கோ-பேண்டவன விட்டுட்டு பீய வெட்ற மாதிரி………


கோ – விமர்சனம்

நேற்று (23.04.11) படத்திற்குப் போகலாம் என்று என் அறை நண்பன் கூப்பிட, அன்று ரிலீஸாகியிருந்த கோ படத்திற்குப் போகலாம் என்று சொன்ன நண்பனுடன், அன்றிரவே படம் பார்க்கக் கிளம்பினேன்.
கவனிக்க…….
கதை வசனம் – க்ரைம் சுபா (திரில்லர் நாவல் எழுதும் சுரேஷ்-பாலகிருஷ்ணன்)
இயக்கம் – கே.வி.ஆனந்த் (கனா கண்டேன், அயன் படம் எடுத்த மாபெரும் இயக்குனர்)

நாய்களா (கே.வி.ஆனந்த், சுரேஷ், பாலகிருஷ்ணன்) ஒங்க அரிப்புக்கு நக்ஸல் தான் கெடச்சாங்களா …நாட்டுல படம் எடுக்க கண்ட கருமங்கள் இருக்க இவர்கள் உங்க வாயிக்கு அவல் ஆகிட்டாங்க. பேண்டவன விட்டுட்டு பீய வெட்ற கதையா எவனோ திருடுறான், எவனோ பாம் வெக்கிறான், எவனோ கொல பன்றான், ஆனா நாட்ல எது நடந்தாலும் அதுக்கு நக்ஸல் தான் காரணமா?அரசு தான் தீவிரமாக இது போன்ற விஷம வேலைகளை செய்கிறது என்றால்,இவனுங்களும் சேர்ந்து…… நல்லா இருக்குதுடா ஒங்க கத………

சொல்லப்போனால் இன்னும் பல சொல்லி இவர்களைத் திட்டித் தீர்க்கலாம் என்றுதான் ஆசை, ஏனென்றால் திட்டுவதற்கு மேல் அப்படத்தில் ஒன்றுமில்லை, அனால் படிப்பவர்களுக்கு சலிப்பு தட்டக் கூடாதல்லவா , அதுமட்டுமல்லாமல் தர்க்க ரீதியில் விமர்சனம் செய்யும் பொழுதுதான் மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதாலேயே கடுமையான வார்த்தைகளைத் தவிர்க்க விரும்புகிறேன், மீறி வந்து விட்டால் அது உண்மையான கோபத்தின் வெளிப்பாடே என புரிந்துகொள்ளவும்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு வங்கி கொள்ளையடிக்கப்படுகிறது, முகமூடிகளுடன் வெளியே வரும் கொள்ளயர்களை ஒரு தின பத்திரிக்கை போட்டோகாரனான ஜீரோ பார்த்துவிடுகிறார், அவர்கள் வேனில் ஏறி தப்பிக்கும் பொழுது வித விதமாக (பீட்டர் ஹெயின் உதவியால்) பறந்து பறந்து படமெடுத்துத் தள்ளுகிறார் ஜீரோ, இதை அவர்கள் பார்த்து ஜீரோவைப் பிடிக்க ச்சேசிங் செய்து வர….பலவித தில்லாலங்கடி வேலை செய்து தப்பிக்கிறார் ஜீரோ. தான் எடுத்த போட்டொக்களை போலிஸ் மாமாக்களிடம் காண்பிக்க …ஆஹா இதெல்லாம் நக்சல் வேலப்பா என அவரும் ஆரூடம் சொல்ல, ஹ்ம்ம்… இந்த நக்சல் கோயம்புத்தூருல கொண்டு வெச்சவன், இவன் தருமபுரில குண்டு வெச்சவன் என ஒவ்வொரு தீவிரவாதிகளையும் அடையாளம் காண்பிக்கிறார் போலிஸ் மாமா.

இதனால் ஜீரோவுக்கு நக்சல் வெறுப்பு வருது…கூடவே பாக்குற பாமரனுக்கும் வெறுப்பு வரனுமே…ச்சே நக்ஸல்னாலே இப்படித்தான் போல என நினைக்கனுமே… அதுக்காகத்தான படம் எடுத்ததே…….. இந்த தேசபக்தி கோமானுங்க இருக்கானுங்களே!!!

சரிதான் நக்சல் தான் ஒங்க போதைக்கு ஊற்கா போல என நினைத்துக்கொண்டே படம் பார்க்க…..மேலும் மேலும் அதிகமா தேசபத்தி போத ஏற….அதிகமா ஊற்கா தொட்டுக்க ஆரம்பிக்கிறான் நம்ம தேசபத்திகாரன்…..அத பாக்குற நமக்கும் ஜிவ்வுனு கோவம் ஏறுது……பாமரனுக்கும் தேசபத்தி போத ஏறுது……கூடவே ஹீரோயினு போர் நடந்தப்ப ஈழம் பத்தி கவர் ஸ்டோரி எழுதினவங்கலாம்….. இது ஒரு முற்போக்கு போதை போல ( படம் எடுத்தவங்களுக்கும் ஈழம் பற்றியான செய்தி தெரியுதுள்ளதாம்-ஈழம் மற்றொரு ஊறுகாய்)

அப்புறம் இவனுங்க எப்படி லாவகமா சரக்கடிச்சுகினே ஊற்கா தொட்டுக்கிறானுங்கன்னு பாப்போம்

அடுத்ததா நாட்ட காப்பாத்த, சிறகுகள் என்கிற இளைஞர்கள் இயக்கம் ஆரம்பித்து பிழைப்புவாதிகளாக இருக்கும் இளைஞர்களை தேர்தலில் நிற்க வைத்து செயிக்கிறாரு நம்ம செகண்டு ஹீரோ….ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு இடையில், அவர்கள் கொடுக்கும் இன்னல்களுக்கிடையில் (எறிகற குடிசையில் பொம்பளையையும், ஒரு குழந்தையையும் காப்பாத்துறது, சிறகுகள் நடத்துற பொதுக்கூட்ட மேடையில பாம் வெக்கிறது- அங்க ஜீரோவோட பெண் பிரண்டு அப்புறம் 30 க்கும் மேலான பொதுமக்கள் சாகிறது, மாற்று கட்சியினர் சிறகுகள் குழிவினரை அடித்து நொறுக்குவது – இது எல்லாத்தையும் நம்ம ஜீரோ படம் புடிச்சு சிறகுகளுக்கு பப்ளிக்குட்டி தேடி கொடுக்கிறது,அதனால தேர்தல்ல சிறகுகளுக்கு அதிக ஓட்டு உழுதாம் ) செகண்டு ஹீரோ ஜெயிச்சு சி.எம் ஆகுறாரு. உடனே 20 நக்சல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குறாரு நம்ம சி.எம். இப்பொதான் நம்ம ஜீரோ களத்துக்கு வந்து எல்லா உண்மையையும் கண்டுபுடிக்கிறாரு.

அதாவது….. நக்சல் தீவிரவாதிங்கல்லாம் சேந்து நம்ம செகண்டு ஹிரோ சி.எம் ஆக செலவு செஞ்சு படிக்க வெக்கிறாங்க, சிறகுகள்ல கொஞ்சம் பேரு தேர்தல்ல ஜெயிச்சு நக்சலுக்கு ஆதரவா குரல் கொடுக்க, போராட, இந்த நக்சல் கும்பல் பல தில்லாலங்கடி வேல செய்யுது. (அந்த தீய வெச்சது குடிசைல இருந்த நக்சல் பெண்தானாம், நக்சல் கும்பல் தான் சிறகுகள் கும்பல ஓட ஒட விரட்டி அடிச்சுதாம்,பொதுக்கூட்ட மேடைல அனுதாப ஓட்டு வாங்க செகண்ட் ஹீரோவோட சேந்து பாம் வெச்சதும் இவுங்கதானாம்)
இதெல்லாம் தெரிஞ்சவுடனே நம்ம ஜீரோ அந்த நக்சல் கிட்ட போய் ஏன்டா நீங்கல்லாம் ட்ரெயின்ல பாம்வக்கிறது, திருடுறது இப்படில்லாம் பன்றீங்க என கோபம் கொப்பளிக்க கேட்க, நீங்கல்லாம் ஒடுக்கப்பட்டவங்களா இருந்தா உங்களுக்கு எங்க கஷ்டம் தெரியும்டா என நக்சல் சொல்ல, போதை தலைக்கேறிய நம்ம ஜீரோ, என்னங்கடா? வெளையாடுரீங்களா,அரசியல் வாதிங்க ஊழல்,லஞ்சம்னு சொல்ற மாதிரி நீங்க ஒடுக்கப்பட்டவனுங்கன்னு சொல்லி ஏமாத்துறிங்களா என தேசபத்தி போதையேறி நக்சல் தீவிரவாதியை வாங்கு வாங்குவென வாங்குகிறார். சரியாக இங்கதான் நம்ம பாமரனின் சாதாரண நக்சல் வெருப்புக்கு மேலும் லிட்டர் கணக்கில் எண்ணெய் ஊற்றி, சாதாரணமாக எறியும் கொல்லியை பெருந்தீயாக்குகிறான் டைரக்டர்.

நக்சல்களின் உண்மையான தியாகத்தை மறைத்தும், அவர்களின் அர்ப்பணிப்பையும் பார்த்து எள்ளிநகையாடும் இப்படம் புரட்சியாளர்களின் உணர்வுகளைக் காதல் மூலம் மாற்றலாம் என கேலி செய்த அல்லது அவர்களின் உண்மையான போராட்டத்தை மறைத்து ஒரு பெண்ணிற்காக உயிரை விடக்கூடியவர்களாக சித்தறித்து எடுக்கப்பட்ட கழிசடைகளான உயிரே, ராவணன் படத்தைவிடவும் மிக மோசமான முன்னுதாரணத்தைக் கொடுக்கிறது இப்படம்.கண்ட கண்ட மூன்றாம் தரப்படங்களை எடுத்து அலுத்துவிட்ட இவர்களுக்கு முற்போக்கு போதை ஏறி பேராண்மை, கோ போன்ற குப்பைக்கூளங்களை எடுக்க ஆசைவந்ததன் விளைவே இப்படம்.

நக்சல் புரட்சியாளர்களை நாட்டின் கொடூரமான, மனிதத் தன்மையில்லாத, எந்த மொராலிட்டியும் இல்லாமல் திரியும் லும்பன் கூட்டமாக காண்பிக்கிறது இப்படம்.பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகு, சமீப காலங்களில் அவர்களுக்கென உருவாகியிருக்கும் சில ஆதரவு சக்திகளை மடை மாற்றவும், பாமரர்களுக்கு அடி மனதில் நக்சல் எதிர்ப்பு வெறியை ஊட்டவும் திட்டமிட்டே எடுக்கப்பட்ட படம் இது. இன்னும் சொல்லப்போனால் இது உளவுத்துறையின் ஸ்பெஷல் புராஜெக்ட் ஆக இருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. நக்சல்கள் ரயிலில் குண்டு வைத்துவிட்டார்கள், பல ராணுவ வீரர்களைக் கொன்று விட்டார்கள் என ஊடகங்களுக்கு செய்திகளைக் கொடுக்கிற அரசு, டிவி சேனல்கள் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிமார்கள், குழந்தைகள் கதறியழுவதை லைவ் டெலிகாஸ்ட் செய்து துட்டு பார்க்க மறுபக்கம் சந்தடி சாக்கில்லாமல் ஒரு நிமிடத்தில் லட்சக் கணக்கானவர்களிடம் சென்று சேரும் இந்த நக்சல் எதிர்ப்பு வெறியை சாமர்த்தியமாக செய்கிறது உளவுத்துறை.

புரட்சியாளர்களின் போராட்டங்களையும் அவர்களின் தியாகத்தையும் சுவடில்லாமல் செய்யும் ஒரு விஷயமாகவே இதைக் கருத முடியும்.மொத்தமாகப் புழுத்து நாறிக்கொண்டிருக்கும் இச்சமூகத்தை மாற்றமுயலும் நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு இது போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் ஒரு தூசு என்ற போதிலும், இது போன்ற கழிசடைப் படங்களைப் பார்த்து இவர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதே இக்கட்டுரையின் முதல் நோக்கம்,இப்படத்தை எடுத்தவர்களை அம்பலப்படுத்துவதும் மற்றொரு நோக்கம்.

ஆக திட்டமிட்டே மிகக் கொடூரமாக நக்ஸல் விரோதத்தை மக்களிடம் பரப்புவதற்கே இது போன்று கதைக் கருவை இவர்கள் கையாண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.

SIMPLY THIS FILM IS A CONSCIOUSLY FABRICATED ANTI-NAXAL PROPAGANDA
KO – GO TO DUST BIN

15 பதில்கள் -க்கு “கோ-பேண்டவன விட்டுட்டு பீய வெட்ற மாதிரி………”

  1. //..அத பாக்குற நமக்கும் ஜிவ்வுனு கோவம் ஏறுது…//

    உங்களுக்குன்னு சொல்லுங்க தல. நமக்குன்னு என்னை ஏன் இழுக்கறீங்க?

    • எங்களுக்கு தான் நண்பரே. ஏனெனில் எங்களுக்கு தான் கோபம் என்கிற உணர்ச்சி உடம்பில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சமூகப்பிரச்சினை குறித்தும், அதற்காகவே வாழ்க்கையை ஒப்படைத்திருக்கும் தோழர்கள் குறித்தும் அரைகுறை அறிவாளிகளும் அற்பவாதிகளும்-சொந்த வாழ்வில் பிழைப்புவாதிகளுமான சுபா-கே.வி.ஆனந்து வகையறாக்கள் உளறி வைப்பதை பார்க்கும் போது ஒடுக்கப்பட்ட மக்களின் மலம் தோய்த்த செருப்பாலேயே அவர்களை அடித்து துவைக்க வேண்டும் என்கிற கோபம் எங்களுக்குத் தான் வரும். அதே நேரத்தில் உங்களுக்கு என்ன உணர்ச்சி வருகிறது என்று எனக்குத்தெரியவில்லை, கூறினீர்கள் என்றால் மேற்கொண்டு பேச வசதியாக இருக்கும்.

      • நக்ஸல்பாரிகள் கொள்கையில் (மார்க்ஸியம் முக்கியமாக மாவோயிசம்) எமக்குப் பெரிய நம்பிக்கை ஏதுமில்லை. அது மட்டுமே உலகத்தை உய்விக்கும் ஒரே வழி என்று நான் எண்ணவில்லை. என்னளவில் மாவோயிசமும் தீவிர மத நம்பிக்கை போன்றதுதான்.

      • குட்டகொழப்பி Says:

        உங்களுக்கு நம்பிக்கை இல்லாததால அப்படி சொல்லலாமா……..நீங்க மார்க்ஸியம் பற்றி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்…….வாங்க அதப் பத்தி விவாதிக்கலாம்…….

      • உங்களுக்கு மார்க்சியம் பற்றி என்ன தெரியும்னு சொன்னீங்கன்னா மேற்கொண்டு பேசலாம்.

  2. //நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு இது போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் ஒரு தூசு என்ற போதிலும்//

    அப்புறம் ஏன் டென்சன் ஆவுறீங்க?

    • நீங்க ஏன் சார் மூச்சக்குடுத்து இப்படி பின்னூட்டமிடுகிறீர்கள் ?

      • நல்லது. எட்டிப் பார்ப்பவர்களையெல்லாம் விரட்டியடித்தால் ஆளில்லாத கடையில் தனியே டீ ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

      • குட்டகொழப்பி Says:

        நீங்க அப்படில்லாம் குதற்கமாக யோசிக்க வேண்டாம் நண்பரே…..அவங்களுடைய ஆதங்கத்தைச் சொன்னாங்க அவ்ளோதான்……..

      • உங்களை யாரும் எட்டிப்பார்கவோ உள்ளே வரவோ வேண்டாம் என்று சொல்லவில்லையே, தாராளமா வாங்க பேசுங்க.

  3. romba nalla irukku ….ungaloda pulambalgal purigirathu…..nallathoru katturai….

  4. வணக்கம் தோழர் நான் அமைப்பிற்கும் இணையத்திற்கும் புதிய தோழர் தமிழ்ச்செல்வி.

    கீழ்கண்ட இணைப்பிலுள்ள பதிவுகளை வாசித்துவிட்டீர்களா ? இல்லையெனில் வாசியுங்கள். நான் அவற்றை வாசித்து விட்டேன் எனவே உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்.

    http://kalaiy.blogspot.com/2009/08/blog-post.html

    • வணக்கம் தோழர்…

      தங்கள் ஆதரவிற்கு நன்றி…….தொடர்ந்து அமைப்பில் செயல்பட வாழ்த்துக்கள்,
      இணைப்பைக் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: