ஞாநியின் ஓ பக்கங்கள் – பத்திரிகையாளர்களின் ஓட்டைக் கண்டனங்கள்!!


aiyo-aiyo.jpg

    

தமிழக முதல்வரும், திமு க. தலைவருமான கருணாநிதியைக் கொச்சைப்படுத்தி, ஆனந்த விகடனில், பத்திரிகையாளர் ஞாநியின் “விருப்பப்படி இருக்க விடுங்கள்” என்ற தலைப்பில் எழுதியதை அனைத்துத் தரபினரும் கண்டித்துள்ளனர்।இதனிடையே, ஞாநியின் அநாகரீகமான எழுத்தைக் கண்டித்து, தமிழகத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி கண்டனக் கூட்டம் நடத்தியுள்ளனர். ‘தீம்புனல்’ சார்பில் சென்னை வாணி மகாலில் 20.10.07 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் ஆரம்பித்து இரவு 10 மணிவரையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கவிஞர் இளையபாரதி வரவேற்று பேசினார். கவிஞர் தமிழச்சி முகவுரை ஆற்றினார். பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கவிஞர் அறிவுமதி, கவிஞர் கரிகாலன், பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர் சல்மா, எழுத்தாளர் இமயம், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பேராசிரியர் வீ.அரசு, தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன், பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி, கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் பிரபஞசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இறையன்பன் குத்தூஸ் சிறப்புப் பாடல் பாடினார்.

கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்…. இதோ விமர்சனங்கள்…….

முகப்புரைக்கேற்ற – தமிழச்சி
தனி மனிதக் கண்டனக் கூட்டம் தேவை தானா ! என நாங்கள் நினைத்த பொழுது- புரிந்தும் புரியாமலும்
விளக்கி- நீ என்ன மாமனா மச்சானா என்ற கேள்வியோடு முடித்து கொண்டார்

தொரப்பாடி ஜெயிலுக்குள்ளே! – அறிவுமதி
பாவம் பெரியாரின் முகத்தைப் பெரியவரிடம்
காண்கிறார்! – சரி இருக்கட்டும்
தொண்ணூற்று மூன்றாம் வயதிலும் போராடிய பெரியாரின் தியாகத்தை – நினைத்து
கம்முகிரார்! விம்முகிறார்!- ஆனால் வெளிவரும் கண்ணீர் பெரியவருக்காக?- என வைத்துக்கொள்வோம்!
உணர்ச்சி வசப்படுதல் என்பது – தற்காலிகமானது என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?

பேராசிரியர் அ.மார்க்ஸ் பேச்சு அக்மார்க்
பெரியவர் புராணம் இல்லை
ஞாநியின் வஞ்ச இகழ்ச்சியினை
தெளிவு பெற எடுத்துக்காட்டி
கனிமொழியிடம் சில கேள்விகளையும்
தொடுத்து- மொழியின் மவுனததைக் கலைக்க வேண்டுமெனக் கூறி கலகலத்தார் – நாங்களுந்தான்

பிழைக்கக் கற்று கொண்ட – ரவிக்குமார்
பெரியாரையே பழித்த பெரியவர் இவர்?- ஆக பெரியவர் புராணத்தையும் படிகத்தவறவில்லை அக மகிழ்ந்தார்! புகழ்ந்தார்! ஆர்ப்பரித்தார்- பிறகு நாட்டையே மாற்றும் வண்ணப் பெட்டியைக் கொடுப்பவரல்லவா!
தமிழகப் பெரியவர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்தவரல்லவா- நடைமுறைப்படுத்தாமல் பேசாமல் நீவிர் பெரியவர் கழகத்திலேயே தஞ்சம் அடையலாம்!
தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்கிறீரோ
அதுவும் சரிதான்……

வானம் வசப்படும்- பிரபஞ்சதிட்டம்
பெரியார் புராணமும் பாடவில்லை
பெரியவர் புராணமும் இல்லை
சுயப்புராணம் ஒன்றே இவருக்கு தெரிந்தது
ஞாநி யார்? ஞானி யார்?
என்று புரிய வைத்தது இவர் தானாம்
இந்த ஞாநிக்கு அஞ்ஞாநி என்று
பெயர் வைத்ததும் இவர் தானாம் – என்கிறது
இவர் புராணம.
உலகப் பத்திரிகையாளர்-எ.ஸ்.பன்னீர் செல்வம்
ஏனோ இவரிடம் அவாள் வாடை வீசுகின்றது
படிச்சுண்டு! சொல்லிண்டு! கேட்டுண்டு!
ஞாநியை சிவப்பு சட்டைப் போட்டுக்கொண்டு- காவி வார்த்தை பேசாதே என்றார்.
கருத்தில் தெளிவு- ஆனாலும்
இட ஒதுக்கீடு- பகுத்தறிவு போட்ட பிச்சை என்று கொச்சை வார்த்தை பேசிக் காயப்படுத்தினார்।

இவை எல்லாம் இருக்கட்டும்
ஞாநி வார்த்தை கண்டனத்திற்கு உரியதே!

வேட்டியில் மூத்திரம் போய்விட்டதாக
ஓலமிடுகிராயே – முதலில் நீ உன்
கோவணத்தை சுத்தமாக வைத்துக்கொள்
மற்றவரிடம் இருக்கும் பொது நற்குணத்தைப்
பார்க்காமல்- உடற்கோளாரைப் பற்றி
சொல்கிறாயே- இதுதான் அறிந்தும்
அறியாமலும் நீ அறிந்து கொண்டதா…..
உனது பக்கங்கள் ஓ பக்கங்கள் அல்ல!
ஓட்டைப் பக்கங்கள்!

தீம்புனல் படைப்பாளிகள் அமைப்பு
வேதாந்தியிடம் வேதம் கற்கச்
சென்றிருந்ததோ-ஃபத்வாவின் பொழுது
உன் தீ என்ன கனலாக இருந்ததோ! மூடர்களே உங்களுக்குத் தெரியாதா! தீயின் கனல் தான்
பெருந்தீயை உருவாக்குமென்று!- ஓ
அந்த ஆரியத் தீயை இந்தத் தீயால்
எரிக்க முடியாதென்ற அறியாமையோ!!!!!!

Advertisements

2 பதில்கள் to “ஞாநியின் ஓ பக்கங்கள் – பத்திரிகையாளர்களின் ஓட்டைக் கண்டனங்கள்!!”

  1. pls visit my site lightink.wordpress.com and pls write u r comments

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: