அமைதியைக் குலைப்போம் !
அமைதியைக் குலைப்போம் !
கழுகுகள் வல்லூறுகள்
மென்மையான
புறாக்களின் சிறகுகளை
பிய்த்தெரிகின்றன
அதனால்
பறவைகளின் ராஜ்ஜீயத்தில்
அமைதி……
சுராக்கள் திமிங்கிலங்கள்
கெண்டைக் கெழுத்திகளை
கெண்டைக் கெழுத்திகளை
வால் துடிக்கத் துடிக்க
விழுங்குகின்றன
அதனால்
கடலுக்குள் அமைதி…..
பதுங்கி ஒதுங்கி வாழும்
மான், முயல்
இவைகளின் எலும்புகள் தான்
இரைந்து கிடக்கின்றன
கடைவாய்ப் பற்களில்
ரத்தம் வழிய
சிங்கம், புலிகள்
அதனால்
காட்டில் அமைதி………
மான், முயல்
இவைகளின் எலும்புகள் தான்
இரைந்து கிடக்கின்றன
கடைவாய்ப் பற்களில்
ரத்தம் வழிய
சிங்கம், புலிகள்
அதனால்
காட்டில் அமைதி………
அடிமைகள்
அடங்கிக் கிடப்பதால்
ஆண்டை களின் கெக்கலிப்பு
அதனால்
அந்தப்புரத்திலும் அமைதி……
அடங்கிக் கிடப்பதால்
ஆண்டை களின் கெக்கலிப்பு
அதனால்
அந்தப்புரத்திலும் அமைதி……
அமைதியாய் இருக்க
அறிவுறுத்துகிறார்கள்
புரிந்துவிட்டது!
அமைதியின் அர்த்தம்
அதனால்
அமைதியைக் குலைப்போம் !!!!!
……………முன்னவன்
அறிவுறுத்துகிறார்கள்
புரிந்துவிட்டது!
அமைதியின் அர்த்தம்
அதனால்
அமைதியைக் குலைப்போம் !!!!!
……………முன்னவன்
மறுமொழியொன்றை இடுங்கள்