் சேர்க்காமல் அவர்கள் விவசாயியின் மனைவி என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். (காலங்காலமாக நிலங்கள் பெண்களின் கைகளில் இல்லாதது இதற்கு முக்கிய காரணம்.) இதனால் எண்ணிலடங்கா பெண் விவசாயிகளின் தற்கொலை இந்தக் கணகெடுப்பின் போது நிராகடிக்கப்படுகிறது. மேலும் நிலங்கள் விவசாயியின் உறவினர்கள் பெயரில் இருந்ததாலும், குத்தைகைக்கு எடுத்திருந்ததாலும் பரிசீலிக்கப்படுவதில்லை.
சத்தீஸ்கரில் உள்ள விவசாய விஞ்ஞானியான சன்கெத் தாகூர் இதற்கான மூலகாரண்ம் பாசனம் பொய்த்து போனதே என்று கூறுகிறார். நெற்பயிரே மூலப்பயிராக இருக்கும் சத்தீஸ்கரில் உள்ள நிலங்களில் நான்கில் ஒன்று என்ற அளவில்தான் பாசனவசதி இருக்கிறது என்கிறார்.

மொத்த விவசாயிகளில் 75 சதவீதம் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் சிறு விவசாயிளைக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார். மேலும் பருவ மழை பொய்த்ததாலும்,உரங்கள் மற்றும் பூச்சிக்கொள்ளி மருந்துகளின் விலை உயர்வும் அவர்கள் தாக்கு பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைத் தெளிவுறக் கூறுகிறார்.அதனால் “குறைந்த மகசூலே தலையெழுத்து” என்று கூறி விவ்சாயிகள் தங்களது விதியை நொந்துகொள்வதாகக் கூறுகிறார்.ஒரு ஏக்கருக்கு 24 குவிண்டால் நெற்பயிரைக் கொடுக்கும் பஞ்சாப் மாநிலத்தைக் காட்டிலும், 6 குவிண்டால் விலைந்தாலே போதும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகக் கூறுகிறார்.

மகாசமுந்தில் உள்ள எஸ்.பி யான ஆனந்த் சாப்ரே ” எங்கள் ஊரில் விவசாயிகள் தற்கொலை பற்றிக் கேள்விப்பட்டதில்லை, தற்கொலைகள் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அதை விவசாயிகள் தற்கொலை என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார். சத்தீஸ்கர் மாநிலத் திட்டக்கமிசன் துணைத் தலைவரும் கோபத்துடன் ” விவசாயிகள் எதற்கு தற்கொலை செஞ்சுக்கனும், இங்க எல்லாமே அளவுக்கு மீறி வெளையுது, கெடக்குது அப்புறம் எதற்கு தற்கொலை? அதுவுமில்லாம சத்தீஸ்கர்ல ஒரு விவசாயி கூட கடனாளி கிடையாது.” என்று கூறுகிறார்.
ஆனால் N.C.R.B-யின் கணக்கெடுப்பினைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறிய போது ” இந்த கணக்கெடுப்பு யார்கிட்ட இருந்து எடுத்தாங்கன்னு தெரியல, ஒருவேளை தவறான நபர்களிடம் இருந்து கூட எடுத்திருக்கலாம். எங்களிடம் வந்து விசாரிங்க, நாங்க உண்மையான செய்தி தருகிறோம்,அப்ப உங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும் என்று சொன்னார். மேலும் உலகத்துக்கே அரிசியும், பருப்பும் கொடுக்கிற நாங்க எதுக்கு தற்கொலை செய்யனும் என்று பெருமிததுடன் கூறி முடித்தார்.2006ம் ஆண்டு விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 1065,ஆனால் சத்தீஸ்கரிலோ அதன் எண்ணிக்கை 1483 ஆக இருக்கிறது.

இத்தகைய கொடூரமான சாவினைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சில விவ்சாயக் குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. மேலும் மகாசமுந்தில் உள்ள ஒரு விவசாயியின் சராசரி வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நோக்குடன் பாக்ரா என்ற இடத்தில் உள்ள 40 வயதான சத்ருகன், அவரின் மனைவி மற்றும் 5 குழந்தைகளைச் சந்தித்தோம். ஏழு ஏக்கர் மதிபுள்ள அவரின் நிலத்தில் அரிசி மற்றும் உளுந்து பயிரிடப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் தான் தன் மூத்த மகளின் திருமணத்தையொட்டி 3 ஏக்கர் நிலத்தை 2.5 லட்சத்திற்கு விற்றிருக்கிறார்,அதனால் தற்பொழுது அவர்கள் விளைவிப்பது தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே போதுமானதாக இருப்பதால்
வேறு எதையும் விற்கமுடிவதில்லை, மேலும் தற்பொழுது அவர்களால் சந்தைகளில் விற்கும் எந்தப் பருப்பையும் வாங்க முடிவதில்லை. இதுபோக சத்ருஹனுக்கு மேலும் 4 மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கும் கடமை இருக்கிறது, இதற்காக மீதி இருக்கும் நிலங்களையும் விற்றால் குடும்பைதின் எதிர்காலம் கேள்விகுறிதான். சத்ருஹனின் இதே நிலைதான் அங்கு இருக்கும் மற்ற விவசாயிகளின் நிலையும், இதனால் இவர்கள் ஊட்டசத்து இல்லாமல் நோஞ்சான் களாக மாறிவருகிறார்கள்.

பிறகு பக்கத்து வீட்டில் இருக்கும் பகிரத்தின் வாழ்நிலையை விசாரித்ததில் அது மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. காலங்காலமாக விவசாய நிலமேதும் இல்லாததால் இவரின் குடும்பம் 40 ரூபாய் சம்பளத்திற்கு தினக்கூலியாக விவசாய நிலங்களிலும், கட்டுமானத்தொழிலிலும் ஈடுபடுகின்றனர். தற்பொழுது தனது மகளின் கல்யாணத்திற்காக 50000 ரூபாய் கடணாகப் பெற்றுள்ளார். முழுமையாக ஆண்டு வருமானம் 30 ஆயிரம் கூடத் தாண்ட முடியாத நிலையில் 50000 ரூபாய் மொத்தமாக தர யாரும் முன்வரவில்லை, அதனால் கொசுறு கொசுறாக 5 பைசா வட்டிக்கு பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறினார். மேலும் வருமானத்திற்காக இரண்டு ஏக்கரைக் குத்தகைக்கு எடுத்துள்ள அவர், விளைவதில் எட்டு குவின்டாலை வாடகையாகக் கொடுத்து விடுகிறார், மீதியை தான் தன் குடும்பத்திற்கு எடுத்துக்கொள்கிறார். ஆனால் அதுவும் அவருக்கு போதுமானதாக இருப்பதில்லை. பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கூட அவர் வாடகையாகவோ, பணமாகவோ அல்லது தாணியமாகவோ எதிர்வரும் காலங்களில் சேர்த்துக்கொடுக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார். ஒருவருடம் சம்பாதிக்கும் தொகை வட்டியைச் செலுத்தவே சரியாக இருப்பதால் இவர்கள் தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. அடுத்தவருடம் புதிதாகக் கடன் கொடுப்பவர் மாறுவார். ஆனால் வட்டியாகக் கொடுக்கும் பணத்தின் மதிப்பும், வாழ்நிலையும் என்றும் மாறப்போவதில்லை.

மஹாசமுந்த் மாவட்டம் முழுக்க விவசாயிகளின் நிலை இதுதான். பண்ணையார்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கி கொள்ளவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும், தங்கள் நிலங்களை விவசாயிகளிடம் குத்தகையாகக் கொடுக்கின்றனர். வியர்வையே சிந்தாத இவர்கள், இரத்தத்தையே வியர்வையாக சிந்தும் விவசாயிகளைக் கசக்கிப் பிழிவது கண்கூடாகத் தெரிகிறது.

ஆண்டாண்டுகளாக ஆயிரமாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து பிணக்குழியில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு ரகசிய உடன்படிக்கைப் போல இந்த விஷயம் வெளியுலகிற்க்குத் தெரியாததன் காரணத்தைப்பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், “முதலாவதாக உள்ளூர் ஊடகங்கள், இத்தகைய செய்திகளால் எத்தகைய பலனும் பெறாத நிலையில் இருப்பதால் அவற்றை வெளியிடத் தயார் நிலையில் இல்லை”, “இரண்டாவதாக பத்தி ரிக்கையாளர்களோ மாநிலத்தின் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைப் பற்றிச் சொல்ல ஊக்கப்படுத்தப்படுவதில்லை”, “கடைசியாக விதர்பாவில் விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் மற்றும் போராடும் இயக்கமான விதர்பா சேட்கரி சங்கதன் போல ஒரு வலுமையான இயக்கம் இங்கு இல்லாதது பெரும் பின்னடைவுக்குக் காரணம்.”

2008-ல் கணக்கெடுப்பு அடுத்தமாதம் வெளியாகவுள்ள நிலையில், இதைப்பற்றி மாநில அரசு கவனிக்காவிடில் இந்நிலை மேலும் உயர்ந்து மாநிலமே மிக அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்றும் N.C.R.B -வின் குழு வருத்தப்பட்டுச்சொல்கிறது.

இத்தனப் பொணம்னு தெரிய இன்னும் எத்தனப் பொணம் விழனுமோ!! என்கிற பாப் டைலனின் பாடல் சத்தீஸ்கருக்கு மிகவும் பொருந்தும்.

கோபாலபுரத்துக் கோமானும் கோயில் மாடுகளும்-இரா.செந்தில்குமார்

Posted in இரா.செந்தில்குமார், ஈழம், கருணாநிதி, கீற்று. காம், குடும்ப அரசியல், தி. மு. க, படித்ததில் பிடித்தது, விமர்சனங்கள், SOCIAL ISSUES அடையாளங்களுடன் on பெப்ரவரி 26, 2009 by குட்டகொழப்பி

karunanidhi_familyஅன்புள்ள மு.க.அ, மு.க.ஸ், மு.க.க, மு.க.அ.க, மு.ம.த.மு.க தலைவர் திரு. மு.க அவர்களுக்கு. இதோட அர்த்தம் உங்களுக்கு நல்லாவே புரியும்னு நினைக்கிறேன் தலைவரே! இருந்தாலும் நான் இதை எழுதும்போது இது என்ன என்னன்னு கேட்டுட்டும் உங்களையே தமிழினத் தலைவரா நம்பி வாழ்ந்துட்டும் இருக்கிற எம் பொண்டாட்டி மாதிரியான அப்பாவிகளுக்காக முழுசாவே சொல்லிரலாம்ணு நெனக்கிறேன். முத்துவேலர் கருணாநிதி அழகிரி, முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின், முத்துவேலர் கருணாநிதி கனிமொழி, முத்துவேலர் கருணாநிதி அழகிரி கயல்விழி, முரசொலிமாறன் தயாநிதி முன்னேற்றக் கழகம்…… அப்பாடா சொல்லவே மூச்சு முட்டுதுங்க தலைவரே….. எம் பொஞ்சாதிய மாதிரி அப்பாவிகளெல்லாம் தி.மு.க.ன்னா இப்பவுங்கூட திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லீட்டு திரியுதுங்க தலைவரே. இந்த மட ஜென்மங்ககிட்ட அதுக்கான அர்த்தம் அதில்ல, திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியோட சுருக்கந்தா தி.மு.க.ன்னா ஒத்துக்கவே மாட்டேங்குறாங்க தலைவரே. நீங்களே செல்லுங்க! நீங்கதான தி.மு.க., தி.மு.க.ன்னா நீங்க தானே.

கட்சி பேரச் சொல்லி கண்டதையும் சொல்லி கடைசில, எழுத வந்ததை அப்படியே கோட்டவிட்டுவேன் போல இருக்குது தலைவரே. அதென்னமோ தெரியல, என்ன மாயமோ புரியலை நீங்க பேசுனா எல்லாரும் கொளம்பிப் போகற மாதிரி எனக்கும் உங்களுக்கு எழுதனும்ன்னு பேனா எடுத்தொடனே எல்லாமே கொளம்பிப் போச்சுங்க தலைவரே. சரி, நேரா விசயத்துக்கே வர்றனுங்க.

 

எனக்கு வீட்டுல ரெண்டு வாரமா எம்புள்ளயாள ஒரே பிரச்சனை தலைவரே. அதனால வேலவெட்டிக்குப் போகமுடியல, மனசு நிம்மதியா இல்ல. அப்பத்தான் உங்கள நெனச்சிட்டேன். ஒரே புள்ள, ஒரே பிரச்சனைய வெச்சிட்டு ஒரே வேலைக்குப் போற என்னாலயே ஒழுங்கா வேலை பாக்க முடியலேயே. உங்க நெலமயெல்லாம் அய்யய்யோ…. பாவந்தான் தலைவரே, இருந்தாலும் எம்பிரச்சனையை நீங்க தீத்து வெப்பீங்கன்னுதான் இந்த லெட்டரே எழுதுறேன். புள்ளைங்க பஞ்சாயத்து பாத்துப் பாத்து பழகிப்போன அனுபவஸ்தர் நீங்க. உங்ககிட்ட சொன்னா நிச்சயமா அதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு நான் நம்பறேன். ஏன்னா, இது ஈழப் பிரச்சனையில்ல கண்டுக்காம ஆஸ்பத்திரியில படுத்துக்க. புள்ளைங்க பிரச்சனை! அதுனால ஒரு தகப்பனா என் உணர்வை நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்கிறேன். சமீப காலமா நீங்க ஒரு நல்ல தலைவரா இருக்கறத விட நல்ல தகப்பனா இருக்கிறதப் பாத்துட்டு ஊருல உள்ள கண்ணெல்லாம் உங்கமேல பட்டுருச்சு. அதனாலதான் இந்த முதுகுவலி, மூட்டுவலியெல்லான்னு நெனைக்கிறேன். திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க தலைவரே.

 

பாத்தீங்களா! மறுபடியும் நான் என் பிரச்சனையை மறந்துட்டேன். பிரச்சனை என்னன்னா ‘என்னோட அஞ்சு வயசு மவ தெனம் ராத்திரில தூங்கும்போது ஒன்னுக்குப் போயிடறா தலைவரே. வீட்டுல இருக்கிற ஏகப்பட்ட சிக்கலுக்கு இந்த ஒரு பிரச்சனை தான் மூலகாரணம்னா உங்களால நம்பமுடியுதுங்களா தலைவரே! சரி விசயத்தைக் கொஞ்சம் விலாவரியாவே சொல்றனே. எம்மவ ஒன்னுக்குப் போறதுனால எங்கம்மாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டையாயிடுது.

 

எங்கம்மா என்னடான்னா அஞ்சு வயசுப் புள்ள தெனம் ராத்திரியிலே ஒன்னுக்குப் போவுது பேசாம அவள மெட்ராஸ் ராமச்சந்திரா ஆசுபத்திரியில அட்மிட் பண்ணீரலாம் அப்படீங்குது. நான் சொன்னேன் அம்மா இந்த வயசுல இதெல்லாம் சாதாரணம் அட்மிட் ஆகற அளவுக்கு சிக்கலான விசயம் இல்லம்மான்னேன். ஆனா, அது எனக்கும் தெரியும்னு எங்கம்மா சொல்றாங்க. அப்புறம் ஏன் ஆஸ்பத்திரிக்குப் போலாங்கறேன்னு கேட்டா, அவங்க சொல்றாங்க, அட வயசான மூட்டுவலி வர்றது, முதுகுவலி வர்றது இதெல்லாம் சகஜந்தா, இதெல்லாம் தெரிஞ்சாலும் ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வரும்போது நம்ப முதல்வரே போய் ஆஸ்பத்திரில படுத்துக்குராறே. நம்ப புள்ளைய மட்டும் ஏன் ஆஸ்பத்திரில படுக்க வெக்கக் கூடாதுன்னு கேக்கறாங்க.

 

அட உங்களுக்கு இந்தியா. இலங்கை. சிங்கப்பூர். மலேசியான்னு 1431 பயோரியா பல்பொடி ரேஞ்சில பிரச்சனை. இந்தப் புள்ளைக்கு என்னங்க தலைவரே பிரச்சனை? அதையும் எங்கம்மாகிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க சொல்றாங்க ‘உனக்கென்னடா தெரியும்? நீ காலைல போனா ராத்திரி வர்ற. அதுக்குள்ள பாவம், புள்ள படற பாட்ட என்னான்னு நான் சொல்ல? அவ காலைல எந்திரிச்சவுடனே பல்லுவெளக்கனும். குளிக்கனும். இது பிரச்சனையில்லையா? அவ ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தா ஹோம் வொர்க் எழுதனுமே அது பிரச்சனையில்லையா? முழுப்பரிட்சை வருதே அதுபிரச்சனையில்லையா? ஏன் சாயந்தரம் அவ “டோராவோட பயணங்கள்” பாக்கும்போது கரண்டு போயிடுதே அது பிரச்சனையில்லையா? பாவம்டா அவ’ங்கறாங்க.

 

அம்மா இதெல்லாம் சாதாரணம் தண்ணி ஊத்துனா குளிக்கிற பிரச்சனை தீர்ந்திடும். படிச்சா பரிச்சை பிரச்சனை தீந்திடும். கரண்டு வந்தா டோரா பிரச்சனை தீர்ந்திடும். இதுக்கெல்லாம் போயி ஆஸ்பத்திரிக்குப் போவாங்களான்னு நான் கேட்டேன். அதுக்கு, ‘போடா போக்கத்தவனே. நம்ம மொதலமைச்சரு உக்காந்து பேசுனா இலங்கை பிரச்சனை தீந்திடும். நின்னு மெரட்டுனா மத்திய அரசாங்கமே நடுங்கிரும். இருந்தாலும் இதையெல்லாம் விட்டுட்டு அவ்வளவு பெரிய மனுசனே ஆஸ்பத்திரியிலே சேர்ந்துட்டாரு. நீ என்னமோ இந்த பச்ச புள்ளய ஆஸ்பத்திரியில சேக்க உடமாட்டீங்கறே’ன்னு எம்மேல கோவப்படுறாங்க தலைவரே. நான் என்ன பண்றது. நீங்கதான் சொல்லனும்.

 

உங்க புண்ணியத்துல ஒரு ரூவாய்க்கு அரிசி வாங்கிதான் எங்க வீட்டுல ஒலையே கொதிக்குது அப்படி இருக்கும்போது மெட்ராஸ் ராமச்சந்திரா ஆஸ்பத்திரிய எல்லாம் டீவி நியூஸ்ல வரும்போது பாத்துக்கலாம் (டீவியும் உங்க புண்ணியம்) அவ்வளவுதான். மத்தபடி நம்ம ரேஞ்சுக்கெல்லாம் ரெண்டு ரூவா குடுத்து தர்மாஸ்பத்திரிலதான் பாக்க முடியும்னு (ரெண்டு ரூவா குடுத்தாத்தான் அது தர்ம ஆஸ்பத்திரி) எங்கம்மாகிட்ட சொல்லி ஒரு சமாதான ஒப்பந்தத்துக்கு வரலாம்ணு பாத்தா எங்கம்மா, விடுதலைப் புலிக மாதிரி அப்பவும் சண்டைய நிறுத்துனபாடில்ல தலைவரே. அது சொல்லுது. அரிசி ஒரு ரூவா. ஆனா பஸ்டாண்டு பக்கம் போனா அவசரத்துக்கு ஒன்னுக்கு ரெண்டுக்கு அஞ்சு ரூவா தர்றயில்ல. அத மாதிரி இதையும் அவசர பிரச்சனையா நெனச்சி செலவு பண்ணுங்குது.

 

இந்த இடத்துலதான் எனக்கு சட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. உடனே ‘அம்மா இனிமே புள்ளைய பேசாம ஸ்கூலுக்கு அனுப்பவேண்டாம். உங்க காலம் மாதிரியே அவ கை தலைய சுத்தி காத தொடும்போது ஸ்கூலுக்குப் போகட்டும். அப்படியே இந்த டீவிய தூக்கி பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளை பிளாஸ்டிக்குக்கு போட்டுடுவோம்’னு சொன்னேன். உடனே எங்கம்மா ‘ஆமாப்பா. பேசாம. அதையே பண்ணிரெலாம். பாவம் சின்ன வயசு அவளால முடியல அவ என்ன பண்ணுவா? நம்பனால நம்ப புள்ளையதான் ஸ்கூல விட்டு நிறுத்தமுடியும். பாவம் நம்ப முதலமைச்சர் பெரிய மனுசன். அவராலயும் முடியல. அவர முதலமைச்சரா இருக்கறதவிட்டு நிறுத்திரலாம்னு யாராச்சும் நினைச்சா தேவல’ன்னு சொல்றாங்க. நான் என்ன சொல்ல முடியும் தலைவரே?

 

எம் புள்ள இந்த பிஞ்சு வயசுலேயே ஸ்கூலுக்கு போலாமா வேண்டாமான்னுதான் நான் முடிவு பண்ண முடியும். ஏன்னா அவ எம் புள்ள. அதே மாதிரி நீங்க எங்க தலைவரு. உங்கனாலயும் முடியல. நீங்க சட்டசபைக்குப் போக வேண்டான்னு இந்த மக்கள் முடிவு பண்ண மாட்டேங்கறாங்க. உங்க மேல பாசமே இல்லாத மக்கள். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்.

 

எம்புள்ள பாட்டி செத்ததுக்கு பத்து நாள் லீவு போட்டாலே அவங்க மிஸ்ஸூ ‘நீயெல்லாம் ஒரு நல்ல ஸ்டுடண்டா? டாக்டர் சர்டிபிக்கட் எங்க? இஞ்சினீயர் பிளான் எங்க’ன்னல்லாம் திட்டறாங்கலாம். நீங்க பல வருசமா சட்டசபைக்கே போகாம இருந்தீங்களே நீங்கெல்லாம் நல்ல எம்.எல்.ஏவான்னு உங்கள யாரும் கேள்வியே கேக்கலையே தலைவரே.

 

இந்திய குடிமகன்ற உரிமையை மட்டும் வெச்சுட்டு தமிழ் பேசி தமிழக கடலோரத்துல மீன புடிச்சிட்டிருந்த நானுத்தி சொச்சம் பேர இலங்கை ராணுவம் கொன்னு போட்டுச்சே அப்பக்கூட ஒரு நாட்டோட குடிமகனை காப்பாத்த வக்கில்லாத அரசாங்கம் என்ன அரசாங்கம்? அவன் உயிருக்கு உத்தரவாதம் தராத நாடு ஒரு நாடா? அப்படி ஒரு நாடு தேவையான்னு சத்தமா குரல் கொடுக்க கையாலாகாத இந்த மக்களா உங்கள அப்படியொரு கேள்வி கேக்கப் போறங்க?

 

எங்கேயோ பிரான்ஸ்ல ஒரு சீக்கிய இளைஞனோட தலப்பாகைய களைச்சிட்டு மயிர இழுத்து பாத்ததுக்கே கொதிச்சு எந்திரிச்சு அவனுக்காக பிரான்ஸ்கிட்ட பேச இந்திய மந்திரிய அனுப்பிச்சாங்க சீக்கிய மக்கள். அப்பக் கூட ‘அடே மத்திய அரசே சீக்கியனோட மயிருக்கிருக்கிற மரியாத கூட தமிழன் உயிருக்கு இல்லையா’ன்னு வீதிக்கு வந்து கேக்க நாதியத்த ஊமப் பயலுக உங்களப் பாத்து கேள்வி கேப்பாங்க? ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கே உரிய மத உணர்வுகளை மதிச்ச அரசாங்கமே தெனம் தெனம் செத்துப் பிழைக்கற தமிழ் மனித உயிர்களை ஏண்டா புரிஞ்சிக்கலன்னு ஒன்னு கூடி ஒப்பாரி வைக்கக் கூட கையாலாகாத இந்த தமிழனுகளா உங்களப் பாத்து விரல் நீட்டிப் பேசுவானுங்க? வாய்ப்பே இல்லை தலைவரே. அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும் தலைவரே. அதெல்லாம் ஏதோ உங்க மாதிரி ஆளுக பேச்சுல இருக்கிற புறநானுறுலயும். அகநானுறுலயும் கேக்கறதோட சரி. விஜயோட வில்லுலயும், விக்ரமோட அந்நியன்லேயும் பாக்கறதோட சரி.

 

ஊர்ல வேலவெட்டிக்குப் போகாத பெருசுக கோயில் அரசமரத் திண்ணைல உக்காந்திட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடும்போது பேசிட்டு இருந்ததை ஒரு நாள் கேட்டேன். (நான் ஏன் வேலைக்குப் போலைன்னு கேக்கமாட்டீங்க நீங்க. ஏன்னா இருக்கிற கரண்டு கட்டுல எல்லா வேலையும் என்ன லட்சணத்துல நடக்குதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும்) அதுல ஒரு பழமொழி டக்குன்னு மனசுக்குள்ள வந்து அப்படியே சம்மணம் போட்டு உக்காந்துருச்சுங்க தலைவரே. அது என்னன்னா.

 

மேட்டங்காட்ட உழுதவனும் கெட்டான்
மேனா மினுக்கிய கட்டுனவனும் கெட்டான்.

 

அதென்னமோ நீங்க ஜெயலலிதா அம்மாவோட பழைய செருப்பு, புது செருப்பு, நகை, நட்டு, போல்டு எல்லாத்தையும் அப்போ உங்களோடதா இருந்த சன் டீவியில போட்டுப் போட்டு காட்டி அந்தம்மாவ மக்கள் முன்னாடி மேனா மினுக்கியாவே சித்தரிச்சுட்டீங்க. அந்தம்மாவுக்கு முதலமைச்சர் பட்டம் கட்டுனவனும் கெட்டான்னு நீங்க சொன்னதா நெனச்சுதான் நம்ம தமிழ்ப் பயலுகலெல்லாம் உங்களுக்கு ஓட்டு போட்டு உங்கள மொதலமைச்சரா ஆக்குனாங்களோன்னு ஒரு சந்தேகம் எனக்கு. மேனாமினுக்கிக்கு மொதலமைச்சரா பட்டங்கட்டி கெடக் கூடாதுன்னு நெனச்ச வீணாபோன தமிழன் அப்படியே உங்களுக்கு ஓட்டக் குத்தனான் பாருங்க. அப்ப தெரியல நாம மேட்டாங்காட்ட உழுது கெடப்போறோம்னு. இப்ப புரிஞ்சுதுன்னு புலம்பி என்ன பிரியோஜனம் இல்லீங்களா தலைவரே.

 

இப்ப இன்னொன்னுங்கூட தோணுது தலைவரே. பேசாம இதுக்கு மேனா மினுக்கிய கட்டியே கெட்டிருக்கலாம். ஏன்னு கேளுங்க. அந்தம்மா மட்டும் இப்ப முதலமைச்சாரா இருந்திருந்தா எப்படியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராத்ததான் முடிவெடுத்திருப்பாங்க. (இப்ப மட்டும் என்ன வாழுதாம்) அப்படி ஒருசமயத்தில எதிர்கட்சியா மட்டும் நீங்க இருந்திருந்தா உங்களுக்கு முதுகுவலி வந்திருக்குமா? இல்ல முடியாமதான் போயிருக்குமா? அப்ப யாராச்சும் இந்த மாதிரி படுத்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க. எத்தனை பேருக்கு தமிழின துரோகின்னு பட்டங்கட்டியிருப்பீங்க? கால்குலேட்டர் வெச்சாவது கணக்குப் போட்டுப்பாருங்க. அப்படி ஒரு சூழல்ல முரசொலில நீங்க எழுதற லெடடர்களும் அதுல நீங்க குடுக்கற புள்ளி விவரங்களும் என்னவா இருந்திருக்கும். இன்னைக்கு தமிழ்நாடு பூர எழுச்சி உண்டுபண்ணியிருக்கிற முத்துக் குமாரோட இறுதியறிக்கை எழுத்தெல்லாம் உங்க எழுத்துக்கு முன்னாடி கால் தூசிக்குப் பெறுமா? அவன மாதிரி ஒரு தமிழ் போராளி உயிர் போகுமளவுக்கு மந்தமாகத்தான் நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருப்பீங்களா? யோசுச்சுப் பாருங்க தலைவரே.

 

ஜெயலலிதா மட்டும் முதல்வரா இருந்திருந்தா வாழ்வோ, சாவோ, போராடிப் பாப்போம்னு எல்லாரும் அந்தம்மாவ எதிர்த்து நின்னிருப்பாங்க. ஆனா துரதிஸ்டவசமா நீங்க முதலமைச்சர். நீங்க போராட்டத்த முன்னெடுப்பீங்கற ஒரே காரணத்துக்கா தான் உங்களுக்காக எல்லாரும் காத்திருந்தாங்க. நீங்க என்ன செஞ்சீங்க? உங்களுக்கு முன்னால இருந்த வராலாற்றுக் கடமை என்ன? நீங்க செஞ்சிட்டு இருக்கிறது என்ன? நீங்க மட்டும் ஒரு தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தா ஒரு போராளி செத்திருப்பானா? யோசிச்சுப்பாருங்க தலைவரே.

 

இந்த நேரத்துல நாங்க ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம் இல்ல இல்லை நீங்க அந்த கட்டாயத்துக்கு எங்கள தள்ளீட்டீங்க தலைவரே. உடலை எரிச்சு உயிரைவிட நாங்க எல்லாரும் தைரியசாலிகளில்லை. ஆனாலும் எதையாவது எரிச்சு எங்க எதிர்ப்பை காட்டுற அளவுக்கு எங்க ஒடம்புலயும் தன்மான தமிழ்ரத்தம் கொஞ்சமாச்சு ஓடுது. அதனால நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன். தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என் கைக்கு ஒரு சூட்ட போட்டுடலாம்னு இருக்கேன். ஓட்டுபோட அனுமதி அளிக்கிற உங்க அரசாங்கம் சூடுபோட அனுமதி தருமா? ஏன்னா நாளைக்கு உங்களுக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையான்னு எவனும் என்னப் பாத்து ஒரு கேள்வி கேட்டுற கூடாதில்லீங்களா தலைவரே!

 

உங்க அளவுக்கு இல்லைன்னாலும் உங்கள்ல ஒரு ஐஞ்சு பர்ஸண்ட் அறிவாவது இருந்திருந்தா தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என்ன மாதிரி எல்லாருக்கும் முரசொலிலயோ. இல்ல என் மூக்கு சளிலயோ அலைகடலென திரண்டு வா உடன்பிறப்பே. தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட கைக்கு ஒரு சூட்டை போட சூரியனாய் எழுந்து வா உடன்பிறப்புகளேன்னு எழுதி ஒரு கூட்டங் கூட்டி இருப்பேன். ஆனா அந்த அளவுக்கு அறிவோ, பணமோ, அதிகார பலமோ இல்லாத என்னால என்ன பண்ணமுடியும்? தனியா ஒத்த ஆளா நின்னு இனிமே திமுகவுக்கு ஓட்டு போடுவியா கேட்டு என் வலது கையில வலிக்கிற மாதிரி ஒரு சூடு போடுவேன். இதுல உடன்பாடு இருக்கிற எல்லாரும் சேர்ந்து சூடுபோட போடலாம்னு முடிவெடுத்து ஒரு நாள் ஒரு இடம் ஒரு நேரம் குறிச்சா அதில நானும் ஒருத்தனா பங்கெடுக்க முடியும் அவ்வளவுதான்.

 

அடுத்தவன் போயிட்டு வந்ததுக்கு பேராசிரியர் விளக்கம் சொல்ற மாதிரி யார் யாரோ சூடு போட நான் ஏற்பாடு பண்ற அளவுக்கு என்னைய நான் இன்னும் வளர்த்துக்கல. ஆமா தலைவரே பேச்சுவார்த்தை நல்லாயிருக்கு. மேனனோட பயணம் ஓ.கே. பிரணாப் முகர்ஜியோட பயணம் ஓ.கே.ன்னு எல்லாம் சொல்றீங்களே. அப்ப நெஜமாலுமே இலங்கை அரசாங்கம் செய்றதெல்லாம் சரிதானுங்களா.

 

எனக்கு ஒரு சந்தேகம் முல்லைத்தீவு பகுதில 2 லட்சம் தமிழர்கள் மாட்டீட்டாங்க. இலங்கை அரசு இந்திய அரசு இவங்கல்லாம் சொல்ற மாதிரி புலிகள் தீவிரவாதிகள்னே வச்சிக்கிடுவோம். 2 லட்சம் தமிழர்கள் புலிகள் கிட்ட மாட்டி முல்லை தீவுல இருக்காங்கன்னே வச்சுக்குவோம். இப்ப இலங்கை அரசாங்கம் சொல்லுது மக்கள் வெளியே வராவிட்டால் அவர்கள் உயிருக்கு இலங்கை அரசு பொறுப்பேற்காதுன்னு. இது எந்த வகைல நியாயம்? விடுதலைப் புலிகளே தீவிரவாதிகளாச்சே. அவங்க மக்களை விடமாட்டாங்கதான அப்புறம் எப்படி அந்த மக்கள் வெளியே வருவாங்க. வெளியே வந்தா நீங்க சொல்ற மாதிரி புலிகள் கொல்லுவாங்க (ஏன்னா அவங்க தீவிரவாதிகள்) வரலைன்னா நீங்க குண்டு போடுவீங்க. அப்ப அந்த மக்களுக்கு வாழ்வதற்கு உரிமை உண்டா? இல்லையா?

 

ஆமா போனா மாசம் மும்பைல தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலை புடிச்சப்ப மக்களே நீங்களே வெளியே வந்திருங்க. இல்லைன்னா உங்க உயிருக்கு நாங்க பாதுகாப்பு தரமுடியாதுன்னு சொல்லி உங்க மத்திய அரசாங்கம் குண்டு போட்டிருந்தா மூனுநாள் யுத்தம் நடந்தே இருக்காதே. ஏன் குண்டு போடுல? அங்கிருந்தவனெல்லாம் முதலாளிகள். வெளிநாட்டுக்காரர்கள். ஏன்? என்ன காரணத்துனால உங்க மத்திய அரசு தாஜ் ஹோட்டல் மேல குண்டு போடல? ஒருவேளை இழிச்சவாய தமிழ்ப் பயலுக மட்டும் உள்ளார இருந்திருந்தா குண்டு போட்டிருப்பீங்க. ஏன்னா கேக்க நாதியத்த கேணப்பயலுகதான தமிழ் பயலுக.

 

நீங்க சொல்லுங்க தலைவரே. மும்பைல தீவிரவாதிகள் மேல இந்திய இராணுவம் குண்டு போடாதது சரின்னா. முல்லைத்தீவுல புலிகள் மீது குண்டு போடாம இருக்கறதுதானே சரி. முல்லைத்தீவுல குண்டு போடறது சரின்னா? இந்திய ராணுவம் தாஜ் ஹோட்டல் மேல குண்டு போட்டு ஒரேநாள்ள தீவிரவாதிகள அழிச்சிருக்கலாம்ல. அது தான சரி. ஒரு பதிலச் சொல்லுங்க தலைவரே.

 

இதையெல்லாம் ஏன் காங்கிரஸ்காரங்கிட்ட கேக்காம உங்ககிட்ட கேக்கறோம் தெரியுங்களா தலைவரே! அவனெல்லம் ஒரு ஆளு மயிருனு நமக்கு சமானமா ஒக்கார வெச்சுப் பேச நானொன்னும் மானங்கெட்ட திமுககாரனில்லீங்க தலைவரே.

நம்ம வெளியீட்டு கழக செயலாளர் திருச்சி செல்வேந்திரன் அய்யா முன்ன ஒருதடவை கூட்டத்துல பேசும்போது சொன்னாரு “காங்கிரஸ்காரன திட்டாதீங்கய்ய! அவன் ஒரு கோயில் மாடு. அத பாத்தீங்கன்னா கொஞ்ச நேரம் குப்ப தொட்டீல வாய வெக்கும். அப்பறம் மார்கெட்டுக்கு வரும். கொஞ்ச நேரம் மார்கெட்டுலயும் வாய வெக்கும். யாரும் அத திட்டமாட்டங்க. ஏன்ன அது கோயில் மாடு. காங்கிரஸ்காரனும் அப்பிடிதான். கொஞ்ச நாள் திமுக கூட இருப்பான். கொஞ்ச நாள் அதிமுக கூட இருப்பான். அவன திட்டாதீங்கய்ய பாவம் அவன் ஒரு கோயில் மாடு” அதனாலதான் அவன நாங்க திட்டல தலைவரே. அப்பறம் மார்கெட் யாரு குப்ப தொட்டி யாருன்னு கேட்டு சொல்லுங்களே. ஏன்னா செல்வேந்திரன் அய்யா நாங்க கேட்டா இப்ப சொல்ல மாட்டாரு.

 

எந்த மொழி பேசி உங்க வாழ்க்கையை துவங்கினீங்களோ, எந்த மொழி உங்களுக்கு இந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொடுத்ததோ, எந்த மொழிபேசுகிற மக்கள் உங்களை உலக தலைவர்ன்னு கொண்டாடுகிறாங்களோ, அந்த மொழி பேசுகிற ஒரேயொரு காரணத்துக்காக ஒதுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்டு, இருக்க இடம், குடிக்க நீர் ஏதுமின்றி அனாதைகளாக அலையுறாங்களே…… நம்ம மொழி பேசுகிற அந்த மக்கள் உங்கள் சமகாலத்தில் சமாதியாக்கப்பட்டால் அதை அப்படியே சரித்திரம் பதிவு செய்யுமே என்ன செய்ய போகிறீங்க?

 

தயவு செய்து அவங்களுக்கும் உங்க இதயத்துல இடம் இருக்குதுன்னு மட்டும் சொல்லீறாதீங்க. ஏன்னா தேர்தல்ல நிக்க கூட இடங்குடுக்காதவங்களுக்கு எல்லாம் நீங்க இதயத்திலதான் இடம் கொடுப்பீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா ஈழத்துல நம்ம மக்கள் உட்கார, நிற்க, நடக்க சுதந்திரமாக வாழ, தன்னைத்தானே ஆள ஒரு நிலத்தை கேக்கறாங்க. அதுக்காக போராடறாங்க. அதுனால தயுவு செஞ்சு அவங்களுக்கு உங்க இதயத்துல இடங்குடுத்து கேவலப்படுத்தீறாதீங்க தலைவரே

 

கடைசி ஒன்னே ஒன்னு அந்த ஒன்னுக்கு மேட்டருதான் தலைவரே! இரண்டு, மூணு நாளா புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பறதில்ல. அதனால ராத்திரியில அவ ஒன்னுக்கும் போறதில்ல. ஒரு வழியா பிரச்சனை எனக்கு முடிஞ்சிபோச்சுது. நீங்களும் பேசாம இன்னைல்ல இருந்து மொதலமைச்சரா போறதில்லைன்னு ஒரு முடிவு பண்ணுங்க. ஒரு வேள உங்க முதுகுவலி போனாலும் போயிரும்

 

இப்படிக்கு
இரா.செந்தில்குமார்

 

பின் குறிப்பு: ஒரு மூத்த தலைவருடைய உடல்நலக் குறைவை மோசமாக விமர்சனம் செய்வது நாகரிகம் இல்லைதான் இருந்தாலும் என் கோபம் உண்மையானதெனில் அதில் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. நாகரிகமாக நான் கோபப்பட்டால் அதில் உண்மை இருக்க முடியாது. இந்த வார்த்தைகள் உங்களுக்கு வலிக்கும்தான் இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாய் உங்களையே நம்பி இருந்த என் போன்றவர்களின் இதயத்திலிருக்கும் வலியோடு ஒப்பிட்டால் உங்கள் வலி ஒரு பொருட்டல்ல…. ஓட்டுப்போட எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ திட்டவும் அதே உரிமை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

 

 இரா.செந்தில்குமார் (covaibhai@gmail.com

  நன்றி-கீற்று.காம்

Follow

Get every new post delivered to your Inbox.