இத்தனப் பொணம்னு தெரிய இன்னும் எத்தனப் பொணம் விழனுமோ!!

Posted in கிறுக்கியது, சத்தீஸ்கர், சிரியா மோகன், தெகல்கா, பகுக்கப்படாதது, படித்ததில் பிடித்தது, மொழி பெயர்ப்பு, விதர்பா, விமர்சனங்கள், விவசாயிகள் தற்கொலை, NCRB, SOCIAL ISSUES on ஜூன் 14, 2010 by குட்டகொழப்பி

விதர்பாவின் விவசாயிகள் தற்கொலை இந்தியாவை உலுக்கிய சம்பவமாகும், ஆனால் சத்தீஸ்கர் மாநிலம் விவசாயிகளின் பிணக்காடாகிக்கொண்டிருப்பது நாம் அறியாதவை.

தெகல்காவில் சிரியா மோகன் எழுதிய நிதர்சனக்கட்டுரையை உங்களுக்குத் தருகிறோம்.

சத்தீஸ்கர் என்றாலே நக்சல்பரிகள் நிறைந்த இடம் என்று எல்லோராலும் பேசக்கூடிய நிலை, ஆனால் அதையும் தாண்டி கடந்த பத்து வருடங்களாக அங்கு விவசாயிகளின் தற்கொலை விதர்பாவை விட மோசமான நிலைமைக்கு வந்திருப்பது மிகக்கவனமாக மறைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற ஐந்து மாநிலங்கள், மக்கள் தொகையில் மூன்றில் ஒன்றாக இருக்கின்ற நிலையில், விவசாயிகள் தற்கொலையிலும் மூன்றில் ஒன்றாக இருப்பது அதிர்ச்சிக்குறியது. கடந்த 1997 முதல் 2007 வரை இந்தியாவின் மொத்த விவசாயிகளின் த்ற்கொலை எண்ணிக்கை 1,82,936 என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசியக்குற்றப்புலனாய்வுப் பதிவின் (NCRB) அறிக்கை பதிவு செய்கிறது.

2001 சத்தீஸ்கர் தனிமாநிலமாகப் பிரிந்து வந்த பொழுது, அதே ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி 1452 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது விதர்பாவின் எண்ணிக்கையை விட அதிகமாகும், அதாவது ஒரு இலட்சத்தில் 7 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள், அதே சமயம் மகாராஷ்டிரத்தில் இந்த எண்ணிக்கை நான்காக இருந்தது. இதைவிட மிகச்சரியாகக் கூறவேண்டுமானால் 1.5 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சுடுகாட்டுத் தலைநகரமான விதர்பாவின் அளவும் சத்தீஸ்கரின் அளவும் ஏறக்குறைய ஓன்றுதான். இதுவரை எடுத்துள்ளக் கணக்கெடுப்பின்படி விதர்பாவில் மிக அதிகபட்சமாக 2006-ல் 1065 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் சத்தீஸ்கரிலோ 2006-ல் 1483-ஆக இருந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 1593 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் விதர்பாவின் உண்மை செய்தி ஊடகங்களில் வந்ததைப்போல் அல்லாமல் சத்தீஸ்கர் பற்றிய செய்திகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறுக்கப்பட்டுள்ளது.

இதுபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலையை மொத்த மக்கள் தொகை சதவீதக்கணக்கில் ஆராய்ந்தால் கடந்த ஆறு ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் இருப்பது மிக பயங்கரமான செய்தியாகும்.இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை சராசரியாக ஒரு லட்சத்திற்கு 14 பேர். அதில் சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் மட்டும் இந்தக் கொடூரம் 83 ஆக இருக்கிறது.

இதன் காரணமாக சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் விவசாயிகள் தற்கொலையைப் பற்றிச் செய்திகள் சேகரிக்கச் சென்ற போது, தற்கொலை செய்துகொண்ட குடும்பங்களைக் கண்டுபிடிப்பதே ஒரு புதிராக இருந்தது.மகாசமுந்தில் உள்ள கோதாவரிகிராமத்தில் சந்தோஷ் நிஷாத்தின் வீடு இருளாகவும் காலியாகவும் இருந்தது.ஆனால் பாதி பக்கவாதததால் பாதிக்கப்பட்ட நிஷாத்தின் அப்பா பகதூர் சிங் மட்டும் இருந்தார். கூலி வேலைக்குச் சென்ற நிஷாத்தின் மனைவியும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.மூன்று குழந்தைகளும் கூட தங்களின் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள தினக் கூலியாகச் சென்றிருப்பது தெரியவந்தது.நிஷாத் ஒரு வருடத்திற்க்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரின் சாவுக்கான காரணத்தை தந்தையிடம் கேட்டபொழுது “மொதல்ல எங்கள நிம்மதியா இருக்க விடுறீங்களா, என் அருமை மவன் எதுக்கு செத்தான்னு எனக்கு என்ன தெரியும், அவன் மண்டையில இருந்தது பற்றி எனக்கு எப்படி தெரியும்”என்று கோபம் கொப்பளிக்கப் பேசுகிறார். மேலும் “இதுவரைக்கும் எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரண உதவியும் வரல, எங்களுக்கு ரேசன் கார்டு கிடையாது, வறுமைக்கோட்டிற்க்கு கீழன்னு சொல்கிற அடையாள அட்டை கூட கிடையாது. ஒவ்வொரு நாளும் பச்ச வயிரை நிறைக்க நாயா அலைகிறோம், உங்ககிட்ட சொல்லியும் எந்த பிரயோஜனமும் இருக்காதுன்னு தெரிஞ்ச பிறகும் எதுக்காக உங்ககிட்ட பேசனும்” என்று தனது கோபத்தை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தினார். ஆனால் அந்த கோபம் சரியானது, மிக வலிமையானது, கூர்மையானது என்பது தெளிவாகத் கின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் தனது முக்கால் வாசி நிலங்களைத் தனது தந்தையின் சிகிச்சைக்காக விற்றார், ஆனால் இன்றோ அரை ஏக்கருக்கும் குறைவாகவே நிலம் உள்ளது. குடும்பத்தில் விசாரித்த பொழுது அவர் யாரிடமும் கடனாளியாகக் கூட இல்லை என்பது தெரிகிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோ,விவசாயத்தில் எதுவும் ஈட்ட முடியாத நிலையைக் கூறும்போதுதான் அவரின் சாவுக்கு காரணம் எது அன்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவரின் சாவையும் , விவசாயியின் தற்கொலை என்று பதிவு செய்யாமல் பொருளாதரக் காரணம் என்று காவல் நிலையம் பதிவு செய்து உண்மைக்காரணத்தை மூடி மறைத்துள்ளது.

பத்திரிக்கையாளர் சாய்நாத் தனது கட்டுரையில் விவசாயிகளின் சாவைக் கனக்கெடுப்பதில் அரசு மிகுந்த அளவில் தள்ளுபடி செய்வதைச் சுட்டிக்காட்டுகிறார். சாதாரனமாக பெண் விவசயிகளின் தற்கொலையை விவசாயிகள் பட்டியளில் சேர்க்காமல் அவர்கள் விவசாயியின் மனைவி என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். (காலங்காலமாக நிலங்கள் பெண்களின் கைகளில் இல்லாதது இதற்கு முக்கிய காரணம்.) இதனால் எண்ணிலடங்கா பெண் விவசாயிகளின் தற்கொலை இந்தக் கணகெடுப்பின் போது நிராகடிக்கப்படுகிறது. மேலும் நிலங்கள் விவசாயியின் உறவினர்கள் பெயரில் இருந்ததாலும், குத்தைகைக்கு எடுத்திருந்ததாலும் பரிசீலிக்கப்படுவதில்லை.
சத்தீஸ்கரில் உள்ள விவசாய விஞ்ஞானியான சன்கெத் தாகூர் இதற்கான மூலகாரண்ம் பாசனம் பொய்த்து போனதே என்று கூறுகிறார். நெற்பயிரே மூலப்பயிராக இருக்கும் சத்தீஸ்கரில் உள்ள நிலங்களில் நான்கில் ஒன்று என்ற அளவில்தான் பாசனவசதி இருக்கிறது என்கிறார்.

மொத்த விவசாயிகளில் 75 சதவீதம் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் சிறு விவசாயிளைக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார். மேலும் பருவ மழை பொய்த்ததாலும்,உரங்கள் மற்றும் பூச்சிக்கொள்ளி மருந்துகளின் விலை உயர்வும் அவர்கள் தாக்கு பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைத் தெளிவுறக் கூறுகிறார்.அதனால் “குறைந்த மகசூலே தலையெழுத்து” என்று கூறி விவ்சாயிகள் தங்களது விதியை நொந்துகொள்வதாகக் கூறுகிறார்.ஒரு ஏக்கருக்கு 24 குவிண்டால் நெற்பயிரைக் கொடுக்கும் பஞ்சாப் மாநிலத்தைக் காட்டிலும், 6 குவிண்டால் விலைந்தாலே போதும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகக் கூறுகிறார்.

மகாசமுந்தில் உள்ள எஸ்.பி யான ஆனந்த் சாப்ரே ” எங்கள் ஊரில் விவசாயிகள் தற்கொலை பற்றிக் கேள்விப்பட்டதில்லை, தற்கொலைகள் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அதை விவசாயிகள் தற்கொலை என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார். சத்தீஸ்கர் மாநிலத் திட்டக்கமிசன் துணைத் தலைவரும் கோபத்துடன் ” விவசாயிகள் எதற்கு தற்கொலை செஞ்சுக்கனும், இங்க எல்லாமே அளவுக்கு மீறி வெளையுது, கெடக்குது அப்புறம் எதற்கு தற்கொலை? அதுவுமில்லாம சத்தீஸ்கர்ல ஒரு விவசாயி கூட கடனாளி கிடையாது.” என்று கூறுகிறார்.
ஆனால் N.C.R.B-யின் கணக்கெடுப்பினைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறிய போது ” இந்த கணக்கெடுப்பு யார்கிட்ட இருந்து எடுத்தாங்கன்னு தெரியல, ஒருவேளை தவறான நபர்களிடம் இருந்து கூட எடுத்திருக்கலாம். எங்களிடம் வந்து விசாரிங்க, நாங்க உண்மையான செய்தி தருகிறோம்,அப்ப உங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும் என்று சொன்னார். மேலும் உலகத்துக்கே அரிசியும், பருப்பும் கொடுக்கிற நாங்க எதுக்கு தற்கொலை செய்யனும் என்று பெருமிததுடன் கூறி முடித்தார்.2006ம் ஆண்டு விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 1065,ஆனால் சத்தீஸ்கரிலோ அதன் எண்ணிக்கை 1483 ஆக இருக்கிறது.

இத்தகைய கொடூரமான சாவினைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சில விவ்சாயக் குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. மேலும் மகாசமுந்தில் உள்ள ஒரு விவசாயியின் சராசரி வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நோக்குடன் பாக்ரா என்ற இடத்தில் உள்ள 40 வயதான சத்ருகன், அவரின் மனைவி மற்றும் 5 குழந்தைகளைச் சந்தித்தோம். ஏழு ஏக்கர் மதிபுள்ள அவரின் நிலத்தில் அரிசி மற்றும் உளுந்து பயிரிடப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் தான் தன் மூத்த மகளின் திருமணத்தையொட்டி 3 ஏக்கர் நிலத்தை 2.5 லட்சத்திற்கு விற்றிருக்கிறார்,அதனால் தற்பொழுது அவர்கள் விளைவிப்பது தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே போதுமானதாக இருப்பதால்
வேறு எதையும் விற்கமுடிவதில்லை, மேலும் தற்பொழுது அவர்களால் சந்தைகளில் விற்கும் எந்தப் பருப்பையும் வாங்க முடிவதில்லை. இதுபோக சத்ருஹனுக்கு மேலும் 4 மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கும் கடமை இருக்கிறது, இதற்காக மீதி இருக்கும் நிலங்களையும் விற்றால் குடும்பைதின் எதிர்காலம் கேள்விகுறிதான். சத்ருஹனின் இதே நிலைதான் அங்கு இருக்கும் மற்ற விவசாயிகளின் நிலையும், இதனால் இவர்கள் ஊட்டசத்து இல்லாமல் நோஞ்சான் களாக மாறிவருகிறார்கள்.

பிறகு பக்கத்து வீட்டில் இருக்கும் பகிரத்தின் வாழ்நிலையை விசாரித்ததில் அது மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. காலங்காலமாக விவசாய நிலமேதும் இல்லாததால் இவரின் குடும்பம் 40 ரூபாய் சம்பளத்திற்கு தினக்கூலியாக விவசாய நிலங்களிலும், கட்டுமானத்தொழிலிலும் ஈடுபடுகின்றனர். தற்பொழுது தனது மகளின் கல்யாணத்திற்காக 50000 ரூபாய் கடணாகப் பெற்றுள்ளார். முழுமையாக ஆண்டு வருமானம் 30 ஆயிரம் கூடத் தாண்ட முடியாத நிலையில் 50000 ரூபாய் மொத்தமாக தர யாரும் முன்வரவில்லை, அதனால் கொசுறு கொசுறாக 5 பைசா வட்டிக்கு பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறினார். மேலும் வருமானத்திற்காக இரண்டு ஏக்கரைக் குத்தகைக்கு எடுத்துள்ள அவர், விளைவதில் எட்டு குவின்டாலை வாடகையாகக் கொடுத்து விடுகிறார், மீதியை தான் தன் குடும்பத்திற்கு எடுத்துக்கொள்கிறார். ஆனால் அதுவும் அவருக்கு போதுமானதாக இருப்பதில்லை. பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கூட அவர் வாடகையாகவோ, பணமாகவோ அல்லது தாணியமாகவோ எதிர்வரும் காலங்களில் சேர்த்துக்கொடுக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார். ஒருவருடம் சம்பாதிக்கும் தொகை வட்டியைச் செலுத்தவே சரியாக இருப்பதால் இவர்கள் தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. அடுத்தவருடம் புதிதாகக் கடன் கொடுப்பவர் மாறுவார். ஆனால் வட்டியாகக் கொடுக்கும் பணத்தின் மதிப்பும், வாழ்நிலையும் என்றும் மாறப்போவதில்லை.

மஹாசமுந்த் மாவட்டம் முழுக்க விவசாயிகளின் நிலை இதுதான். பண்ணையார்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கி கொள்ளவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும், தங்கள் நிலங்களை விவசாயிகளிடம் குத்தகையாகக் கொடுக்கின்றனர். வியர்வையே சிந்தாத இவர்கள், இரத்தத்தையே வியர்வையாக சிந்தும் விவசாயிகளைக் கசக்கிப் பிழிவது கண்கூடாகத் தெரிகிறது.

ஆண்டாண்டுகளாக ஆயிரமாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து பிணக்குழியில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு ரகசிய உடன்படிக்கைப் போல இந்த விஷயம் வெளியுலகிற்க்குத் தெரியாததன் காரணத்தைப்பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், “முதலாவதாக உள்ளூர் ஊடகங்கள், இத்தகைய செய்திகளால் எத்தகைய பலனும் பெறாத நிலையில் இருப்பதால் அவற்றை வெளியிடத் தயார் நிலையில் இல்லை”, “இரண்டாவதாக பத்தி ரிக்கையாளர்களோ மாநிலத்தின் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைப் பற்றிச் சொல்ல ஊக்கப்படுத்தப்படுவதில்லை”, “கடைசியாக விதர்பாவில் விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் மற்றும் போராடும் இயக்கமான விதர்பா சேட்கரி சங்கதன் போல ஒரு வலுமையான இயக்கம் இங்கு இல்லாதது பெரும் பின்னடைவுக்குக் காரணம்.”

2008-ல் கணக்கெடுப்பு அடுத்தமாதம் வெளியாகவுள்ள நிலையில், இதைப்பற்றி மாநில அரசு கவனிக்காவிடில் இந்நிலை மேலும் உயர்ந்து மாநிலமே மிக அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்றும் N.C.R.B -வின் குழு வருத்தப்பட்டுச்சொல்கிறது.

இத்தனப் பொணம்னு தெரிய இன்னும் எத்தனப் பொணம் விழனுமோ!! என்கிற பாப் டைலனின் பாடல் சத்தீஸ்கருக்கு மிகவும் பொருந்தும்.

கோபாலபுரத்துக் கோமானும் கோயில் மாடுகளும்-இரா.செந்தில்குமார்

Posted in இரா.செந்தில்குமார், ஈழம், கருணாநிதி, கீற்று. காம், குடும்ப அரசியல், தி. மு. க, படித்ததில் பிடித்தது, விமர்சனங்கள், SOCIAL ISSUES with tags on பிப்ரவரி 26, 2009 by குட்டகொழப்பி

karunanidhi_familyஅன்புள்ள மு.க.அ, மு.க.ஸ், மு.க.க, மு.க.அ.க, மு.ம.த.மு.க தலைவர் திரு. மு.க அவர்களுக்கு. இதோட அர்த்தம் உங்களுக்கு நல்லாவே புரியும்னு நினைக்கிறேன் தலைவரே! இருந்தாலும் நான் இதை எழுதும்போது இது என்ன என்னன்னு கேட்டுட்டும் உங்களையே தமிழினத் தலைவரா நம்பி வாழ்ந்துட்டும் இருக்கிற எம் பொண்டாட்டி மாதிரியான அப்பாவிகளுக்காக முழுசாவே சொல்லிரலாம்ணு நெனக்கிறேன். முத்துவேலர் கருணாநிதி அழகிரி, முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின், முத்துவேலர் கருணாநிதி கனிமொழி, முத்துவேலர் கருணாநிதி அழகிரி கயல்விழி, முரசொலிமாறன் தயாநிதி முன்னேற்றக் கழகம்…… அப்பாடா சொல்லவே மூச்சு முட்டுதுங்க தலைவரே….. எம் பொஞ்சாதிய மாதிரி அப்பாவிகளெல்லாம் தி.மு.க.ன்னா இப்பவுங்கூட திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லீட்டு திரியுதுங்க தலைவரே. இந்த மட ஜென்மங்ககிட்ட அதுக்கான அர்த்தம் அதில்ல, திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியோட சுருக்கந்தா தி.மு.க.ன்னா ஒத்துக்கவே மாட்டேங்குறாங்க தலைவரே. நீங்களே செல்லுங்க! நீங்கதான தி.மு.க., தி.மு.க.ன்னா நீங்க தானே.

கட்சி பேரச் சொல்லி கண்டதையும் சொல்லி கடைசில, எழுத வந்ததை அப்படியே கோட்டவிட்டுவேன் போல இருக்குது தலைவரே. அதென்னமோ தெரியல, என்ன மாயமோ புரியலை நீங்க பேசுனா எல்லாரும் கொளம்பிப் போகற மாதிரி எனக்கும் உங்களுக்கு எழுதனும்ன்னு பேனா எடுத்தொடனே எல்லாமே கொளம்பிப் போச்சுங்க தலைவரே. சரி, நேரா விசயத்துக்கே வர்றனுங்க.

 

எனக்கு வீட்டுல ரெண்டு வாரமா எம்புள்ளயாள ஒரே பிரச்சனை தலைவரே. அதனால வேலவெட்டிக்குப் போகமுடியல, மனசு நிம்மதியா இல்ல. அப்பத்தான் உங்கள நெனச்சிட்டேன். ஒரே புள்ள, ஒரே பிரச்சனைய வெச்சிட்டு ஒரே வேலைக்குப் போற என்னாலயே ஒழுங்கா வேலை பாக்க முடியலேயே. உங்க நெலமயெல்லாம் அய்யய்யோ…. பாவந்தான் தலைவரே, இருந்தாலும் எம்பிரச்சனையை நீங்க தீத்து வெப்பீங்கன்னுதான் இந்த லெட்டரே எழுதுறேன். புள்ளைங்க பஞ்சாயத்து பாத்துப் பாத்து பழகிப்போன அனுபவஸ்தர் நீங்க. உங்ககிட்ட சொன்னா நிச்சயமா அதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு நான் நம்பறேன். ஏன்னா, இது ஈழப் பிரச்சனையில்ல கண்டுக்காம ஆஸ்பத்திரியில படுத்துக்க. புள்ளைங்க பிரச்சனை! அதுனால ஒரு தகப்பனா என் உணர்வை நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்கிறேன். சமீப காலமா நீங்க ஒரு நல்ல தலைவரா இருக்கறத விட நல்ல தகப்பனா இருக்கிறதப் பாத்துட்டு ஊருல உள்ள கண்ணெல்லாம் உங்கமேல பட்டுருச்சு. அதனாலதான் இந்த முதுகுவலி, மூட்டுவலியெல்லான்னு நெனைக்கிறேன். திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க தலைவரே.

 

பாத்தீங்களா! மறுபடியும் நான் என் பிரச்சனையை மறந்துட்டேன். பிரச்சனை என்னன்னா ‘என்னோட அஞ்சு வயசு மவ தெனம் ராத்திரில தூங்கும்போது ஒன்னுக்குப் போயிடறா தலைவரே. வீட்டுல இருக்கிற ஏகப்பட்ட சிக்கலுக்கு இந்த ஒரு பிரச்சனை தான் மூலகாரணம்னா உங்களால நம்பமுடியுதுங்களா தலைவரே! சரி விசயத்தைக் கொஞ்சம் விலாவரியாவே சொல்றனே. எம்மவ ஒன்னுக்குப் போறதுனால எங்கம்மாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டையாயிடுது.

 

எங்கம்மா என்னடான்னா அஞ்சு வயசுப் புள்ள தெனம் ராத்திரியிலே ஒன்னுக்குப் போவுது பேசாம அவள மெட்ராஸ் ராமச்சந்திரா ஆசுபத்திரியில அட்மிட் பண்ணீரலாம் அப்படீங்குது. நான் சொன்னேன் அம்மா இந்த வயசுல இதெல்லாம் சாதாரணம் அட்மிட் ஆகற அளவுக்கு சிக்கலான விசயம் இல்லம்மான்னேன். ஆனா, அது எனக்கும் தெரியும்னு எங்கம்மா சொல்றாங்க. அப்புறம் ஏன் ஆஸ்பத்திரிக்குப் போலாங்கறேன்னு கேட்டா, அவங்க சொல்றாங்க, அட வயசான மூட்டுவலி வர்றது, முதுகுவலி வர்றது இதெல்லாம் சகஜந்தா, இதெல்லாம் தெரிஞ்சாலும் ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வரும்போது நம்ப முதல்வரே போய் ஆஸ்பத்திரில படுத்துக்குராறே. நம்ப புள்ளைய மட்டும் ஏன் ஆஸ்பத்திரில படுக்க வெக்கக் கூடாதுன்னு கேக்கறாங்க.

 

அட உங்களுக்கு இந்தியா. இலங்கை. சிங்கப்பூர். மலேசியான்னு 1431 பயோரியா பல்பொடி ரேஞ்சில பிரச்சனை. இந்தப் புள்ளைக்கு என்னங்க தலைவரே பிரச்சனை? அதையும் எங்கம்மாகிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க சொல்றாங்க ‘உனக்கென்னடா தெரியும்? நீ காலைல போனா ராத்திரி வர்ற. அதுக்குள்ள பாவம், புள்ள படற பாட்ட என்னான்னு நான் சொல்ல? அவ காலைல எந்திரிச்சவுடனே பல்லுவெளக்கனும். குளிக்கனும். இது பிரச்சனையில்லையா? அவ ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தா ஹோம் வொர்க் எழுதனுமே அது பிரச்சனையில்லையா? முழுப்பரிட்சை வருதே அதுபிரச்சனையில்லையா? ஏன் சாயந்தரம் அவ “டோராவோட பயணங்கள்” பாக்கும்போது கரண்டு போயிடுதே அது பிரச்சனையில்லையா? பாவம்டா அவ’ங்கறாங்க.

 

அம்மா இதெல்லாம் சாதாரணம் தண்ணி ஊத்துனா குளிக்கிற பிரச்சனை தீர்ந்திடும். படிச்சா பரிச்சை பிரச்சனை தீந்திடும். கரண்டு வந்தா டோரா பிரச்சனை தீர்ந்திடும். இதுக்கெல்லாம் போயி ஆஸ்பத்திரிக்குப் போவாங்களான்னு நான் கேட்டேன். அதுக்கு, ‘போடா போக்கத்தவனே. நம்ம மொதலமைச்சரு உக்காந்து பேசுனா இலங்கை பிரச்சனை தீந்திடும். நின்னு மெரட்டுனா மத்திய அரசாங்கமே நடுங்கிரும். இருந்தாலும் இதையெல்லாம் விட்டுட்டு அவ்வளவு பெரிய மனுசனே ஆஸ்பத்திரியிலே சேர்ந்துட்டாரு. நீ என்னமோ இந்த பச்ச புள்ளய ஆஸ்பத்திரியில சேக்க உடமாட்டீங்கறே’ன்னு எம்மேல கோவப்படுறாங்க தலைவரே. நான் என்ன பண்றது. நீங்கதான் சொல்லனும்.

 

உங்க புண்ணியத்துல ஒரு ரூவாய்க்கு அரிசி வாங்கிதான் எங்க வீட்டுல ஒலையே கொதிக்குது அப்படி இருக்கும்போது மெட்ராஸ் ராமச்சந்திரா ஆஸ்பத்திரிய எல்லாம் டீவி நியூஸ்ல வரும்போது பாத்துக்கலாம் (டீவியும் உங்க புண்ணியம்) அவ்வளவுதான். மத்தபடி நம்ம ரேஞ்சுக்கெல்லாம் ரெண்டு ரூவா குடுத்து தர்மாஸ்பத்திரிலதான் பாக்க முடியும்னு (ரெண்டு ரூவா குடுத்தாத்தான் அது தர்ம ஆஸ்பத்திரி) எங்கம்மாகிட்ட சொல்லி ஒரு சமாதான ஒப்பந்தத்துக்கு வரலாம்ணு பாத்தா எங்கம்மா, விடுதலைப் புலிக மாதிரி அப்பவும் சண்டைய நிறுத்துனபாடில்ல தலைவரே. அது சொல்லுது. அரிசி ஒரு ரூவா. ஆனா பஸ்டாண்டு பக்கம் போனா அவசரத்துக்கு ஒன்னுக்கு ரெண்டுக்கு அஞ்சு ரூவா தர்றயில்ல. அத மாதிரி இதையும் அவசர பிரச்சனையா நெனச்சி செலவு பண்ணுங்குது.

 

இந்த இடத்துலதான் எனக்கு சட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. உடனே ‘அம்மா இனிமே புள்ளைய பேசாம ஸ்கூலுக்கு அனுப்பவேண்டாம். உங்க காலம் மாதிரியே அவ கை தலைய சுத்தி காத தொடும்போது ஸ்கூலுக்குப் போகட்டும். அப்படியே இந்த டீவிய தூக்கி பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளை பிளாஸ்டிக்குக்கு போட்டுடுவோம்’னு சொன்னேன். உடனே எங்கம்மா ‘ஆமாப்பா. பேசாம. அதையே பண்ணிரெலாம். பாவம் சின்ன வயசு அவளால முடியல அவ என்ன பண்ணுவா? நம்பனால நம்ப புள்ளையதான் ஸ்கூல விட்டு நிறுத்தமுடியும். பாவம் நம்ப முதலமைச்சர் பெரிய மனுசன். அவராலயும் முடியல. அவர முதலமைச்சரா இருக்கறதவிட்டு நிறுத்திரலாம்னு யாராச்சும் நினைச்சா தேவல’ன்னு சொல்றாங்க. நான் என்ன சொல்ல முடியும் தலைவரே?

 

எம் புள்ள இந்த பிஞ்சு வயசுலேயே ஸ்கூலுக்கு போலாமா வேண்டாமான்னுதான் நான் முடிவு பண்ண முடியும். ஏன்னா அவ எம் புள்ள. அதே மாதிரி நீங்க எங்க தலைவரு. உங்கனாலயும் முடியல. நீங்க சட்டசபைக்குப் போக வேண்டான்னு இந்த மக்கள் முடிவு பண்ண மாட்டேங்கறாங்க. உங்க மேல பாசமே இல்லாத மக்கள். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்.

 

எம்புள்ள பாட்டி செத்ததுக்கு பத்து நாள் லீவு போட்டாலே அவங்க மிஸ்ஸூ ‘நீயெல்லாம் ஒரு நல்ல ஸ்டுடண்டா? டாக்டர் சர்டிபிக்கட் எங்க? இஞ்சினீயர் பிளான் எங்க’ன்னல்லாம் திட்டறாங்கலாம். நீங்க பல வருசமா சட்டசபைக்கே போகாம இருந்தீங்களே நீங்கெல்லாம் நல்ல எம்.எல்.ஏவான்னு உங்கள யாரும் கேள்வியே கேக்கலையே தலைவரே.

 

இந்திய குடிமகன்ற உரிமையை மட்டும் வெச்சுட்டு தமிழ் பேசி தமிழக கடலோரத்துல மீன புடிச்சிட்டிருந்த நானுத்தி சொச்சம் பேர இலங்கை ராணுவம் கொன்னு போட்டுச்சே அப்பக்கூட ஒரு நாட்டோட குடிமகனை காப்பாத்த வக்கில்லாத அரசாங்கம் என்ன அரசாங்கம்? அவன் உயிருக்கு உத்தரவாதம் தராத நாடு ஒரு நாடா? அப்படி ஒரு நாடு தேவையான்னு சத்தமா குரல் கொடுக்க கையாலாகாத இந்த மக்களா உங்கள அப்படியொரு கேள்வி கேக்கப் போறங்க?

 

எங்கேயோ பிரான்ஸ்ல ஒரு சீக்கிய இளைஞனோட தலப்பாகைய களைச்சிட்டு மயிர இழுத்து பாத்ததுக்கே கொதிச்சு எந்திரிச்சு அவனுக்காக பிரான்ஸ்கிட்ட பேச இந்திய மந்திரிய அனுப்பிச்சாங்க சீக்கிய மக்கள். அப்பக் கூட ‘அடே மத்திய அரசே சீக்கியனோட மயிருக்கிருக்கிற மரியாத கூட தமிழன் உயிருக்கு இல்லையா’ன்னு வீதிக்கு வந்து கேக்க நாதியத்த ஊமப் பயலுக உங்களப் பாத்து கேள்வி கேப்பாங்க? ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கே உரிய மத உணர்வுகளை மதிச்ச அரசாங்கமே தெனம் தெனம் செத்துப் பிழைக்கற தமிழ் மனித உயிர்களை ஏண்டா புரிஞ்சிக்கலன்னு ஒன்னு கூடி ஒப்பாரி வைக்கக் கூட கையாலாகாத இந்த தமிழனுகளா உங்களப் பாத்து விரல் நீட்டிப் பேசுவானுங்க? வாய்ப்பே இல்லை தலைவரே. அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும் தலைவரே. அதெல்லாம் ஏதோ உங்க மாதிரி ஆளுக பேச்சுல இருக்கிற புறநானுறுலயும். அகநானுறுலயும் கேக்கறதோட சரி. விஜயோட வில்லுலயும், விக்ரமோட அந்நியன்லேயும் பாக்கறதோட சரி.

 

ஊர்ல வேலவெட்டிக்குப் போகாத பெருசுக கோயில் அரசமரத் திண்ணைல உக்காந்திட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடும்போது பேசிட்டு இருந்ததை ஒரு நாள் கேட்டேன். (நான் ஏன் வேலைக்குப் போலைன்னு கேக்கமாட்டீங்க நீங்க. ஏன்னா இருக்கிற கரண்டு கட்டுல எல்லா வேலையும் என்ன லட்சணத்துல நடக்குதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும்) அதுல ஒரு பழமொழி டக்குன்னு மனசுக்குள்ள வந்து அப்படியே சம்மணம் போட்டு உக்காந்துருச்சுங்க தலைவரே. அது என்னன்னா.

 

மேட்டங்காட்ட உழுதவனும் கெட்டான்
மேனா மினுக்கிய கட்டுனவனும் கெட்டான்.

 

அதென்னமோ நீங்க ஜெயலலிதா அம்மாவோட பழைய செருப்பு, புது செருப்பு, நகை, நட்டு, போல்டு எல்லாத்தையும் அப்போ உங்களோடதா இருந்த சன் டீவியில போட்டுப் போட்டு காட்டி அந்தம்மாவ மக்கள் முன்னாடி மேனா மினுக்கியாவே சித்தரிச்சுட்டீங்க. அந்தம்மாவுக்கு முதலமைச்சர் பட்டம் கட்டுனவனும் கெட்டான்னு நீங்க சொன்னதா நெனச்சுதான் நம்ம தமிழ்ப் பயலுகலெல்லாம் உங்களுக்கு ஓட்டு போட்டு உங்கள மொதலமைச்சரா ஆக்குனாங்களோன்னு ஒரு சந்தேகம் எனக்கு. மேனாமினுக்கிக்கு மொதலமைச்சரா பட்டங்கட்டி கெடக் கூடாதுன்னு நெனச்ச வீணாபோன தமிழன் அப்படியே உங்களுக்கு ஓட்டக் குத்தனான் பாருங்க. அப்ப தெரியல நாம மேட்டாங்காட்ட உழுது கெடப்போறோம்னு. இப்ப புரிஞ்சுதுன்னு புலம்பி என்ன பிரியோஜனம் இல்லீங்களா தலைவரே.

 

இப்ப இன்னொன்னுங்கூட தோணுது தலைவரே. பேசாம இதுக்கு மேனா மினுக்கிய கட்டியே கெட்டிருக்கலாம். ஏன்னு கேளுங்க. அந்தம்மா மட்டும் இப்ப முதலமைச்சாரா இருந்திருந்தா எப்படியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராத்ததான் முடிவெடுத்திருப்பாங்க. (இப்ப மட்டும் என்ன வாழுதாம்) அப்படி ஒருசமயத்தில எதிர்கட்சியா மட்டும் நீங்க இருந்திருந்தா உங்களுக்கு முதுகுவலி வந்திருக்குமா? இல்ல முடியாமதான் போயிருக்குமா? அப்ப யாராச்சும் இந்த மாதிரி படுத்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க. எத்தனை பேருக்கு தமிழின துரோகின்னு பட்டங்கட்டியிருப்பீங்க? கால்குலேட்டர் வெச்சாவது கணக்குப் போட்டுப்பாருங்க. அப்படி ஒரு சூழல்ல முரசொலில நீங்க எழுதற லெடடர்களும் அதுல நீங்க குடுக்கற புள்ளி விவரங்களும் என்னவா இருந்திருக்கும். இன்னைக்கு தமிழ்நாடு பூர எழுச்சி உண்டுபண்ணியிருக்கிற முத்துக் குமாரோட இறுதியறிக்கை எழுத்தெல்லாம் உங்க எழுத்துக்கு முன்னாடி கால் தூசிக்குப் பெறுமா? அவன மாதிரி ஒரு தமிழ் போராளி உயிர் போகுமளவுக்கு மந்தமாகத்தான் நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருப்பீங்களா? யோசுச்சுப் பாருங்க தலைவரே.

 

ஜெயலலிதா மட்டும் முதல்வரா இருந்திருந்தா வாழ்வோ, சாவோ, போராடிப் பாப்போம்னு எல்லாரும் அந்தம்மாவ எதிர்த்து நின்னிருப்பாங்க. ஆனா துரதிஸ்டவசமா நீங்க முதலமைச்சர். நீங்க போராட்டத்த முன்னெடுப்பீங்கற ஒரே காரணத்துக்கா தான் உங்களுக்காக எல்லாரும் காத்திருந்தாங்க. நீங்க என்ன செஞ்சீங்க? உங்களுக்கு முன்னால இருந்த வராலாற்றுக் கடமை என்ன? நீங்க செஞ்சிட்டு இருக்கிறது என்ன? நீங்க மட்டும் ஒரு தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தா ஒரு போராளி செத்திருப்பானா? யோசிச்சுப்பாருங்க தலைவரே.

 

இந்த நேரத்துல நாங்க ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம் இல்ல இல்லை நீங்க அந்த கட்டாயத்துக்கு எங்கள தள்ளீட்டீங்க தலைவரே. உடலை எரிச்சு உயிரைவிட நாங்க எல்லாரும் தைரியசாலிகளில்லை. ஆனாலும் எதையாவது எரிச்சு எங்க எதிர்ப்பை காட்டுற அளவுக்கு எங்க ஒடம்புலயும் தன்மான தமிழ்ரத்தம் கொஞ்சமாச்சு ஓடுது. அதனால நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன். தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என் கைக்கு ஒரு சூட்ட போட்டுடலாம்னு இருக்கேன். ஓட்டுபோட அனுமதி அளிக்கிற உங்க அரசாங்கம் சூடுபோட அனுமதி தருமா? ஏன்னா நாளைக்கு உங்களுக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையான்னு எவனும் என்னப் பாத்து ஒரு கேள்வி கேட்டுற கூடாதில்லீங்களா தலைவரே!

 

உங்க அளவுக்கு இல்லைன்னாலும் உங்கள்ல ஒரு ஐஞ்சு பர்ஸண்ட் அறிவாவது இருந்திருந்தா தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என்ன மாதிரி எல்லாருக்கும் முரசொலிலயோ. இல்ல என் மூக்கு சளிலயோ அலைகடலென திரண்டு வா உடன்பிறப்பே. தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட கைக்கு ஒரு சூட்டை போட சூரியனாய் எழுந்து வா உடன்பிறப்புகளேன்னு எழுதி ஒரு கூட்டங் கூட்டி இருப்பேன். ஆனா அந்த அளவுக்கு அறிவோ, பணமோ, அதிகார பலமோ இல்லாத என்னால என்ன பண்ணமுடியும்? தனியா ஒத்த ஆளா நின்னு இனிமே திமுகவுக்கு ஓட்டு போடுவியா கேட்டு என் வலது கையில வலிக்கிற மாதிரி ஒரு சூடு போடுவேன். இதுல உடன்பாடு இருக்கிற எல்லாரும் சேர்ந்து சூடுபோட போடலாம்னு முடிவெடுத்து ஒரு நாள் ஒரு இடம் ஒரு நேரம் குறிச்சா அதில நானும் ஒருத்தனா பங்கெடுக்க முடியும் அவ்வளவுதான்.

 

அடுத்தவன் போயிட்டு வந்ததுக்கு பேராசிரியர் விளக்கம் சொல்ற மாதிரி யார் யாரோ சூடு போட நான் ஏற்பாடு பண்ற அளவுக்கு என்னைய நான் இன்னும் வளர்த்துக்கல. ஆமா தலைவரே பேச்சுவார்த்தை நல்லாயிருக்கு. மேனனோட பயணம் ஓ.கே. பிரணாப் முகர்ஜியோட பயணம் ஓ.கே.ன்னு எல்லாம் சொல்றீங்களே. அப்ப நெஜமாலுமே இலங்கை அரசாங்கம் செய்றதெல்லாம் சரிதானுங்களா.

 

எனக்கு ஒரு சந்தேகம் முல்லைத்தீவு பகுதில 2 லட்சம் தமிழர்கள் மாட்டீட்டாங்க. இலங்கை அரசு இந்திய அரசு இவங்கல்லாம் சொல்ற மாதிரி புலிகள் தீவிரவாதிகள்னே வச்சிக்கிடுவோம். 2 லட்சம் தமிழர்கள் புலிகள் கிட்ட மாட்டி முல்லை தீவுல இருக்காங்கன்னே வச்சுக்குவோம். இப்ப இலங்கை அரசாங்கம் சொல்லுது மக்கள் வெளியே வராவிட்டால் அவர்கள் உயிருக்கு இலங்கை அரசு பொறுப்பேற்காதுன்னு. இது எந்த வகைல நியாயம்? விடுதலைப் புலிகளே தீவிரவாதிகளாச்சே. அவங்க மக்களை விடமாட்டாங்கதான அப்புறம் எப்படி அந்த மக்கள் வெளியே வருவாங்க. வெளியே வந்தா நீங்க சொல்ற மாதிரி புலிகள் கொல்லுவாங்க (ஏன்னா அவங்க தீவிரவாதிகள்) வரலைன்னா நீங்க குண்டு போடுவீங்க. அப்ப அந்த மக்களுக்கு வாழ்வதற்கு உரிமை உண்டா? இல்லையா?

 

ஆமா போனா மாசம் மும்பைல தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலை புடிச்சப்ப மக்களே நீங்களே வெளியே வந்திருங்க. இல்லைன்னா உங்க உயிருக்கு நாங்க பாதுகாப்பு தரமுடியாதுன்னு சொல்லி உங்க மத்திய அரசாங்கம் குண்டு போட்டிருந்தா மூனுநாள் யுத்தம் நடந்தே இருக்காதே. ஏன் குண்டு போடுல? அங்கிருந்தவனெல்லாம் முதலாளிகள். வெளிநாட்டுக்காரர்கள். ஏன்? என்ன காரணத்துனால உங்க மத்திய அரசு தாஜ் ஹோட்டல் மேல குண்டு போடல? ஒருவேளை இழிச்சவாய தமிழ்ப் பயலுக மட்டும் உள்ளார இருந்திருந்தா குண்டு போட்டிருப்பீங்க. ஏன்னா கேக்க நாதியத்த கேணப்பயலுகதான தமிழ் பயலுக.

 

நீங்க சொல்லுங்க தலைவரே. மும்பைல தீவிரவாதிகள் மேல இந்திய இராணுவம் குண்டு போடாதது சரின்னா. முல்லைத்தீவுல புலிகள் மீது குண்டு போடாம இருக்கறதுதானே சரி. முல்லைத்தீவுல குண்டு போடறது சரின்னா? இந்திய ராணுவம் தாஜ் ஹோட்டல் மேல குண்டு போட்டு ஒரேநாள்ள தீவிரவாதிகள அழிச்சிருக்கலாம்ல. அது தான சரி. ஒரு பதிலச் சொல்லுங்க தலைவரே.

 

இதையெல்லாம் ஏன் காங்கிரஸ்காரங்கிட்ட கேக்காம உங்ககிட்ட கேக்கறோம் தெரியுங்களா தலைவரே! அவனெல்லம் ஒரு ஆளு மயிருனு நமக்கு சமானமா ஒக்கார வெச்சுப் பேச நானொன்னும் மானங்கெட்ட திமுககாரனில்லீங்க தலைவரே.

நம்ம வெளியீட்டு கழக செயலாளர் திருச்சி செல்வேந்திரன் அய்யா முன்ன ஒருதடவை கூட்டத்துல பேசும்போது சொன்னாரு “காங்கிரஸ்காரன திட்டாதீங்கய்ய! அவன் ஒரு கோயில் மாடு. அத பாத்தீங்கன்னா கொஞ்ச நேரம் குப்ப தொட்டீல வாய வெக்கும். அப்பறம் மார்கெட்டுக்கு வரும். கொஞ்ச நேரம் மார்கெட்டுலயும் வாய வெக்கும். யாரும் அத திட்டமாட்டங்க. ஏன்ன அது கோயில் மாடு. காங்கிரஸ்காரனும் அப்பிடிதான். கொஞ்ச நாள் திமுக கூட இருப்பான். கொஞ்ச நாள் அதிமுக கூட இருப்பான். அவன திட்டாதீங்கய்ய பாவம் அவன் ஒரு கோயில் மாடு” அதனாலதான் அவன நாங்க திட்டல தலைவரே. அப்பறம் மார்கெட் யாரு குப்ப தொட்டி யாருன்னு கேட்டு சொல்லுங்களே. ஏன்னா செல்வேந்திரன் அய்யா நாங்க கேட்டா இப்ப சொல்ல மாட்டாரு.

 

எந்த மொழி பேசி உங்க வாழ்க்கையை துவங்கினீங்களோ, எந்த மொழி உங்களுக்கு இந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொடுத்ததோ, எந்த மொழிபேசுகிற மக்கள் உங்களை உலக தலைவர்ன்னு கொண்டாடுகிறாங்களோ, அந்த மொழி பேசுகிற ஒரேயொரு காரணத்துக்காக ஒதுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்டு, இருக்க இடம், குடிக்க நீர் ஏதுமின்றி அனாதைகளாக அலையுறாங்களே…… நம்ம மொழி பேசுகிற அந்த மக்கள் உங்கள் சமகாலத்தில் சமாதியாக்கப்பட்டால் அதை அப்படியே சரித்திரம் பதிவு செய்யுமே என்ன செய்ய போகிறீங்க?

 

தயவு செய்து அவங்களுக்கும் உங்க இதயத்துல இடம் இருக்குதுன்னு மட்டும் சொல்லீறாதீங்க. ஏன்னா தேர்தல்ல நிக்க கூட இடங்குடுக்காதவங்களுக்கு எல்லாம் நீங்க இதயத்திலதான் இடம் கொடுப்பீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா ஈழத்துல நம்ம மக்கள் உட்கார, நிற்க, நடக்க சுதந்திரமாக வாழ, தன்னைத்தானே ஆள ஒரு நிலத்தை கேக்கறாங்க. அதுக்காக போராடறாங்க. அதுனால தயுவு செஞ்சு அவங்களுக்கு உங்க இதயத்துல இடங்குடுத்து கேவலப்படுத்தீறாதீங்க தலைவரே

 

கடைசி ஒன்னே ஒன்னு அந்த ஒன்னுக்கு மேட்டருதான் தலைவரே! இரண்டு, மூணு நாளா புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பறதில்ல. அதனால ராத்திரியில அவ ஒன்னுக்கும் போறதில்ல. ஒரு வழியா பிரச்சனை எனக்கு முடிஞ்சிபோச்சுது. நீங்களும் பேசாம இன்னைல்ல இருந்து மொதலமைச்சரா போறதில்லைன்னு ஒரு முடிவு பண்ணுங்க. ஒரு வேள உங்க முதுகுவலி போனாலும் போயிரும்

 

இப்படிக்கு
இரா.செந்தில்குமார்

 

பின் குறிப்பு: ஒரு மூத்த தலைவருடைய உடல்நலக் குறைவை மோசமாக விமர்சனம் செய்வது நாகரிகம் இல்லைதான் இருந்தாலும் என் கோபம் உண்மையானதெனில் அதில் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. நாகரிகமாக நான் கோபப்பட்டால் அதில் உண்மை இருக்க முடியாது. இந்த வார்த்தைகள் உங்களுக்கு வலிக்கும்தான் இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாய் உங்களையே நம்பி இருந்த என் போன்றவர்களின் இதயத்திலிருக்கும் வலியோடு ஒப்பிட்டால் உங்கள் வலி ஒரு பொருட்டல்ல…. ஓட்டுப்போட எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ திட்டவும் அதே உரிமை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

 

 இரா.செந்தில்குமார் (covaibhai@gmail.com

  நன்றி-கீற்று.காம்

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க) – ஆதவன் தீட்சண்யா

Posted in ஆதவன் தீட்சண்யா, இந்தியா டுடே, இந்து பாசிச வெறி, விமர்சனங்கள், SOCIAL ISSUES on திசெம்பர் 16, 2008 by குட்டகொழப்பி

அஞ்சலி என்ற பெயரில் ‘இந்தியா டுடே’ கீழ்க்கண்ட கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறது

அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008

மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.

அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.

அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.

அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.

-எஸ். பி

………………………………………………………………………………………………………..

இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.

V.P.Singh இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.

என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.

( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.

மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.

எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.

ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா…? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்…. இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை… ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.

எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?

மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.

இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.

ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.

மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்…. கொலைகள்… கொள்ளைகள்… பாலியல் வன்கொடுமைகள்…. காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.

மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.

இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ… வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.


ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)

நன்றி-கீற்று.காம்

THE VICTORY AGAINST BRAHMINIC FASCISM

Posted in இந்து பாசிச வெறி, தீண்டாமை, SOCIAL ISSUES with tags , , , , , on ஓகஸ்ட் 25, 2008 by குட்டகொழப்பி

 

                      Ever you heard a society prohibited to recite poems in their own language at their own soil? Yes it happens only in Tamilnadu.Dikshidars of Chidambaram Lord Nataraja temple made it and the victim is Tamil. They are against to recite Devaaram, Thiruvaasagam (The popular Tamil devotional poem penned by the saivaites like Appar, Sundarar and Maanikavaasagar) at Thiruchitrambala Sabha near Sanctum sanctorum.

 

 

Who are Dikshidars

            Dikshidars of Chidambaram belongs to subsect of Iyer/Brahmin called Choliyal, who are considered to be one of the oldest Pancha-Dravida Brahmins. The term “Pancha- Dravida” Brahmins itself of probably 19th century origin and about them no documentation even in the sangam literature .The classification term choliyal may be due to their prescence in Chola territories.

               “Thillai moovaaiyiram” (The three thousand persons of Chidambaram) gives the belief that three thousand Brahmins including Lord Shiva were asked to come to Chidambaram by early chola kings to take up positions of priests in the temple of Shiva in Chidambaram.There is no similarity between these Brahmins and the Brahmins who are living other places of Tamilnadu, their appearance also entirely different from rest of Brahmins. These people keeps  “purve Sikha” at the right side of their fore head as like as Namboodries of Kerala.They pray in Sanskrit during pooja but rest of times their conversation will be in Tamil only.

           There are many contradictions over their marriage, they don’t marry with other Brahmins of Tamil nadu but only among them. Because of their lack in population

and to retain their hereditary assets they  marry their brother or sister in laws, henceforth they are suffering with many health problems including genetic disorders, some of them became lunatic owing to their marriage between much closed blood relations.

              They are called as “Thillaip pani ellai thaandaathu” (they don’t do anything out of their premises) but due to their activities they have crossed all their limits hence government of Tamil Nadu issued GO to stop their rogue activities. People of Tamil nadu evidents that Dikshidars are using the temple porch as their nightclub to play cards and to drink, Prime tower as their place for prostitution, converted temple pond as the secrete place to hide murdered bodies. Recently due to their internal politics they have murdered co-Dikshidar and the case registered in High court, Chennai.

 

             Few centuries ago Nandan a saivaite devotee from the lower caste entered via south tower of the temple to sing Tamil devotional song but dikshidars did not allow him to go and burnt alive, they have also closed south entrance and keeping it as the icon of untouchable wall, even today it remains the same.

 

              Seven years ago Arumugasamy Odhuvar (An 80 years old saivaite devotee used to sing Tamil devotional songs), tried to recite Tamil devotional hymns at thiruchitrambala sabha(also Chitsabha) opposite to “Sanctum sanctorum” but he was assaulted and his hand cracked  viciously by dikshidars. Even then he filed a case against priests, but the court did not favor him also rejected the request of singing Tamil devotional hymns near Sanctum sanctorum. The priests directed that samy could sing at the temple premises but not at chitsabha.

 

              Arumugasamy did not slack determination and was continuously tried to perform Tamil hymns legitimately. After his innumerable efforts, eventually (four years ago) he approached Mr.Raju an advocate from Human Rights Protection Committee (HRPC) Cuddalore district, Tamil nadu. HRPC is a sociable movement of People’s Art and Literary Movement (PALA), a State Organizing committee (SOC) of Marxist-Leninist Communist Party. The main schema of PALA-HRPC is to fight against Brahminic Fascism and Recolonization, the major threatening to new democratic India, they have accepted Arumugasamy’s request because its not mere the case against human rights but the Brahminic Fascism of untouchability and language discrimination.

            Due to non-stop legal approaches of comrades from HRPC and PALA, high court Chennai announced that it all depends on getting permission from Hindu Religious and Charitable endowments (HR-CE) department of Tamil Nadu, but Dikshidars told that the temple wholly belongs to them and HR-CE has no Locus standi  there.

             On 29th February of this year secretary HR&CE department, Tamilnadu ordered that Arumugasamy or any Tamil aficionado irrespective of castes could narrate tamil hymns at Chitsabha after main pooja. On the very next day, with an order of HR&CE, comrades from HRPC, PALA – its comrades-in-hand and Viduthalai Chirutahigal Katchi (VCK) tried to enter into the temple but only 25 members were allowed into the temple by SP but Dikshidars opposed the entry vehemently and attacked some of the comrades and senior police personnel.

               Among the bewilderments, Arumugaasmy and co entered near Chitsabha, meanwhile around 50 dikshidars came with oil and ghee in their body and also started to decant oil on floor and closed all the doors inside the temple to make confusions among the devotees. One of them attacked Arumugasamy violently and broke his spectacles as a bonafide rowdy. Even though Arumugasamy entered Chitasbha and started to recite Tamil devotional hymns, they have started to make noise so that they have prevented the sound of Tamil hymns to enter into the Sanctum sanctorum, some closed Shiva’s big ear against listening the sound. Arumugasamy and comrades not given a sufficient time to narrate Tamil hymns but it made them as their stepping stone against Brahminic Fascism.

                 Chidambaram town police registered a case against dikshidars for attacking policemen and then arrested 10 among them for assaulting policemen but not for their action against HR&CE order.

                Meanwhile dikshidars believed that the visit of Arumugasamy Odhuvar and his supporters has polluted the shrine and started to wash Chitsabha and Sanctum sanctorum, a large number of priests have performed unusual cleansing pooja soon after they emerged out of the temple. The subtly poisoned content of Brahmin owned presses like Hindu, Indian Express, Thuglak, Dinamalar, Kalki, and Dinamani spewed venom and stand testimony to the long arm of Brahmin oligarchy to influence and formed public opinion, played a regressive role in confusing public.

On the same day evening comrades tried to enter the temple to recite, none of them allowed to enter by police and made a lathi charge, finally they arrested Arumugasamy and some 34 comrades from HRPC and PALA.The issue spread nook and corners of Tamilnadu and public gnashed their teeth for dikshidars stringent action. Political leaders like Mr.Marudhaiyan from PALA, Thol.Thirumaavalavan from VCK, Dr.Ramadoss from PMK raised their condemned voice against dikshidars. The very next day government of Tamil nadu warned dikshidars, the custodians of Nataraja temple, legal action if they prevented anyone from reciting near Sanctum sanctorum of the temple. Because of GO the public and comrades from HRPC and PALA tried to recite, they anticipated prevention from priests but they welcomed with garlands. Its all because of their panic about activist’s and public’s appeal to reassign all authority of governing temple under the control of HR&CE department.

 

          Next day Arumugasamy entered the temple and the mass of dikshidars greeted with thiruneeru and garlands but he refused their greetings and told them they don’t need their warming, only wanted to worship lord and to recite Tamil hymns at Chitsabha and showed him as a self –esteemed person.

 

 

Whatever the consequences will be, the people of Tamilnadu want,

 

·       To transfer all the authority of governing temple into HR&CE department Tamilnadu, because all major remunerable temples of TN including Madurai Meenakshi amman temple, Palani murugan temple and Thiruvannaamalai Shiva temple are under the control of HR&CE.

 

·       To demolish the wall approaching towards south entrance as a symbol of Nandan’s untouchable wall.

 

·       To take stringent action against the murder of co-dikshidars and for the theft of temple jewels.

யாழன் ஆதி கவிதை

Posted in கவிதைகள், தலித் முரசு, SOCIAL ISSUES with tags , on ஓகஸ்ட் 25, 2008 by குட்டகொழப்பி

 

 

ஒற்றைக் கண்ணீர்த் துளியென
இரவின் மீதொரு துயரம்

உயர்ந்த கம்பங்களில்
தெறிக்கின்றது வெளிச்சம்

தார்ச்சாலையின் நீண்ட தனிமையில்
கொதிக்கிறது துயில்

இருளடைந்த வயிற்றுக்குள்
நிரம்பியிருக்கின்றன கைகள்

நூலறுந்த பகல்பட்டம் சிக்கிய
இரவின் துன்ப வனத்தில்
எழும்புகிறது பாடக்கனவு

கால்மடக்கி உடல்குறுக்கி
தலைதொங்கி காலத்தின் கைகளில்
பதுங்குகிறது உழைப்புத் தளிர்

இரக்கமற்ற சுரண்டலின்
குன்றாத வெப்பத்தில்
கனறுகிறது துரத்தப்பட்ட சுவாசக் காற்று

உழைத்துப் பசித்த அயர்வில்
தளும்பி நிற்கிறது
சாத்திய இமைகளோடு உயிர் எழுத்து

வெட்கமேயில்லாமல்
இழுத்துப் போர்த்திக் கொண்டு
மல்லாந்து தூங்குகிறது தேசம்

 

   ……………….நன்றி : தலித் முரசு 

மீண்டெழுவோம்-“யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க”???

Posted in தலித் முரசு, தீண்டாமை with tags , , on ஏப்ரல் 13, 2008 by குட்டகொழப்பி

யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க???

என்று சொல்பவர்கள் இதைப் படித்த பிறகாவது திருந்துவார்களா ????

1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.
– இந்தியன் எக்ஸ்பிரஸ் – 2.2.2008

2. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தலித்துக்கு சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தலித்துகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தலித்துகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தலித்துகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-இந்தியன் எக்ஸ்பிரஸ் – 25.1.2008,

3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தலித் சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்ட உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
– இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008

4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.
– தி இந்து – 10.2.2008

5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.
– இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008

6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும்
பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.
– தினமணி -14.2.2008

7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.
– இந்தியன் எக்ஸ்பிரஸ் – 12.1.08

8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், ‘தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க் கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.

‘எவிடன்ஸ்’ என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், “அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை” என்கிறார்.
– தி வீக் – 13.1.2008.

9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.
– தி இந்து – 4.2.2008

தலித் முரசு…………..

அமைதியைக் குலைப்போம் !

Posted in இந்து பாசிச வெறி, கவிதைகள் on ஏப்ரல் 9, 2008 by குட்டகொழப்பி

அமைதியைக் குலைப்போம் !
 
கழுகுகள்  வல்லூறுகள்
மென்மையான
புறாக்களின் சிறகுகளை
பிய்த்தெரிகின்றன
அதனால்
பறவைகளின் ராஜ்ஜீயத்தில்
அமைதி…… 
 
சுராக்கள்  திமிங்கிலங்கள் 
கெண்டைக் கெழுத்திகளை
வால் துடிக்கத் துடிக்க
விழுங்குகின்றன
அதனால்
கடலுக்குள் அமைதி….. 
 
பதுங்கி ஒதுங்கி வாழும்
மான், முயல்
இவைகளின் எலும்புகள் தான்
இரைந்து கிடக்கின்றன
கடைவாய்ப் பற்களில்
ரத்தம் வழிய
சிங்கம், புலிகள்
அதனால்
காட்டில் அமைதி………
 
அடிமைகள்
அடங்கிக் கிடப்பதால்
ஆண்டை களின் கெக்கலிப்பு
அதனால்
அந்தப்புரத்திலும் அமைதி……
  
அமைதியாய் இருக்க
அறிவுறுத்துகிறார்கள்
புரிந்துவிட்டது!
அமைதியின் அர்த்தம்
அதனால்
அமைதியைக் குலைப்போம்  !!!!! 

                                         ……………முன்னவன் 

தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ் !

Posted in இந்து பாசிச வெறி on மார்ச் 27, 2008 by குட்டகொழப்பி

silent-ones.jpg

 

தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ் !
வெற்றி விழா…

சிறை சென்ற‌ போராளிகளுக்கு பாராட்டு விழா…

 
பொதுக்கூட்டம்
நாள்: 29. 3. 2008 சனி மாலை 5 மணி
இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்.


தலைமை:
வ‌ழ‌க்குரைஞர். சி.ராஜு,
மாநில‌ ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

 

வரவேற்புரை:
வ‌ழ‌க்குரைஞ‌ர். திருமார்ப‌ன்
வ‌ழ‌க்குரைஞ‌ர் அணி வி.சி.க‌.
முன்னிலை:
சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
குமுடிமூலை.
திரு. V.V சுவாமி நாதன்,வ‌ழ‌க்குரைஞர்,
முன்னாள் இந்து அற‌நிலைய‌த்துறை அமைச்ச‌ர்,
சித‌ம்ப‌ர‌ம்.
திரு. சந்திரபாண்டியன்
முன்னாள் ந‌க‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர்,பா.ம‌.க‌,
சித‌ம்ப‌ர‌ம்.

உரையாற்றுவோர்:

வ‌ழ‌க்குரைஞர் துரை. சந்திரசேகரன்,

துணைப்பொதுச்செய‌லாள‌ர் தி.க‌ 

பேரா இராச‌.குழந்தைவேலனார்,
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்.
தோழ‌ர் து.பாலு
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி,
க‌ட‌லூர்.
தோழ‌ர் அனந்த குமார்,
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌ணி,
பாண்டிச்சேரி.
தோழ‌ர் அம்பேத்க‌ர்
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்,
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி,
விழுப்புர‌ம் மாவ‌ட்ட‌ம்.
வ‌ழ‌க்குரைஞர் வாஞ்சிநாத‌ன்
மாநில துணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
ம‌துரை.
திரு. இரா.காவிய‌ச்செல்வ‌ன்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.
சிற‌ப்புரை

தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.

திரு.சிந்தனைச்செல்வன்.
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.
பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.


ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி
மாலை 5 ம‌ணிக்கு ந‌டை பெறும்.
ந‌ன்றியுரை:
வ‌ழ‌க்குரைஞர்.சி.செந்தில்
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
சித‌ம்ப‌ர‌ம்.

 
ப‌ங்கேற்போர்: 


ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்

விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
திராவிட‌ர் க‌ழ‌க‌ம்.
நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு: 

மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்

க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

இந்தியாவின் “பொது எதிரிகள்”

Posted in இந்து பாசிச வெறி on ஜனவரி 30, 2008 by குட்டகொழப்பி

kovai_violance.jpg

கோவையில் நடைபெற்ற கலவரத்தின்போது, “கொடூரமான தாக்குதலிலும் சாகாமல் ஒரு ஆள் மட்டும் துடித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் ஓடினார். பக்கத்தில் இருந்த போலிஸ் வாகனம் ஒன்றில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்துக் கொண்டு வந்து அந்த ஆள் மீது ஊற்றினார். அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து அதிர்ச்சியுடன் பார்க்க… யாரோ ஒருவன் ஓடிவந்து தீக்குச்சியைச் சுண்டிப் போட்டான். அவ்வளவுதான்… அந்த இளைஞர் தகதகவென்று எரியத் தொடங்கினார். ஒரு டாக்டர் தீயை அணைக்க முயன்றார். உடனே சுற்றி நின்றவர்கள் அந்த டாக்டரைப் பார்த்து சத்தம் போட -வேறு வழி தெரியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து டாக்டர் பின்வாங்கி ஓட வேண்டியதாகிவிட்டது.”

‘ஜுனியர் விகடன்’, டிசம்பர் 7, 1997

கோயம்புத்தூரில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்துக்கள் நடத்திய வெறியாட்டத்தின் விளைவாக 19 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அது ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து கோவை மக்கள் மீண்டு வரும் முன் 1998 பிப்ரவரி 14 அன்று கோவை நகரின் பல இடங்களில் குண்டு வெடித்தது. தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு இந்து அமைப்புகள் இங்கு வலுவாக வளர்ந்திருப்பதன் பின்னணியும், 1997 கலவரத்திற்கான பின்னணியும் -இந்து அமைப்புகளின் திட்டமிட்ட சதி வலையை அம்பலப்படுத்துகின்றன.

“வியாபாரத்திற்காக இங்கு வந்த மார்வாடிகள், ஆரம்ப காலத்தில் வருவதும் போவதுமாக மட்டுமே இருந்தனர். அவர்கள் 70களுக்குப் பிறகு இங்கேயே நிரந்தரமாக இடம் வாங்கி குடியிருக்கத் தொடங்கினர். அதன் பிறகு அவர்கள் பல்வேறு தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 80களில் ஈழப் பிரச்சனையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், தமிழ் -தமிழர் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இது என்றாவது தங்களுக்கு எதிராக செல்லக் கூடும் என்று மார்வாடிகள் அஞ்சினர். அதன் காரணமாக தங்களின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து இந்து அமைப்புகளை வளர்த்துவிட்டனர். இதற்கிடையில் முஸ்லிம்களும் பெருமளவில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால், வணிக ரீதியான போட்டிகளும் இருந்தன. இது, சிறு சிறு சம்பவங்களாக வெளிப்பட்டன. மார்வாடிகள் திட்டமிட்டு அனைத்துத் தரப்பினரையும் இந்து அமைப்புகளுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக தலித்துகளை அதிகம் ஈடுபடுத்தினர். இப்படி இந்து என்ற அடிப்படையில் ஒன்று திரள்வது, முஸ்லிம்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனால் அவர்களும் அமைப்பு ரீதியாக அணி திரளத் தயாராக இருந்திருக்கலாம்” என்கிறார் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன்.

1988 முதல் இரு தரப்பிலும் தொடர்ந்து மதப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால், இந்த வழக்குகளில் யாரும் தண்டிக்கப்படவில்லை. இதன் உச்சக்கட்டம்தான் 1997 நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலவரங்கள். முதலில் இது தனி நபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தது. ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருந்தது போல, 1997இல் அது கலவரமாக வெடித்தது. காவல் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்ததால், மதவெறி கும்பல் தாங்கள் நினைத்ததை சாதித்தது.

கலவரம், அதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு என இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த இரண்டிற்கும் நடந்த விசாரணைகள், வழக்கு நடத்தப்பட்ட விதம், தீர்ப்பு அனைத்துமே முற்றிலும் நேரெதிர் நிலைகளில் இருந்தன. கலவரத்தில் 19 பேர் கொல்லப்பட்டதற்காக நடந்த வழக்குகளில், இன்று வரை ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. கீழ் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட அர்ஜுன் சம்பத் போன்ற இந்து பயங்கரவாதிகளும் உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். கலவரத்திற்கு மூளையாக இருந்து சதித்திட்டம் தீட்டிய ராம கோபாலன் இன்று வரை சுதந்திரமாக அதே கோவை நகரில் இந்து வெறியைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 168 பேரில் ஒருவருக்குகூட வழக்கு நடந்த ஒன்பதரை ஆண்டு காலமாகப் பிணை வழங்கப்படவில்லை. முக்கியக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருந்த மதானி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், அவரது சிகிச்சைக்காக பிணை வழங்குவதற்கும்கூட அரசு அனுமதி மறுத்தது. இறுதியில் மதானி உட்பட 8 பேர் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய அதே நீதிமன்றம், அந்த நிலையில்கூட அவர்களை விடுவிக்க மறுத்து, விரும்பினால் அவர்கள் பிணை மனு செய்து, பிணையில் வெளியே செல்லலாம் என்றது. அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அரசும் நீதித்துறையும் ஒரு சார்பாக அதுவும் மதச்சார்பாக நின்றது.

“கலவரத்தை முன்னின்று நடத்திய உதவி ஆணையர் மாசாண மூர்த்தி, இன்று சென்னையில் உதவி ஆணையராக இருக்கிறார். கலவரத்தில் ஈடுபட்ட எந்த காவல்துறை அதிகாரி மீதும் துறை சார்ந்த நடவடிக்கைகூட எடுக்கப்படவில்லை. கலவரத்திற்குப் பின்னணியில் இருந்த சதியில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர் ராம. கோபாலன். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களும் எளிதில் விடுதலையாகும் வண்ணமே வழக்கின் அமைப்பு இருந்தது. “அரசு, காவல் துறை என மொத்தமும் இரு கண்ணோட்டத்துடனேயே செயல்படுகிறது” என்கிறார், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா.

கலவரக்காரர்களுடன் காவல் துறையின் திட்டமிட்ட ஒத்துழைப்பு, தொடக்கம் முதலே இருந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கையே சரிவர பதிவு செய்யப்படவில்லை. 19 பேர் கொல்லப்பட்டதற்கு ஒருவர்கூட தண்டிக்கப்படாத அளவிலேயே காவல் துறை வழக்கை அமைத்த விதம் இருந்தது. நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரண கமிஷனின் அறிக்கையில்கூட, குற்றவாளிகள் பற்றி தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தைப் பற்றி சரியான வழிகாட்டுதலை அளித்தது ஒன்றுதான் அவ்வறிக்கை செய்த ஒரே நன்மை.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முஸ்லிம் அமைப்புகளும் “ஜமாத்”களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். கலவரத்தில் நேரடியாக ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டே புகார் அளித்தனர். புதுதில்லியில் உள்ள சிறுபான்மை நலத்துறை ஆணையம் வரை சென்று மனு அளித்தனர். அதற்கு பலன் ஏற்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்ட நேரத்தில், 1998 பிப்ரவரி 14 அன்று கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

 இதனால் மீண்டும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை குற்றவாளிகளாகப் பார்க்கும் சூழல் ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்து அமைப்புகள், முஸ்லிம்களுக்கு எதிராக மிக வேகமான பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். விசாரøணையே இன்றி பல ஆண்டு காலம் சிறையில் வைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் குடும்பங்களும் சிதைந்தன.

“எங்கள் குடும்பம் இந்த கோவையில் ஓரளவு நல்ல புகழ் வாய்ந்த குடும்பம். எனது அப்பா, பெரியப்பா எல்லாருமே ஜமாத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். 2000இல் நடந்த ஒரு பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காவல் துறையினர் திடீரென என்னை கைது செய்தனர். காவல் துறையின் பிடியில் ஏராளமான சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்தேன். என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போட்டனர். 1998 குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களோடு என்னை சிறையில் வைத்தனர். அதில் பெரும்பாலானவர்கள் மிகவும் வயதில் குறைந்த இளைஞர்கள். இவர்கள் கைது செய்யப்பட்டதால் இவர்கள் குடும்பம் பட்ட துன்பங்களை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது என் மனதை மிகவும் பாதித்தது. எனது குடும்பம் பெரிய குடும்பம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் மனைவி, பிள்ளைகளை -என் குடும்பத்தினர், சகோதரர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்து, நான் வெளியே வந்த உடன் அதையே முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்னாலான உதவிகளை செய்து வருகிறேன்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்துள்ளது. இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் ஒரு விதத் தொடர்பும் இல்லை என்பதை வழக்கறிஞர்கள் விசாரணையின்போது நிரூபித்துள்ளனர்.

குண்டு வெடித்த அன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரையும் காவல் துறையினரிடம் அன்றே ஒப்படைத்திருக்கின்றனர். ஆனால் காவல் துறைஇவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16.2.98 அன்று கைது செய்ததாகக் காட்டியிருக்கிறது. இந்த 38 பேர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வீ.என். ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர். அதோடு இவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்த அனைவரும் வி.என். ராஜனின் உறவினர்கள். இவை அனைத்தையும் எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முஸ்லிம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது நீதிமன்றம். ஆனால் அதே வேளை, கோவை கலவரத்தின்போது காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு அல்லாமல் சுடப்பட்டு காயமடைந்த முஸ்தபா என்பவர், தான் எங்கு வந்து வேண்டுமானாலும் சாட்சியம் அளிக்கத் தயார் என்று கூறியும் இன்று வரை அவர் எந்த வழக்கு விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை.

1997 நவம்பர் 29, 30 ஆகிய இரு நாட்களும் பெரும் கலவரம் நடந்ததன் விளைவாக டிசம்பர் 1 அன்று மத்திய அரசு காவல் துறையும், ராணுவமும் கோவையில் வந்து இறங்கின. நகரம் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்ததாக அறிவிக்கப்பட்டது. வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கலவரம் எதுவும் இல்லை எனவும் நகரம், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன. இதனால் சற்று தெம்படைந்த முஸ்தபாவும் அவரது நண்பர் உபைதூர் ரகுமானும் கோட்டை மேடு பகுதியில் உள்ள உபைதூர் ரகுமானின் சகோதரி வீட்டிற்கு கிளம்பினர்.

“டிசம்பர் 1 அன்று இரவு 7.30 மணி அளவில் நானும் எனது நண்பர் உபைதூர் ரகுமானும் கோட்டை மேடு நோக்கிச் சென்றோம். உக்கடம் அருகில் சென்றபோது நாங்கள் சென்ற யமஹா வண்டியை காவல் துறையினர் வழிமறித்தனர். அச்சமயம் சாலையில் வண்டிகள் போக்குவரத்தும் இருக்கத்தான் செய்தது. எங்களை நிறுத்திய காவல் துறையினர், எங்கள் பெயர் விவரங்களை கேட்டவாறே எங்களை தனியே அழைத்துச் சென்றனர்.

“சாலையிலிருந்து சற்றுத் தொலைவில் வந்தவுடன் காவலர்கள் என்னை கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். முதலில் அடித்துவிட்டு ஏதேனும் பொய் வழக்கு போடும் நோக்கில் தாக்குகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் நிலைவரைக்கும் என்னை அடித்த அவர்கள், ஒரு கட்டத்தில் துப்பாக்கி முனையில் இருக்கும் கத்தியால் என் தொண்டையில் குத்த முற்பட்டனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் தலையை முன்புறம் சாய்த்தேன். இதனால் கத்தி என் வாயில் பாய்ந்தது. என் பற்களை உடைத்துக் கொண்டும் நாக்கை கிழித்துக் கொண்டும் உள்ளே இறங்கியது. ஏற்கனவே அடி வாங்கியதில் மிகவும் சோர்ந்திருந்த நான் இதனால் ஏறத்தாழ மயக்க நிலைக்குச் சென்றேன். வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. எப்படியாவது உயிர் பிழைத்தால்போதுமென ஓட முனைந்தேன். அப்போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட திசையில் பார்த்தால், என்னுடன் வந்த என் நண்பர் உபைதூர் ரகுமான் நெற்றியில் குண்டு காயம் பட்டு தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் சென்று பெயரிட்டு அழைத்தேன். அதற்குள் என்னையும் சுட உத்தரவிடும் சத்தம் கேட்டது. இருந்த தெம்பையெல்லாம் திரட்டிக் கொண்டு ஓடத் தொடங்கினேன். ஓட ஓட என்னை நோக்கிச் சுட்டனர். முதல் 3 குண்டுகள் என் மீது படவில்லை. நான்காவது குண்டு என் முதுகைத் துளைத்து தோள் வழியாக வெளியேறியது” என்கிறார் முஸ்தபா.

ரத்தம் கொட்ட கொட்ட ஓடி, கோட்டை மேட்டில் உள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதியை அடைந்திருக்கிறார் அவர். அங்கு அவரை அப்பகுதியில் உள்ள டாக்டர் அஸ்லாம் என்பவரிடம் எடுத்துச் சென்றுள்ள னர். ஆனால் காயம் பலமாக இருப்பதால், உடனே ஏதேனும் பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாவிட்டால் ஆபத்து என்றிருக்கிறார் மருத்துவர். உடனே அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்திருக்கின்றனர். ஏற்கனவே அடிபட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட முஸ்லிம்கள் பலர் மருத்துவமனையிலேயே கொல்லப்பட்டிருந்தனர். அதனால் முஸ்தபாவையும் அங்கு கொண்டு சென்றால், அவருக்கு மட்டுமல்லாது அவருடன் செல்பவர்களுக்கும் ஆபத்து என உணர்ந்தனர். இதனால் மாவட்ட ஆட்சித் தலைவரை உடனே தொடர்பு கொண்டு செய்தியை தெரிவித்து பாதுகாப்பு கோரியுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவரும் உடனடியாக ஒரு ஜீப் நிறைய ராணுவத்தினரையும் ஆர்.டி.ஓ.வையும் அனுப்பியிருக்கிறார்.

அரசு மருத்துவமனைக்குச் சென்றால் பிரச்சினையாகும் என்பதை அவர்களிடம் தெரிவித்த முஸ்லிம் பெரியவர்கள், தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினர். அதன்படியே ஒரு தனியார் மருத்துவமனைக்கு முஸ்தபா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கும் காவல் துறையின் மிரட்டல் தொடர்ந்தது. இதனால் அங்கு பணிபுரியும் செவிலியர்களே வந்து “இங்கிருப்பது உங்களுக்கு பாதுகாப்பு இல்லை.

உடனே வெளியேறி விடுங்கள்” என்று சொன்னதால் மறுநாள் காலையில் சிகிச்சை முழுமையாக முடியாத நிலையிலும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“என்னைச் சுட்டவர் எஸ்.அய். சந்திரசேகர்தான். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். 1997லிருந்து இன்று வரை நான் காத்திருக்கிறேன். எந்த இடத்தில் வந்து சாட்சியம் சொல்லவும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவேயில்லை.

அன்று கோவை மாவட்ட காவல் துறை கமிஷனராக இருந்த நாஞ்சில் குமரன் டிசம்பர் 27 அன்று, அதாவது நிகழ்வு நடந்து 26 நாட்களுக்குப் பிறகு என்னை அழைத்து விசாரித்தார். என் உடல் காயங்களையும் பார்த்தார். என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆர்.டி.ஓவும் அவரிடம் சாட்சியம் அளித்தார். அனைத்தையும் கேட்ட கமிஷனர், ‘இவர்கள் என்ன மனிதர்களா மிருகங்களா… இப்படித் தாக்கியுள்ளனரே’ என்று வருந்தப்பட்டு கூறினார். அத்தோடு அது முடிந்தது” என்கிறார் முஸ்தபா.

“பின்னர் நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் முன்பு சாட்சியமளிக்க அழைத் தனர். நான் சென்று நடந்ததைச் சொன் னேன். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான ஆதாரங்களைக் காட்டினேன். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை மனு அனுப்பிருப்பதையும் கூறினேன். அனைத்தையும் கேட்ட நீதிபதி ஒரே வரியில், இவர் ஒரு “அய்விட்னஸ்’ -நேரடி சாட்சி என்றதோடு முடித்துக் கொண்டார். அதன் பிறகு எனக்கு எந்த நிவாரணமோ, என்னைச் சுட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையோ இல்லை.

“என்னைச் சுட்ட எஸ்.அய். சந்திரசேகருக்கு அண்ணா விருது கொடுக்கப் பட்டு, அவர் இன்று பதவி உயர்வு பெற்று நல்ல நிலையில் இருக்கிறார். நான் இன்றும் நீதிக்காக காத்திருக்கிறேன்” என்று வேதனையோடு குமுறுகிறார் முஸ்தபா.
அடுத்த இதழில் பார்ப்போம்

அநீதிமன்றம்?

கோவை குண்டுவெடிப்பு விசாரணையின் போது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறியபொழுது, காவல் துறையினரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி உதவினர். நீதிபதியோ, காவல் துறையினரின் இந்த அத்துமீறலைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார். குற்றவாளிகளைச் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்பொழுதும், சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை காவல் துறையினர் அடையாளம் காட்டியிருக்கின்றனர். காவல் துறையினரின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை, குற்றவாளிகள் நீதிமன்றத்தில் முறையிட்ட பிறகும்கூட, சாட்சிகளை காவல் துறையினர் தயார்படுத்துவதை நீதிபதி தடுக்கவில்லை.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, காவல் துறையினர் தயார்படுத்திக் கொண்டுவந்த பொய் சாட்சியங்கள் அல்லது “இந்து முன்னணி’யைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின்போது எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அந்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

………………………………நன்றி : தலித் முரசு 

ரத்தக் கறையத் தீக்க வந்த மனுசங்கடா…..

Posted in பாடல்கள் on ஜனவரி 24, 2008 by குட்டகொழப்பி

theeyil-veguthu.jpg 
மனுசங்கடா!!!
நாங்க மனுசங்கடா!!!
உன்னப் போல அவனப் போல
எட்டு சானு ஓசரமுள்ள
மனுசங்கடா!!!
நாங்க மனுசங்கடா!!!
எங்களோட முதுகுக்கு என்ன இரும்புலத்தோலா…….டாய்
உங்க இழுப்புக்கெல்லாம் பணியுரதே
எங்களின் கணக்கா…
                                              ( மனுசங்கடா)……….
சதையும் எலும்பும் நீங்க வெச்ச 
தீயில் வேவுது
உங்க சர்க்காரும் கோட்டும் அதுல
எண்ணைய ஊத்துது……..(2)
எதை எதையோ சலுகையின்னு 
அறிவிக்கிறீ ங்க(2)- நாங்க
எரியும் போது……..-நாங்க
எரியும் போது
எவன் மயிர புடுங்க போனீங்க???
                                                (மனுசங்கடா)………..  
ரத்தக் கறையத் தீக்க   வந்த மனுசங்கடா…..
பழங்க்கட்டையெல்லாம் வெட்டி எறியும் மனுசங்கடா….
நாங்க மனுசங்கடா…….
                                                   ………………………இன்குலாப்