Archive for the கவிதைகள் Category

யாழன் ஆதி கவிதை

Posted in கவிதைகள், தலித் முரசு, SOCIAL ISSUES with tags , on ஓகஸ்ட் 25, 2008 by குட்டகொழப்பி

 

 

ஒற்றைக் கண்ணீர்த் துளியென
இரவின் மீதொரு துயரம்

உயர்ந்த கம்பங்களில்
தெறிக்கின்றது வெளிச்சம்

தார்ச்சாலையின் நீண்ட தனிமையில்
கொதிக்கிறது துயில்

இருளடைந்த வயிற்றுக்குள்
நிரம்பியிருக்கின்றன கைகள்

நூலறுந்த பகல்பட்டம் சிக்கிய
இரவின் துன்ப வனத்தில்
எழும்புகிறது பாடக்கனவு

கால்மடக்கி உடல்குறுக்கி
தலைதொங்கி காலத்தின் கைகளில்
பதுங்குகிறது உழைப்புத் தளிர்

இரக்கமற்ற சுரண்டலின்
குன்றாத வெப்பத்தில்
கனறுகிறது துரத்தப்பட்ட சுவாசக் காற்று

உழைத்துப் பசித்த அயர்வில்
தளும்பி நிற்கிறது
சாத்திய இமைகளோடு உயிர் எழுத்து

வெட்கமேயில்லாமல்
இழுத்துப் போர்த்திக் கொண்டு
மல்லாந்து தூங்குகிறது தேசம்

 

   ……………….நன்றி : தலித் முரசு 

அமைதியைக் குலைப்போம் !

Posted in இந்து பாசிச வெறி, கவிதைகள் on ஏப்ரல் 9, 2008 by குட்டகொழப்பி

அமைதியைக் குலைப்போம் !
 
கழுகுகள்  வல்லூறுகள்
மென்மையான
புறாக்களின் சிறகுகளை
பிய்த்தெரிகின்றன
அதனால்
பறவைகளின் ராஜ்ஜீயத்தில்
அமைதி…… 
 
சுராக்கள்  திமிங்கிலங்கள் 
கெண்டைக் கெழுத்திகளை
வால் துடிக்கத் துடிக்க
விழுங்குகின்றன
அதனால்
கடலுக்குள் அமைதி….. 
 
பதுங்கி ஒதுங்கி வாழும்
மான், முயல்
இவைகளின் எலும்புகள் தான்
இரைந்து கிடக்கின்றன
கடைவாய்ப் பற்களில்
ரத்தம் வழிய
சிங்கம், புலிகள்
அதனால்
காட்டில் அமைதி………
 
அடிமைகள்
அடங்கிக் கிடப்பதால்
ஆண்டை களின் கெக்கலிப்பு
அதனால்
அந்தப்புரத்திலும் அமைதி……
  
அமைதியாய் இருக்க
அறிவுறுத்துகிறார்கள்
புரிந்துவிட்டது!
அமைதியின் அர்த்தம்
அதனால்
அமைதியைக் குலைப்போம்  !!!!! 

                                         ……………முன்னவன் 

நான் விடுதலைக் களத்தில்…..

Posted in கவிதைகள் on ஜனவரி 23, 2008 by குட்டகொழப்பி

allthreejacobstruggle_nail.jpg

நீ என்னை காயப் படுத்தினால்

வரலாறு ஆகிவிடுவேன்!

நீ என்னை ஏசினால்

சிந்தனையாளன் ஆவேன்!

நீ என்னை அடித்தால்

விழித்துக் கொள்வேன்!

நீ என்னைக் காயப்போட்டால்

கவிதையாகி விடுவேன்!

நீ என்னை பொனமாக்கினால்

தியாகியாக எழுவேன்!

உன்னால் எனக்கொன்றும் அழிவில்லை

உனக்குத்தான் ஏனெனில்

நான் விடுதலைக் களத்தில்.

                                                                ……………………..தலையாரி

அம்பேத்கரும் இந்திய அரசியலும்……

Posted in கவிதைகள் on ஜனவரி 23, 2008 by குட்டகொழப்பி

law-maker.giflaw-breaker.gif

நாதியற்று நாலாப்பக்கமும்
புழுக்களாய் நெளிந்தவர்களை
வெடிகுண்டு கிடங்காய் மாற்றி
வெடிக்க வைத்த தீக்குச்சி!

அடிமைச் சங்கிலியை
வெட்டி எறிந்த கோடாலி!
உறங்கிக் கிடந்த சேரிகளை
உசுப்பி விட்டவன்!
ஊமைகளைப் பேச வைத்தவன்!

வாழ்வு எங்கே என
வயல் காட்டில் தேடியவர்
முகத்தை தொலைத்து விட்டு
முகவரியைத் தேடியவர்

விதி இதுதான் என்று
மிதியுண்டு கிடந்தவர்கள்
கோபுரத்தை சுமந்து கொண்டு
அடிக்கல்லாய் போனவர்கள்

திசைகள் தெரியாமல்
தினந்தோறும் அழுதவர்கள்
அழுகையைத் துடைக்க
அம்பேத்கர் கரங்கள்!

வீதியில் இறங்காமல்
விதியை நொந்து பயனில்லை
வாருங்கள் என் பின்னால்
போருக்குத் தயாரவோம்!

அம்பேத்கர் பின்னால்
அணி அணியாய் அடிமை சனம்

அடிமைகளின் விடுதலைக்கு
அடிக்கால் நாட்டவே
அம்பேத்கர் எழுதினார்
அரசியல் சாசனம்

அவர் கையில் பேனா இருந்தது அதற்குப் பின்னால் பூணூல் இருந்தது!

பூணூலில் சிக்கியது இந்தியச் சட்டம்
நூல் இருக்கும் திசையில் தானே பேனா செல்லும் சிக்கலை உடைக்க
சட்ட சிக்கல்கள் ஏராளம்

நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
மராத்திய மண்ணில்
மரத்வாடா வையும் எரித்தது
மனம் போன போக்கில்
மக்களையும் எரித்தது

எதிரியிடம் இருந்து
எரி நெருப்பைப் பிடுங்குவோம்!
எரித்த கைகளை- அதில்
முறித்துப் போடுவோம்!


                                                              …………………. முன்னவன்